அவள் ஒரு தேவதை-4
அவளை விலைமகளின் மகள் என்றனர் ஒருநாள் இரவிற்கு விலை பேசினர் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பதை.. படித்தறிந்த சுற்றங்கள் அவளை தீண்டத் தயங்கினர்... வேசி மகளுக்கு வேலை இல்லை என்றனர் பலர் படுக்கை பகிர் வேலை பகிர்கின்றேன் என்றனர் சிலர் வேலையின்றி. கடனால் வீடும் பறிபோனது.. ஒரு வேளைச் சோற்றுக்கு வழியும் இல்லாமல் ஆனது.. மதிகெட்டு மானம் இழந்து வாழ்வதற்கு, வீழ்வதே மேல்.. என்றுணர்ந்து... தன் கூந்தல் மழித்து அழகிழந்து.. அனாதை இல்லத்தில் பல குழந்தைகளுக்குத்.. தாயாகிப் போனாளே... அவளும் ஒரு தேவதைதான்... எபிஸோட்-4 இரவு... மணி ஏழு... ஐடியல் ரெஸ்டாரண்ட்.. பிண்ணனியில் இளையராஜாவின் இசை ஒலித்துக் கொண்டிருக்க... வட்ட வடிவ டேபிளில் வாட்டர் க்ளாஸ் வைக்கப் பட்டிருக்க.. கார்த்திக்கின் முகம் அந்த மெல்லிய இருட்டிலும் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது... இருக்காதா பின்னே...? தான் ஆசைப்பட்டப் பெண்ணே இன்னும் சில நாட்களில் மனைவியாகப் போகிறாள் என்றால்.. கார்த்திக்கின் முகம் பிரகாசமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை... கடவுளே இது கனவாக இருந்துவிடக்கூடாது என சில நேரம் பயப்படவும...