Posts

Showing posts from October, 2017

அவள் ஒரு தேவதை-6

அவள் ஒரு தேவதை-6 எபிஸோட்-6 சுவற்றில் அறையப்பட்டிருந்த கடிகாரம் மணி பத்து என்றது. பெட்டில் படுத்திருந்த கவியின் கண்கள் மெல்ல மெல்ல திறக்க அந்த அறை மசமசப்பாக கண்களில் புலப்பட்டது. சில நொடிகளில் அந்த அறை தெளிவாகத் தெரிய.... தாம் எங்கு இருக்கிறோம் என்பது அங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் சொல்லாமல் சொல்லியது, ஒன்றும் புரியாமல் எழுந்தமர்ந்தவள் திரு திருவென விழித்துக் கொண்டிருந்தாள்..  என்னைக் கடத்தியது யார்...? என்னை ஏன் கடத்தினார்கள். கடத்தியவர்கள் ஏன் என்னை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வரவேண்டும்...? என எண்ணியபடி அமர்ந்திருக்க.. அவளது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் வண்ணம் அந்த அறைக்குள் நுழைந்தாள் நர்ஸ். "ஹலோ சிஸ்டர்... யாரு என்னை இங்க கொண்டுவந்து சேர்த்தது....?" என்றபடி கட்டிலில் இருந்து எழுந்தாள் கவி. அதற்கு அந்த நர்ஸ் பதிலளிக்கும் முன்பு.. "நான் சொல்றேன்" என்றபடி உள்ளே வந்தான் கார்த்திக்.. கார்த்திக்கை கண்டு அதிர்ச்சியுற்றவள்... "நீ... நீங்களா....?" "ஹ்ம்ம்.. எஸ்... நானேதான்..." என்றான் புன்னகை புரிந்தபடி. "ஏன் என்னை க...

புத்தகங்கள் மொத்தமாய்...

புத்தகப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான பதிவுதான் இது..... இந்த விஞ்ஞான உலகில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை  மிகவும் குறைவாக இருப்பது கண்டு வருத்தம் அளிக்கிறது...   எப்பொழுது டி.வி வந்ததோ அப்பொழுதிருந்து மக்களுக்கு புத்தகம் வாசிக்கும்பழக்கம் பாதியாக குறைந்திருந்தது .  பிறகு செல்போன், இன்டெர்நெட், பேஸ்புக் வந்ததில் இருந்து மக்களின் புத்தகம்வாசிக்கும் சதவீதத்தின் மதிப்பு சரிந்து போய் இருப்பது இப்பொழுது தெரிகிறது.... புத்தகம் படிப்பதின் அவசியத்தை நான் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றேன்....நம் மன உளைச்சலை போக்கும் சக்தி ஒரு புத்தகத்திற்கு உண்டு.... ஒரு புத்தகம்பத்து சைக்கியட்ரிஸ்ட்களுக்குச் சமமானது..... நமது உள்ளத்தை செம்மை படுத்தக் கூடியது.... மனதை ஒருநிலைப் படுத்தஉதவுவது.... தன்னம்பிக்கையை விதப்பது...  எல்லாம் சரிதான் இப்ப நீ என்னதான் சொல்ல வர்றேன்னு நினைக்கிறது எனக்கு கேக்குது... அதாகப் பட்டது என்னவென்றால்.... இந்த காலத்தில் கைப்பேசி இல்லாதவர்கள் என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிட இயலும்... அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் உபயோகம் அதிகரித்து விட்டத...