Posts

Showing posts from January, 2016

ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு

                       தனிப்பெருந்துணை கதிர் காலை எடுக்க மறுமுனையில் அவனுடைய ஆருயிர் நண்பன் வாசு துபாயில் இருந்து பேசினான். “கதிர் மச்சான் எப்படி இருக்கே…?” “நல்லா இருக்கேன் மாப்ள… அப்பறம்… நான் சொன்ன மேட்டர் என்னாச்சு…?” “அதைப்பத்தி   பேசத்தான் கால் பன்னேன்… மாப்ள…” “ஹ்ம்ம் என்னாச்சு…” அதிலேயே குறியாக இருந்தான். “உன் ரெஸூமை ஹெச்.ஆர் கிட்ட கொண்டு போய் காமிச்சேன் பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க, பட் ஆள் தேவைப் பட்டதால ஓக்கே சொல்லிட்டாங்க…. விசா இன்னும் ஐந்து நாள்ல ரெடியாய்டும், நீ கிளம்பி வரவேண்டியதுதான் பாக்கி… ஆனாலும் மாப்ள இந்த நிலமைல ப்ரியாவ விட்டுட்டு வருவது நல்லது இல்லை மாப்ள..” என்றான் அக்கறையோடு. “நான் அங்கு வருவதே அவளுக்காகத்தான் மச்சி… அவள் என்னை பாக்கும் பொழுதெல்லாம்… ரொம்ப கஷ்டப் படுறா மச்சி… எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு மச்சி.. இந்தப் பிரிவு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு புரிதலைக் கொடுக்கும் என நான் நினைக்கிறேன்டா….” என தான் எடுத்த மு...