உன்னில் உயிர்ப்பேன்
அடுப்படியில் சமையலில் ஈடுபட்டிருந்த மஞ்சரி என்கிற மஞ்சு. செல்போன் சத்தம் கேட்டு தனது நிறைமாத வயிற்றை சுமந்தபடி இடுப்பில் கைவைத்து தாங்கியபடி வெளியே வந்து காலை எடுக்க.. மறுமுனையில் இருந்து முத்தத்தின் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டது. மஞ்சரி யின் மஞ்சள் முகம் குங்குமமாய் சிவந்து போனது. சில நொடிகள் ரசித்தவள்... போதும் போதும் இந்த முத்தத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... என்னடி பிடிக்காத மாதிரி சலிச்சிக்கிற... . ஹ்ம்ம் போங்க.... உங்களுக்குத்தான் என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல.... என்னடி இப்படி சொல்லிட்ட... என் உசுரே நீயும் உன் வயித்துல இருக்க நம்ம குழந்தையும்தான் என் கண்மணி. இப்படி சொல்லியே என்னை சமாதானம் பன்னிடலாம்னு நினைக்காதீங்க... எனக்கு இப்ப உங்க கூட இருக்கனும்.. உங்க நெஞ்சுல சாஞ்சுக்கனும்னு எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா..? எனக்கு மட்டும் உன்னை பிரிஞ்சு இருக்கனும் னு ஆசையா என்ன..? எனக்கும் உன்னை பார்க்கனும் என் செல்ல பொண்டாட்டிய கொஞ்சனும் முத்தம் கொடுக்கனும்.. இப்படி பல ஆசைகள் எனக்குள்ள இருக்கு என் கண்மணி... ஆனால் என்ன பன்றது... நாம எல்லோர...