அவள் ஒரு தேவதை-1
அவள் ஒரு தேவதை எபிசோட்-1 அவள் ஒரு தேவதை.! கிழிந்த ஆடையும், பொழிவிழந்த முகமுமாய், சாலையோரம் படுத்திருக்கும் வயதானப் பெரியவருக்கு உணவளிக்கிறாள் பெண்ணொருத்தி அவளும் ஒரு தேவதைதான். விமானம் வாசிங்டென் நகரில் இருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டு ஒன்றரை நாள் முடிந்திருந்தது… காலை மணி ஆறு… இன்னும் சில மணி நேரங்களின் அந்த மேக்னீசியம் கலந்த அலுமினியப் பறவை தமிழ் மண்ணை முத்தமிட்டு சரணடைந்துவிடும்… ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த கார்திக்கின் கண்களில் கலக்கம் தெரிந்தது… இந்த விமானப் பயணம் எப்பொழுது முடியும் என்று சொல்வதுபோல் இருந்தது அவனது நடவடிக்கை… அடிக்கடி கையில் கட்டி இருந்த ரோலக்ஸ் வாட்சை பார்த்துக் கொண்டான்… அருகே அமர்ந்திருந்த அந்த பெருசு தனது லொட லொட பேச்சை நிறுத்திக் கொண்டு அயர்ந்து உறங்கி இருந்தார்… இரவு கார்திக்கின் மனநிலை புரியாமல்… வீட்டு பக்கத்துக்கடையில் முட்டையின் விலை அதிகரித்ததில் ஆரம்பித்து பார்லிமென்டில் நடக்கும் முறைகேட்டில் இருந்து,தான் தன் மகன் குடும்பத்தை வாசிங்டென்னில் ஒரு மாதம் இருந்து பார்த்துவிட்டு வருவது வரை சொல்லிவிட்டுத்த...