ஜனனியாகிய நான்
கதிர் என்கிற கதிரவன் தனது பல்சரை எடுத்துக் கொண்டு மடிப்பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டின் காம்பவுன்ட் கேட்டைத் தாண்டி ரோட்டை அடைந்து மிதமான வேகத்தில் மிதந்து கொண்டிருந்தான்… இவன் எங்கே செல்கிறான் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு இவனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்…. கதிர் படித்தது பி.இ மெக்கானிக்கல் ஆனால் சென்னை டைடல் பார்க்கில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியராக பனி புரிகின்றான். அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஜனனியுடன் லவ்வீக வாழ்வில் விழுந்து மூழ்கிப் போய் மூச்சுத்தினறி…. அவளது அன்பில் அகமகிழ்ந்து… பாசத்தில் பஷ்பமாகிப் போனான்…. இப்பொழுது இவன் யாரை பார்க்கச் செல்கிறான் என்பதை தனியாகச் சொல்ல தேவை இல்லை என நினைக்கின்றேன். கதிரின் பல்சர் மிதமான வேகத்தில் மெயின் ரோட்டில் மிதந்து சென்று கொண்டிருக்க… ஐம்பது மீட்டர் தொலைவில் ஒரு பெண் கதிரை நோக்கி கையசைக்க… கதிர் யோசனையோடு தனது பைக்கை அவளருகே கொண்டு சென்று இயக்கத்தை நிறுத்திக் கொண்டான்…. அங்கே கதிரின் அத்தை பெண...