மரண ராகம்
மரண ராகம் என் பெயர்…. ஹ்ம்ம்….. வேண்டாம்…. ஏன் வேண்டாம் என்று பிறகு தெரிந்து கொள்வீர்கள்…. நான் அந்த டீக் கடையில் நின்றிருந்தேன்…. என் கையில் தற்காலிகமாக ஒரு டீ கிளாஸ் முளைத்திருந்தது….. அப்பொழுதுதான் எதேச்சையாக அந்த டீக்கடையின் உள்ளே இருந்த டி.வியை கவனித்தேன்…. சன் செய்திகள் ஓடிக் கொண்டு இருந்தது…. அந்த டி.வியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்…. பட்டப்பகலில் கொடூரம்….. வளசரவாக்கம் ரயில் நிலையத்தில் கீர்த்தி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை…… கொலையாளி அரிவாளை தண்டவாளத்தில் வீசிவிட்டு சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓட்டம்…. என அந்த செய்தியில் ஒரு வீடியோ காட்சியினை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்…. அதில்…….. ஒருவன் அந்த இரயில்வே ஸ்டேசனில் இருக்கும் மதில் மேல் ஏறி ஓடிக் கொண்டிருந்தான்….. அவன் யாரென்று நினைக்கிறீர்கள்….. சாட்சாத்… அது நானேதான்……. இப்பொழுது புரிகிறதா ஏன் என் பெயரை உங்களிடம் சொல்லவில்லை என்று…… சரி பெயரை விடுங்கள்….. மீண்டும் அந்த செய்தியினை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்…. அந்த செய்தி வாசித்த பெண்ணையே நான் முறைத்து பார்த்துக் கொண்டிருக்க...