Posts

Showing posts from July, 2016

ஒருநாள் அந்த ஒருநாள்....

ஒருநாள் அந்த ஒருநாள் எ னக்கு அறிமுகம் தேவை இல்லை …. ஏனெனில் ஏற்கெனவே அரைநாள் அனுபவத்தில் அறிமுகமாகிவிட்டேன் …. ஆம் அந்த கதையில் ஆரம்பத்தில் அறிமுகமாகி இறுதியில் பல்ப் வாங்கிய அதே அபு தான்   நான் … சரி விசயத்திற்கு வருவோம் எனக்கு புத்தகம் படிப்பதென்றால் மிகவும் இஷ்டம் …. சின்ன வயதில் இருந்தே எனக்கு வாசிப்பு பழக்கம் இருக்கின்றது … இதனாலேயே எனக்கு புத்தகத்தின் மீது தீராத காதல் என்று சொல்லலாம் .... ( பாடப் புத்தகம் தவிற ) இராமநாதபுரத்தில் புத்தக கண்காட்சி ஆரம்பித்து நான்கு நாட்கள் ஆகியும் என்னால் போக இயலவில்லை … ( அயாம் ரொம்ப பிஸி யூ நோ ....?) இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது காலேஜில் இருந்து .. நேராக ஒரு டப்பா டவுன் பஸ்ஸை (2B) பிடித்து இராமநாதபுரம் செல்கிறேன் ... நான் இப்பொழுது பைனல் இயர் என்பதால் எதிர்காலத்தை பற்றிய பயம் துளிர்விட்டு வளர ஆரம்பித்து என்னை ஆட்டி படைத்துக் கொண்டு இருந்தது ..  இதனாலேயே முன்னைவிட அதிகமாக நான் துறை சம்பந்தமான விவரங்கள் சேமிக்க வேண்டியதாய் , ...