அவள் ஒரு தேவதை-5
எபிசோட்-5 பனிவிழும் இரவு... நனைந்தது நிலவு... இளங்குயில் இரண்டு.... இசைக்கின்ற பொழுது... பூப்பூக்கும் ராப்போது... பூங்காற்று... தூங்காது,,, வா.. வா.. வா... என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க.... அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தாள் கவிதா... தூரத்தில் வரும் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் கார்த்திக்.... ரோஸ் நிறச் சுடிதாரில் வெள்ளை நிற பூக்கள் வேலைபாடு செய்யப் பட்டிருக்க... தலை முடியை ஒற்றைப் பின்னலாக போட்டிருக்க... உயரத்திற்கு தகுந்த உடல்வாகுடன்... 23 வயது அழகுக் குழந்தை நடந்து வருவதைக் கண்டு கார்த்திக்கு மூச்சை அடைத்தது... தொடர்ந்து பார்த்தால் எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என பயந்தவனாக தன் பார்வையை தாழ்த்தி தலையை உழுக்கிக் கொண்டான்... டேபிளில் இருந்த க்ளாஸில் தண்ணீரை ஊற்றி குடித்துக் கொண்டான்... வந்தவள் அங்கேயும் இங்கேயும் பார்வையை அலையவிட்டு.... கார்த்திக்கை கண்டுபிடித்தாள்.. கார்த்திக் புத்தி பேதலித்தவன் போல் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்... வேகமாக வந்தமர்ந்தவளின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை.... "ரொம்ப நேரம் வெயிட் பன்ன...