காதல் ஹார்மோன்
காதல் ஹார்மோன் நான் ஹரிஹரன் என் நண்பர்கள் என்னை ஹரி என்றழைப்பார்கள்…. படித்தது பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ். ஆனால் முடிக்கவில்லை இன்னும் இரண்டு அரியர் பாக்கி இருக்கிறது… அடுத்த செமஸ்டரில்தான் அதை க்ளியர் செய்வதாக உத்தேசம்….. இப்பொழுது நான் எங்க ஏரியாவில் இருக்கும் விளையாட்டு மைதானத்தின் குட்டிச்சுவரில் எனது பள்ளி நண்பர்களோடு அமர்ந்திருக்கின்றேன்….. ஹ்ம்ம் ஆமாம்….. கழுதை கெட்டா குட்டிச்சுவர்தானே… அரியரினால் வேலையும் கிடைக்கவில்லை… போனால் சாப்ட்வேர் கம்பெனிக்குதான் வேலைக்கு போவேன்.. என்ற பிடிவாதத்தின் காரணமாக வேறு வேலைகள் எதற்க்கும் முயற்சி செய்யவில்லை.... என்னுடன் படித்தவர்கள் எல்லாம் நல்ல வேலைக்கோ இல்லை மேற்படிப்பிற்கோ சென்றுவிட நான் அதைவிட முக்கியமான வேலையை இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றேன்….. அதுதான் என் வயதொத்த இளம் எதிர் பாலினங்களை சைட் அடிக்கும் வேலை… சிறு வயதில் சறுக்கி, ஏறி குதித்து விளையாடிய குட்டிச் சுவர்தான் இப்பொழுது சைட் அடிப்பதற்கும் உதவி செய்கிறது… “டேய்… மச்சி… அந்த பொண்ணை பாரேன்….” என என் நண்பன் ராகேஸ் உற்ச்சாகத்...