Posts

Showing posts with the label தொடர் கதை

அவள் ஒரு தேவதை - 9

அவள் ஒரு தேவதை - 9 க்ரிஸ்டி மேரி பொரியியல் கல்லூரி விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆம் அன்று அந்த கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் காம்பெடிசன், மற்ற கல்லூரியிலிருந்த மாணவர்களும் மாணவிகளும் கலந்து கொண்டிருந்தனர்.  "ஹேய்.. கவிதா.. இங்க பாரு... இந்த கூட்டத்தில ஒரு பையனை நாங்க செலெக்ட் பண்ணுவோம் நீ அவன்கிட்ட போய் ப்ரபோஸ் பன்னனும் இதுதான் இன்னைக்கு டேர்.." "ஹேய்.. இதெல்லாம் அநியாயம்....என்னால முடியாதுப்பா..." "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது... டேர்னா டேர்தான்..." அருகில் இருந்த அவளது தோழிகள் இரண்டு பேரும் கோரசாக சொல்ல.. "எதாவது பிரச்சனை ஆகிடப் போகுதுடி..." "அதெல்லம் ஒரு பிரச்சனையும் வராது.... நாங்க ஆள காட்ரோம் நீ ப்ரபோஸ் பன்ற அவ்ளோதான்.." என கராராகச் சொல்ல... நகத்தைக் கடித்துக் கொண்டு தனது தோழிகளை பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்த கவிதா ஆரஞ்சு நிற சல்வார் கம்மீஸ் அணிந்து கண்ணுக்கு ஸ்பெக்ஸ் அனிந்திருந்தாள்,இறுக்கிப் பிடித்தால் ஒடிந்துவிடும் மரக்கிளையைப் போல் மிகவும் ஒல்லியாக இருந்தாள். மாணவர்களும் மாணவிகளும் போட்டியில் பங்குபெருவதற்காக தங்கள...

அவள் ஒரு தேவதை - 8

அவள் ஒரு தேவதை - 8 கார்த்திக் பயத்துடனே வாசலை பார்த்துக் கொண்டு இருக்க... அவன் பயந்தது போலவே ஒருவன் பல்ஸர் பைக்கை மண்டபத்திற்குள் ஓட்டி வந்து பரேக் அடித்து நிற்க... "நோ..." என்று கத்தியபடி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் கார்த்திக்...  கார்த்திக்கின் சத்தம் கேட்டு அருகே உறங்கிக் கொண்டு இருந்த சிவாவும் எழுந்து கொண்டான்... "என்ன மாப்ள என்னாச்சு..."  ஒரு கணம் ஒன்றும் புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தவன் சிவாவின் குரல் கேட்டு திரும்பி "ஒன்னுமில்ல மச்சி.... ஒரு கெட்ட கனவு...." "என்ன கனவு...? அந்த ராஜேஷ் வந்துட்டானாக்கும்..." "ஆமாம் மச்சி..." "டேய்... டேய்... ஏன்டா பயந்து சாகுற... இன்னும் அஞ்சு மணி நேரத்துல உனக்கு மேரேஜ் ஆக போகுது... நியூசை பார்த்துட்டு இத்தனை நாள் வராதவன் இன்னைக்கு மட்டும் வந்திருவானா என்ன...?" "அப்படி இல்லை மச்சி... காலைல கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க...." "அடச்சே... இன்னுமாடா இதெல்லாம் நம்பிட்டு திரியிறீங்க... நீ எல்லாம் ஐடி ல வேலை செய்றேன்னு வெளில ச...

அவள் ஒரு தேவதை - 7

அவள் ஒரு தேவதை - 7 கவியின் நெஞ்சில் "ராஜேஷ்" என்று பச்சை குத்தப்பட்டு இருக்க.... அதைக் கண்டவன் இடிந்து போனான் என்றுதான் சொல்லவேண்டும்... அவன் இதயத்தை யாரோ இரும்பு கம்பி கொண்டு தாக்குவது போல் உணர்ந்தான்... அவனுக்கு பேச்சு வரவில்லை... ரொம்பவும் பலகீனமாய் உணர்ந்தான்.. ஆற்றாமையால் ஆத்திரம் வர  கத்தினான்... "லவ் பன்றேன்னா... லவ் பன்றேன்னு முன்னாடியே சொல்லித் தொலைய வேண்டியதானே.... உன் மேல அவ்வளவு லவ் அவ்வளவு கனவு,  அவ்வளவு ஆசை வளர்த்துக்கிட்டதுக்கு அப்பறம் வந்து வேற ஒருத்தன லவ் பன்றேன்னு சொல்றியேடி... என்னைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா..." "என்னை என்ன பன்ன சொல்றீங்க கார்த்திக்....? ரீசன் கேக்குற எல்லாத்துக்கும் என் நெஞ்சை திறந்து காட்டிட்டு இருக்க முடியுமா சொல்லுங்க...?" "உன்னை யாரு அதெல்லாம் காட்ட சொன்னது... அந்த ராஜேஷை கூட்டிட்டு போய் அப்பாகிட்ட இவரைத்தான் லவ் பன்றேன்... மேரேஜ்னு ஒன்னு நடந்தா அது ராஜேஷ் கூடத்தான்னு சொல்ல வேண்டியதானே..." என்றவனை இயலாமையுடன் பார்த்தாள் கவி கவியின் கண்களில் நீர்துளிகள் எட்டிப் பார்க்க...

அவள் ஒரு தேவதை-5

எபிசோட்-5​ பனிவிழும் இரவு... நனைந்தது நிலவு... இளங்குயில் இரண்டு.... இசைக்கின்ற பொழுது... பூப்பூக்கும் ராப்போது... பூங்காற்று... தூங்காது,,, வா.. வா.. வா... ​ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க.... அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தாள் கவிதா... தூரத்தில் வரும் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் கார்த்திக்.... ரோஸ் நிறச் சுடிதாரில் வெள்ளை நிற பூக்கள் வேலைபாடு செய்யப் பட்டிருக்க... தலை முடியை ஒற்றைப் பின்னலாக போட்டிருக்க... உயரத்திற்கு தகுந்த உடல்வாகுடன்... 23 வயது அழகுக் குழந்தை நடந்து வருவதைக் கண்டு கார்த்திக்கு மூச்சை அடைத்தது... தொடர்ந்து பார்த்தால் எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என பயந்தவனாக தன் பார்வையை தாழ்த்தி தலையை உழுக்கிக் கொண்டான்... டேபிளில் இருந்த க்ளாஸில் தண்ணீரை ஊற்றி குடித்துக் கொண்டான்... வந்தவள் அங்கேயும் இங்கேயும் பார்வையை அலையவிட்டு.... கார்த்திக்கை கண்டுபிடித்தாள்.. கார்த்திக் புத்தி பேதலித்தவன் போல் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்... வேகமாக வந்தமர்ந்தவளின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை.... "ரொம்ப நேரம் வெயிட் பன்ன...

அவள் ஒரு தேவதை-6

அவள் ஒரு தேவதை-6 எபிஸோட்-6 சுவற்றில் அறையப்பட்டிருந்த கடிகாரம் மணி பத்து என்றது. பெட்டில் படுத்திருந்த கவியின் கண்கள் மெல்ல மெல்ல திறக்க அந்த அறை மசமசப்பாக கண்களில் புலப்பட்டது. சில நொடிகளில் அந்த அறை தெளிவாகத் தெரிய.... தாம் எங்கு இருக்கிறோம் என்பது அங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் சொல்லாமல் சொல்லியது, ஒன்றும் புரியாமல் எழுந்தமர்ந்தவள் திரு திருவென விழித்துக் கொண்டிருந்தாள்..  என்னைக் கடத்தியது யார்...? என்னை ஏன் கடத்தினார்கள். கடத்தியவர்கள் ஏன் என்னை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வரவேண்டும்...? என எண்ணியபடி அமர்ந்திருக்க.. அவளது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் வண்ணம் அந்த அறைக்குள் நுழைந்தாள் நர்ஸ். "ஹலோ சிஸ்டர்... யாரு என்னை இங்க கொண்டுவந்து சேர்த்தது....?" என்றபடி கட்டிலில் இருந்து எழுந்தாள் கவி. அதற்கு அந்த நர்ஸ் பதிலளிக்கும் முன்பு.. "நான் சொல்றேன்" என்றபடி உள்ளே வந்தான் கார்த்திக்.. கார்த்திக்கை கண்டு அதிர்ச்சியுற்றவள்... "நீ... நீங்களா....?" "ஹ்ம்ம்.. எஸ்... நானேதான்..." என்றான் புன்னகை புரிந்தபடி. "ஏன் என்னை க...