அவள் ஒரு தேவதை - 8
அவள் ஒரு தேவதை - 8 கார்த்திக் பயத்துடனே வாசலை பார்த்துக் கொண்டு இருக்க... அவன் பயந்தது போலவே ஒருவன் பல்ஸர் பைக்கை மண்டபத்திற்குள் ஓட்டி வந்து பரேக் அடித்து நிற்க... "நோ..." என்று கத்தியபடி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் கார்த்திக்... கார்த்திக்கின் சத்தம் கேட்டு அருகே உறங்கிக் கொண்டு இருந்த சிவாவும் எழுந்து கொண்டான்... "என்ன மாப்ள என்னாச்சு..." ஒரு கணம் ஒன்றும் புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தவன் சிவாவின் குரல் கேட்டு திரும்பி "ஒன்னுமில்ல மச்சி.... ஒரு கெட்ட கனவு...." "என்ன கனவு...? அந்த ராஜேஷ் வந்துட்டானாக்கும்..." "ஆமாம் மச்சி..." "டேய்... டேய்... ஏன்டா பயந்து சாகுற... இன்னும் அஞ்சு மணி நேரத்துல உனக்கு மேரேஜ் ஆக போகுது... நியூசை பார்த்துட்டு இத்தனை நாள் வராதவன் இன்னைக்கு மட்டும் வந்திருவானா என்ன...?" "அப்படி இல்லை மச்சி... காலைல கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க...." "அடச்சே... இன்னுமாடா இதெல்லாம் நம்பிட்டு திரியிறீங்க... நீ எல்லாம் ஐடி ல வேலை செய்றேன்னு வெளில ச...