நானும் வருவேன்....
கைலாஷ் ஆட்டோவில் இருந்து இறங்க அவனைத் தொடர்ந்து அவனது காதல் மனைவி வைஷ்னவி இறங்கினாள்... தன் கணவனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள... அவர்களைத் தொடர்ந்து கைலாஷின் அம்மா கனகம் இறங்கிக் கொள்ள... மூவரும் ஒன்றாக அந்த பிரபல மருத்துவமைக்குள் நுழைந்தனர்.. காதல் தம்பதிகளுக்கு மணமாகி ஆறுமாதங்களே ஆன நிலையில்.. வைஷ்னவி கர்ப்பம் தரிக்க.. அடிக்கடி மயக்கம், மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் போன்றவை ஏற்பட.. பதறிய கணவனை "அதெல்லாம் ஒன்னுமில்ல.. பயப்படாதீங்க.."என சமாதானப் படுத்துவாள்... ஆனால் அவளது சமாதானமெல்லாம் ஒரு அளவிற்கு மேல் எடுபடவில்லை... தன் மனைவியை கட்டாயப் படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான் கைலாஷ்... இப்பொழுது மூவரும் டாக்டரின் முன்னே அமர்ந்திருக்க... வழக்கமான கேள்விகளை கேட்டு பதில்களை பெற்ற டாக்டர்.... ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துவிடலாம் எனச் சொல்ல... கைலாஷ் ஆமோதிக்க... அடுத்த அறைமணி நேரத்தில் கைலாஷ் மட்டும் டாக்டரின் முன்னே அமர்ந்திருக்க... மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் டாக்டர்... "ஸ்கேன் எடுத்து பார்த்ததுல உங்க மனைவிக்கு...