ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு
தனிப்பெருந்துணை
கதிர் காலை எடுக்க மறுமுனையில்
அவனுடைய ஆருயிர் நண்பன் வாசு துபாயில் இருந்து பேசினான்.
“கதிர் மச்சான் எப்படி
இருக்கே…?”
“நல்லா இருக்கேன் மாப்ள… அப்பறம்… நான் சொன்ன மேட்டர் என்னாச்சு…?”
“அதைப்பத்தி பேசத்தான் கால் பன்னேன்… மாப்ள…”
“ஹ்ம்ம் என்னாச்சு…” அதிலேயே
குறியாக இருந்தான்.
“உன் ரெஸூமை ஹெச்.ஆர் கிட்ட கொண்டு போய் காமிச்சேன் பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க, பட் ஆள் தேவைப் பட்டதால ஓக்கே சொல்லிட்டாங்க…. விசா இன்னும் ஐந்து நாள்ல ரெடியாய்டும், நீ கிளம்பி வரவேண்டியதுதான் பாக்கி… ஆனாலும் மாப்ள இந்த நிலமைல ப்ரியாவ விட்டுட்டு வருவது நல்லது இல்லை மாப்ள..” என்றான் அக்கறையோடு.
“நான் அங்கு வருவதே அவளுக்காகத்தான்
மச்சி… அவள் என்னை பாக்கும் பொழுதெல்லாம்… ரொம்ப கஷ்டப் படுறா மச்சி… எனக்கு ரொம்ப
வேதனையா இருக்கு மச்சி.. இந்தப் பிரிவு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு புரிதலைக் கொடுக்கும்
என நான் நினைக்கிறேன்டா….” என தான் எடுத்த முடிவை தீர்க்கமாகச் சொன்னான்.
“சரி.. நீ சொல்றதெல்லாம்
ஓக்கே மாப்ள.. ஆனால் அவ கர்பமா இருக்கற இந்த டைம்ல நீ அவ பக்கத்துல இருக்கறதுதான் நல்லதுன்னு
படுது இது என்னோட கருத்து… அப்பறம் இன்னொரு விசயம் என்னன்னா, இரண்டு வருசம் அக்ரிமென்ட்லதான் விசா கொடுப்பாங்க , இதுக்கும் மேல உன் இஸ்டம்தான்…” என பெரிய குண்டை தூக்கிப்
போட்டான்.
ரெண்டு வருசம் ப்ரியாவை
பிரிந்திருக்க வேண்டுமா..? என்னால் முடியுமா..? என தன்னையே கேட்டுக் கொண்டவன்.. அடுத்த
நிமிடமே ஓக்கே சொல்லிவிட்டு போனை அனைத்தான்.
துபாய் செல்ல ஓக்கே சொல்லிவிட்டாலும்,
அவன் மனதில் வலி இருக்கத்தான் செய்தது…. நீங்கள்
இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்ற ப்ரியாவின் குரல் அவனது மனதில் ஒலித்து இம்சித்தது.
எப்பொழுதும் ப்ரியாவை கண்டு
கொள்ளாமல் இருப்பவன், அன்று இரவு அவள் பாயில் படுத்திருக்க அருகே சென்று அமர்ந்தவனை
ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“ப்ரியா… நீ தப்பா நினைச்சாலும்
பரவா இல்லை… இன்னும் ஐந்து நாட்களுக்கு நான் உன்னோடதான் படுப்பேன்…. பயப்படாத வேறு
எதுவும் செய்ய மாட்டேன்… சும்மா… அனைச்சுக்கிட்டு
மட்டும்தான் கிடப்பேன்… ப்ளீஸ் இதைமட்டும்
நீ மறுக்கக் கூடாது…” என கெஞ்சுதலாக கேட்டான் கதிர்.
அவனுடைய ஏக்கத்தை புரியாதவள்
இல்லை சுகப்ரியா…
தினமும் தான் காண்கிறாளே,
என்னதான் அவன் கண்டுக் கொள்ளாததுபோல் இருந்தாலும் அவள் பார்க்காத சமயம் அவனுடைய கண்கள்
இவளைத்தானே மொய்த்திருக்கும்,
இத்தனை நாள் வாய்விட்டு
கேட்காதவன் இப்பொழுது மட்டும் ஏன் கேட்கிறான் அதுவும் ஐந்து நாட்கள் மட்டும் என நினைத்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை…
இதை வைத்து அவனை ஏதாவது குத்தம் சொல்ல பரபரத்தது ஒரு மனது,
ஆனால் அவளது காதல் கொண்ட
மனதோ, அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டது… இருந்தாலும் அந்த ஐந்து நாட்கள் மட்டும் என்பது
உறுத்தவே மெல்லக் கேட்டாள் ப்ரியா.
“ஏன் அஞ்சு நாள் மட்டும்,..
அடுத்த நாள் நானே வருவேன்னு நினைச்சீங்களோ..” அவளையும் மீறி வார்த்தைகள் வெளிபட்டது,வெடுக்கென நிமிர்ந்து பார்த்தவன்
நிதானித்துச் சொன்னான்.
“நீ என்னை என்னவேன்னா நினைச்சிக்கோ
எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனால் உன்னோட அரவனைப்பு வேணும்னு தோனுது… அது ஏன்னு
இப்ப கேட்காத, இன்னும் ஐந்து நாட்கள் கழித்து உனக்கேத் தெரியும்…” என்றான் மெல்லிய
குரலில்.
அவளையும் மீறி வார்த்தையை
விட்டுவிட்டவள் தன்னையே கடிந்துக் கொண்டாள், தன் மனதை அடக்கினாள், தன் கணவனுக்கு ஒத்துழைக்க
ஆரம்பித்தாள்.
அவனும் அவளோடு பாயிலேயே
படுத்துக் கொண்டான், இத்தனை நாள் இல்லாத அந்த நிம்மதியான தூக்கம் இப்பொழுது கிடைத்தது
போல் இருந்தது.
வயிறு இடிக்கவே அவளை பின்னால்
இருந்து அனைத்துக் கொண்டு உறங்கினான், ப்ரியாவிற்கும் அந்த நேரத்தில் அந்த அணைப்பு
தேவைப்பட்டது.
அவள் முன்னால் நடந்த அந்த அவலத்தைப் பற்றிய நினைவுகளை தற்காலிகமாக
ஒத்திவைத்தாள்.
தனக்கும் காரில் இருந்து விழுந்ததில் கதிரை போல் நினைவு போயிருந்தால்,நன்றாக இருந்திருக்குமோ என நினைத்தாள்.
அடுத்து வந்த மூன்று நாட்களும்
அவ்வாறே சென்றது… அவன் சொன்னபடி வரம்பு மீறவில்லை அனைத்தபடியே உறங்கும் கணவனை காதலுடன்
பார்க்க ஆரம்பித்தாள் சுகப்ரியா.
தனது பெற்றோர்களிடம் தான்
துபாய் போகவேண்டியதின் அவசியத்தை சொன்னதும் முதலில் கடுமையாக எதிர்த்தார்கள்,அது எப்படி நீ ஒரு புள்ளத்தாச்சிப்
பொண்ணை தனியா விட்டுட்டு போகலாம் என ஏதேதோ சொல்லியும் அவன் முடிவில் பிடிவாதமாக நிற்கவே
இறுதியில் அரை மனதோடு ஒத்துக் கொண்டார்கள்.
ஆனால் ப்ரியாவிற்கு இன்னமும்
அந்த விசயம் சொல்லப் படவில்லை, அவள் ரொம்பவும் வேதனைப் படுவாள் என நினைத்து அவளிடம்
தற்பொழுது சொல்ல வேண்டாம் என பெற்றோர்களிடம் வேண்டி இருந்தான் கதிர்.
அவன் கிளம்ப வேண்டிய அந்த ஐந்தாவது நாளும் வந்தது,அவனையும் மீறி அவனது கண்களில்
கண்ணீர் அருவியாய் பெருக்கெடுத்து ஓடியது. ப்ரியாவின் மடியில் புரண்டு படுத்துக் கொண்டு
அழ ஆரம்பித்தான்.
ப்ரியா மென்மையானவள் அல்லவா, கணவனின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவளின் கண்களிலும் கண்ணீர் வந்தது.. கணவன் எதற்காக அழுகிறான் என அறியாதவளாய் இவளும் கண்ணீர் விட்டாள்.
பிறகு அவனை சமாதானப் படுத்தும்
விதமாகச் சொன்னாள், “கதிர்… கவலைப் படாதிங்க எல்லாம் சரியா போய்டும்…. ப்ளீஸ் அழாதிங்க
எனக்கும் அழுகை அழுகையா வருது…” எனச் சொல்லவும்தான் தனது அழுகையை நிறுத்தினான்.
தான் அவசரப் பட்டு முடிவு
செய்துவிட்டோமோ என நினைத்தான்.
இன்னும் கொஞ்ச நாள் பொறுமையாக இருந்தால் என் ப்ரியா மனசு மாறிவிடுவாளோ என நினைத்தான்.
எல்லாம் கை மீறிப் போனப் பிறகு யோசித்து என்ன பிரயோஜனம்
இன்னும் கொஞ்ச நாள் பொறுமையாக இருந்தால் என் ப்ரியா மனசு மாறிவிடுவாளோ என நினைத்தான்.
எல்லாம் கை மீறிப் போனப் பிறகு யோசித்து என்ன பிரயோஜனம்
விசாவும் ரெடியாகிவிட்டது, இப்பொழுது போய் அவன் வரவில்லை என்று சொன்னால் பாவம் வாசுவிற்குதான் கெட்ட பெயர்.
அவன் ரெக்கமென்டில் இந்த
விசா கிடைத்திருக்கிறது இனி எதுவும் செய்ய முடியாது போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு
தள்ளப்பட்டான் கதிர்.
மெல்ல எழுந்து அமர்ந்தவன்
தான் அழுததற்கு காரணத்தை ப்ரியாவிடம் சொல்ல.
அழாதீங்க… என இவனுக்கு
ஆறுதல் கூறியவளுக்கு இவன் ஆறுதல் சொல்ல வேண்டியதாயிற்று.
“நீதானேம்மா எனக்கு டைம்
வேணும்னு கேட்ட அதான் இந்த முடிவுக்கு வந்தேன், எனக்கும் கூட உன்னை விட்டு பிரிஞ்சு
இருக்கனும்னு தலை எழுத்தா என்ன…?
எல்லாம் உனக்காகத்தான் டா… நீ நல்லா யோசி.. முழுசா ரெண்டு வருசம் உனக்கு கிடைச்சிருக்கு… கண்டிப்பா நீ என்னை முழூ மனசோட ஏத்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்ற கணவனை கண்ணீருடன் காதலாகப் பார்த்தவள் பாய்ந்து வந்து அனைத்துக்
கொண்டாள்.
“ப்ளீஸ் கதிர் என்னை விட்டு
போகாதீங்க… ப்ளீஸ் உங்களை பார்க்காம என்னால இருக்க முடியாதுங்க… பாவி… பாவி… நான் தான்
எல்லாத்துக்கும் காரணம்… உங்களுக்கும் தன்டனை கொடுத்து இப்ப எனக்கும் கொடுத்துக்கிட்டேனே…
அய்யோ இனி உங்களை பார்க்காம எப்படி இருப்பேன்…” என்று தன்னை கட்டிக் கொண்டு கதறியவளைக்
கண்டு… கதிரின் மனதில் காதல் பெருக்கெடுத்து ஓடியது.
“இல்லைடா ப்ரியா.. இனி
எதுவும் செய்ய முடியாது… அந்த கம்பெனில அவசரமா ஆள் தேவைப்படுதுன்னு விசா அனுப்பிருக்காங்க
இப்ப போய் அதெல்லாம் கேன்சல் பன்ன முடியாது… அப்படி கேன்சல் பன்னாலும் வாசுவுக்குதான்
கெட்ட பேரு… அவன் வேலை பறி போகும் நிலைக்கூட… ஏற்படலாம்… அதனால நான் போய்த்தான் ஆகவேண்டும்…
என்னை மன்னிச்சிடு கண்மணி… என அவளின் கண்ணீரை துடைத்தவன் அவளை அலேக்காகத் துக்கிக்
கொண்டு மெத்தையில் கிடத்தினான்.
அவள் முகத்தில் முத்தத்தால்
புதுக் கவிதைகள் பல எழுத ஆரம்பித்தான்.
அவளும் அவன் முதுகில் கை
போட்டு அனைத்துக் கொண்டு தன் கணவன் கொடுக்கும் முத்தத்திற்கு ஒத்துழைத்தாள்.
கொஞ்ச நேரம் அந்த அறையில்
முத்தமிடும் சத்தம் மட்டுமே ஒலித்தது… இருவருக்கும்
அந்த முத்தங்கள் மட்டும் சலிக்கவே இல்லை.
இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டார்கள்
இரண்டு வருடத்திற்கான முத்தத்தையும் மொத்தமாக கொடுக்கும் முயற்சியில் கதிர் இருக்க
ப்ரியாவோ இது இனிமேல் கிடைக்காது
என்பதுபோல் செயல் பட்டாள்.
கதிர் அவளை விட மனமில்லாமல் எழ, அவள் விடவில்லை…அவளுக்கு அப்பொழுது எதுவும் நினைவில் வரவில்லை… என் கதிர் கூடவே இருந்தால் போதும் என்பது மட்டுமே அவளது மனதில் ஓடியது.
அவள் எழவிடாததால் மீண்டும்
அவள் மீது சரிந்தவன், கொஞ்ச நேரம் காதலாக அனைத்துக் கொண்டு படுத்துக் கொண்டான்.
“என்னை மன்னிச்சிடுடா…. நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் அவசரமா எடுக்கப் பட்டதுதான்… என்னால இந்த அவசர குணத்தை மட்டும் மாத்திக்கவே முடியல.
ஆனால் கண்டிப்பா மாறும்
கண்ணம்மா…. இனி வரப்போகிற இந்த இரண்டு வருட இடைவெளியில்… நம் உடல் மட்டுமே பிரிஞ்சிருக்குமே
தவிற என்னோட மனமெல்லாம் உன்னோட நினைவுகளை மட்டுமே சுமந்திருக்கும்டா..
உனக்கும் என்னைப் பற்றிய
ஒரு நல்ல புரிதல் வேணும்டா கண்ணம்மா… அதற்காக வேணும் நமக்கு இந்த பிரிவு அவசியம் தான்னு
நினைக்கிறேன்…” என நீளமாக எடுத்துரைக்க.
ப்ரியாவிற்கும் அவன் சொல்வதில்
நியாயம் இருப்பதாகப் பட்டது
அன்று மாலை சொல்லெண்ணா
துயரத்தோடு வாசல் வரை வந்து வழியனுப்பினாள் சுகப்ரியா.
மகனின் பிரிவு மரகதத்திற்கும்
கண்ணீரை வரவழைத்தது, கதிர் ஆறுதல் வார்த்தை கூறி ப்ரியாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி
சொல்லிவிட்டு அவன் வாழ்ந்த வீட்டைவிட்டு கண்ணீரோடு தற்காலிகமாக விடை கொடுத்தான்.
துரைச்சாமி ஏர்போர்ட் வரை
வந்தார், பாக்கியநாதனும் வந்திருந்தார். துரைச்சாமி பல அறிவுரைகள் சொல்லி தனது மகனை
தாய் மண்ணைவிட்டு அனுப்பி வைத்தார்.
துபாயில் இறங்கியதும் ஏர்போர்டில் வாசு காத்திருந்து, அழைத்துச்
சென்றான், அவனது ரூமிலேயே தங்க ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது.
முதல் நாள் நன்றாகப் படுத்து
உறங்கி ஓய்வெடுத்தவன், அடுத்த நாள் வேலைக்குச் சென்றான்.
ஏற்கெனவே தனது அப்பாவின்
கம்பெனியில் கொஞ்ச நாட்கள் வேலை பார்த்ததின் விளைவு இங்கு வேளையில் எந்த ஒரு பிரச்சனையும்
இருக்கவில்லை மிகவும் எளிதாகவே இருந்தது.
கதிர் நடந்ததை எல்லாம்
விளக்கமாகச் சொல்ல… வாசு அதிர்ந்தாலும் பிறகு அவனுக்கு ஆறுதலாகவே இருந்தான், எல்லாம்
காலம் செய்த கோலம் என காலத்தின் மேல் பழி போட்டுக் கொண்டான் கதிர்.
அப்படியே நாட்கள் சென்றது, அவ்வப் பொழுது வீட்டிற்கு கால் செய்து ப்ரியாவிடம் மணிக்கணக்காகப் பேசுவான்.. அவனது
பேச்சு முழுவதும் ப்ரியாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றியதாகவே இருக்கும்.
ப்ரியாவும் பொழுது போகாமல்
அலமாரியில் இருக்கும் பல புத்தங்களை கரைத்துக் குடித்தாள்.
அவள் படிக்கும் கதையில்
வரும் கதாப் பாத்திரங்கள் அவளை விட அதிகமாக கணவனால் பாதிக்கப் பட்டிருந்தும், அவனை
விட்டுக் கொடுக்காமல் இருக்கும் படியான நிறைய கதைகள் படித்தவளின் மனது தெளிவடைய ஆரம்பித்தது.
அந்த கதைகளில் வரும் அந்த கதாப்பாத்திரங்கள் பட்ட கஷ்டத்தை தன்னோடு ஒப்பிட்டுப்
பார்த்ததில் அவளது கஷ்டமெல்லாம் தூசியாகத் தெரிந்தது.
அவளது மனநிலை முற்றிலும்
மாறிப்போனது, பல தத்துவ புத்தகங்களை படித்தவளுக்கு இந்த வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது.
மனது செம்மை அடைந்தது, முற்றிலும் மாறிப்போனாள் சுகப்ரியா என்றேச் சொல்லவேண்டும்.
மனது செம்மை அடைந்தது, முற்றிலும் மாறிப்போனாள் சுகப்ரியா என்றேச் சொல்லவேண்டும்.
இதனால் தான் ஒரு புத்தகம்
பத்து நல்ல நண்பர்களுக்குச் சமம் எனச் சொன்னார்களோ என்னவோ.
அறையில் தனியாக படுத்திருப்பவள்
கதிரின் சட்டையை துணைக் கெடுத்துக் கொண்டாள், கதிர் சட்டையின் உதவியோடு அவன் கூடவே
இருப்பதாக உணர்ந்தாள்.
ஆரம்பத்தில் கதிரிடம்
தயக்கத்தோடு பேசியவள் இப்பொழுதெல்லாம், சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்…. அவன் அங்கிருந்து
இவளை கிண்டல் செய்ய, இங்கிருந்து இவள் அவனை பதிலுக்கு கிண்டல் செய்ய, ஃபோனே சூடாகும்
அளவுக்குக் கடலை வறுப்பார்கள்.
இனையவழி முகம் பார்த்துப் பூரித்துக் கொண்டார்கள், தங்களின் காதலை வளர்த்தார்கள்.
இப்படியே நாட்கள் ஓட ப்ரியாவின் பிரசவ நாளும் வந்தது, அந்த நாளுக்கு ஒருநாள் முன்பாகவே மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டாள் ப்ரியா, முதல் பிரசவம் என்பதால் மிகவும் சிரமப்பட்டாள் ப்ரியா, அருகில் தனது கணவன் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாள்.
இப்படியே நாட்கள் ஓட ப்ரியாவின் பிரசவ நாளும் வந்தது, அந்த நாளுக்கு ஒருநாள் முன்பாகவே மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டாள் ப்ரியா, முதல் பிரசவம் என்பதால் மிகவும் சிரமப்பட்டாள் ப்ரியா, அருகில் தனது கணவன் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாள்.
கதிரும் அன்று தனக்கு லீவ்
போட்டுக் கொண்டு அவஸ்தையோடு அங்குமிங்கும் நடந்துக் கொண்டு இருந்தான், அவன் மட்டும்
ப்ரியாவின் அருகில் இருந்திருந்தான் என்றால் ப்ரியாவின் கதறலில் இவனும் சேர்ந்து கதறி
இருப்பான்.
சுகப் பிரசவத்தில் நல்லபடியாக
ஒரு ஆண் குழந்தையை இவ்வுலகத்திற்கு அறிமுகப் படுத்தினாள் சுகப்ரியா.
அந்த குழந்தை கதிரை அப்படியே
உரித்து வைத்ததுபோல் இருந்தது, அதே மூக்கு அதே சுருட்டை முடி.
தன் கணவன் இல்லாதக் குறையை
அந்த குழந்தை மறைத்தது. அந்த குழந்தையை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தாள்
ப்ரியா.
ஓரு நல்ல நாளில் குழந்தைக்கு
பெயர் சூட்டும் விழா வைத்து, ஹரீஷ் என பெயர் சூட்டப் பட்டது, ப்ரியாதான் அந்த பெயரை
வைத்தாள், கதிருக்கும் அந்த பெயர் ரொம்பவும் பிடித்திருந்தது.
பாவம் கதிர் ரொம்பவும்
தவித்துப் போனான், தனது முட்டாள் தனத்தை எண்ணி தன்னையே கடிந்துக் கொண்டான்.
வாசுவின் ஆலோசனைப் படி
கதிர் தினமும் யோகா வகுப்பிற்குச் செல்ல ஆரம்பித்தான், ஆரம்பத்தில் எல்லாம் சிரமமாக
இருந்தாலும் போகப் போக எல்லாம் எளிமையானது.
பொறுமையை கடைப்பிடிப்பது
எப்படி….? என்ற தலைப்பில் புத்தகம் போடும் அளவிற்கு இருந்தது, கதிரின் முன்னேற்றம்.
வீடியோ சேட்டில் தனது குழந்தையைப்
பார்த்து ஆறுதலும் ஆனந்தமும் அடைவான். ஹரீஷோடு பேச ஆரம்பித்தால் ப்ரியாவை மறந்துவிடுவான். ப்ரியா செல்லமாக சண்டை போடுவாள்.
“ஓய்… நாந்தான் உங்களுடைய
முதல் குழந்தை நியாபகம் வச்சுக்கோங்க… இன்னொரு
குழந்தை வந்ததும் என்னை மறந்துட்டிங்களே…”
“அடி போடி இவளே… நீ சின்னக்
குழந்தையா…. நான் அங்கு இருக்கும் போது என்னை என்ன பாடு படுத்தினே…. ஊருக்கு வந்து
உன்னை வச்சிக்கிறேன் மவளே செத்தடி… நீ.”
“அய்யய்யோ அடிப்பீங்களா
கதிர் என்னை….” என வெள்ளேந்தியாக கேட்பாள்.
“அய்யய்யே வா….. அப்படியே
ஒன்னும் தெரியாத சின்னப் பாப்பா…. வாய்ல விரல வச்சாலும் கடிக்க தெரியாது.. புரியாத
மாதிரி நடிக்காதடி….” என அவன் சொல்ல அவள் வெட்கப்பட
இப்படியாக அந்தப் பிரிவை
தங்களின் காதலை வழுப்படுத்தும் கருவியாக மாற்றிக் கொண்டார்கள்.
முன்னால் நடந்ததெல்லாம்
இருவரும் மறந்தார்கள், இனி வரும் காலங்களில், தாம் வாழப் போகும் வாழ்கையை எண்ணி உள்ளம்
பூரித்தார்கள்.
இப்படியே ஒரு வருடம் ஓடி
இருந்தது. கதிரும் மேலிடத்தில் பேசி ஒரு இரண்டு மாதம் லீவ் தரும்படி மன்றாடி ஒரு
வழியாக அதில் வெற்றியும் பெற்றான்.
அடுத்த வருடம் அக்ரிமென்ட் முடிந்ததும் இந்த வேலையை விட்டுவிட்டு நிரந்தரமாக போய்விட வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
அடுத்த வருடம் அக்ரிமென்ட் முடிந்ததும் இந்த வேலையை விட்டுவிட்டு நிரந்தரமாக போய்விட வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
தான் வரப்போகும் இனிய செய்தியை
சொல்ல கால் செய்தான் கதிர்.
“ப்ரியா….”
“ஹ்ம்ம் சொல்லுங்க… எப்படி
இருக்கீங்க….”
“எனக்கு என்ன நான் சூப்பரா இருக்கேன்….”
“ஹ்ம்ம்.. நீங்க சூப்பரா
இருக்கீங்க, ஆனால் நான் நல்லா இல்லையே இன்னும் ஒரு வருசம் வெயிட் பன்னனும் உங்களைப்
பார்க்க…” என்று சலித்துக் கொண்டாள்.
அப்பொழுதுதான் கதிருக்கு
அந்த ஐடியா தோன்றியது. சொல்லாமல் கொல்லாமல் திடீர் என்று அவள் முன்னால் சென்று நின்றால்
எப்படி இருக்கும்…. ஹா… ஹா… சூப்பர் ஐடியா.
தான் வரப்போகும் செய்தியைச்
சொல்ல கால் செய்தவன், சொல்லாமல் வழக்கம் போல் பேசிவிட்டு போனை வைத்து விட்டான்.
அடுத்த நாளே தனது ஊருக்குப்
புறப்பட்டான். வாசு வந்து வழியனுப்ப… மதுரை விமான நிலையத்திற்கு வந்து டாக்சி பிடித்து
தனது வீட்டிற்கு வந்து உள்ளே நுழைய மரகதம் ஆச்சரியத்தில் எழுந்தே நின்றுவிட்டாள்.
“டேய்.. என்னடா இது சொல்லாம
கொல்லாம திடீர்னு வந்து நிக்கிற…” என்றவளை
“உஸ்ஸ்… சத்தம் போடாதீங்கம்மா..”
என வாயில் விரல் வைத்து தாயை அடக்கினான்
“ப்ரியா எங்கம்மா…” என்றான்
கிசு கிசுப்பான குரலில்
“மேலதான்டா இருப்பா” எனச் சொல்லவும், தான் கொண்டு வந்த பேக்கை அப்படியே சோபாவில் போட்டுவிட்டு மேலே தனது அறையை நோக்கிச் செல்ல
அங்கே ப்ரியா மெத்தையில்
குழந்தையை அனைத்தபடி கண் அயர்ந்திருந்தாள்.
இரவெல்லாம் குழந்தை தூங்காமல்
இவளையும் துங்க விடாமல் ரொம்பவும் படுத்திவிடும்… இதனாலேயே.. குழந்தையோடு இவளும் பகலில்
தூங்க ஆரம்பித்தாள்.
தன் மனைவி தூங்குவதை கண்ட
அவனும் சென்று படுத்துக் கொண்டான், அமைதியாக கண் உறங்கும் ப்ரியாவின் முகத்தை பார்த்துக்
கொண்டே தன் குழந்தையின் தலையில் கை வைத்து வருடிக் கொடுத்தான்… அப்படியே சிறிது நேரம்
சென்றது.
திடீரென குழந்தை பெட்சீட்டை ஈரமாக்கியபடி அழ ஆரம்பித்ததும், கண் விழித்தாள் சுகப்ரியா.
திடீரென குழந்தை பெட்சீட்டை ஈரமாக்கியபடி அழ ஆரம்பித்ததும், கண் விழித்தாள் சுகப்ரியா.
கண்விழித்தவளின் கண்களில்
தனக்கு எதிரே புன்னகைத்தபடி கிடக்கும் கதிர்தான் தெரிந்தான்.
அதிர்ச்சியுடன் பார்த்தவள் மீண்டும் தனது கண்ணை கசக்கிக் கொண்டு பார்க்க அவன் மறைந்திருக்கவில்லை அப்படியே இருந்தவனைக் கண்டு துள்ளி எழுந்து அவனை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் அவளுக்குப் பேச வார்த்தையே வரவில்லை…. எதிர்பாராத இந்த அதிர்ச்சியான ஆனந்தத்தை அவளால் தாங்க முடியவில்லை… அவனை கட்டிக் கொண்டு அவன் சட்டையை நனைத்தாள்.
அதிர்ச்சியுடன் பார்த்தவள் மீண்டும் தனது கண்ணை கசக்கிக் கொண்டு பார்க்க அவன் மறைந்திருக்கவில்லை அப்படியே இருந்தவனைக் கண்டு துள்ளி எழுந்து அவனை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் அவளுக்குப் பேச வார்த்தையே வரவில்லை…. எதிர்பாராத இந்த அதிர்ச்சியான ஆனந்தத்தை அவளால் தாங்க முடியவில்லை… அவனை கட்டிக் கொண்டு அவன் சட்டையை நனைத்தாள்.
“கதிர்… கதிர்… நீங்களா…
வ.. வ.. வந்துட்டிங்களா…?” என வார்தைகளை பிட்டு பிட்டாக துப்பினாள்.
“ஏய்… இரு ப்ரியா…. அங்க ஹரீஷ் அழறான் பாரு அவனை முதலில்
கவனி அப்பறம்… என்னை கவனிக்கலாம்…” என சொல்லவும் தான் அவனை விட்டாள்.
குழந்தையை தூக்கிக்கொண்டு
துணியை மாத்திவிட்டு கொஞ்ச நேரம் இவனை பார்த்தபடியே குழந்தையை அமர்த்தினாள், குழந்தை தூங்க ஆரம்பித்ததும்
தொட்டிலில் போட்டுவிட்டு மீண்டும் வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
“என்னால நம்பவே முடியலைங்க….
போங்க… உங்களோட பேச்சு கா…” என்றாள் குழந்தைத்தனமாக
அவனுக்கு அந்த குழந்தைத்தனமான
ப்ரியா மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றான்.
“ஏன்.. ப்ரியா பேபிக்கு…
என்னோட பேச்சு கா…”
“பின்ன… இப்படி சொல்லாம
கொல்லாம வந்து நின்னா எப்படி… என்னால என்ன
செய்றதுன்னே தெரியல … முன்னாடியே சொல்லிருக்காலாம்ல ஏன் சொல்லல… அதான் உங்க பேச்சு
கா…”
“நான் சொல்லலாம்னுதான் நேத்து கால் பன்னேன் ஆனால் நீ வேற என்னை பார்க்க இன்னும் ஒரு வருசம் ஆகும்னு ஏக்கமா சொன்னியா… அதான் எனக்கு இப்படி ஒரு ஐடியா… தோனுச்சு…” எனச் சொல்லவே
“இனிமே என்னைவிட்டு போக
மாட்டேன்னு சொல்லுங்க…ப்ளீஸ் போகமாட்டீங்கல்ல…” என ஏக்கமாக கேட்க
“இல்லை… ப்ரியாகுட்டி…
இன்னும் ஒரு வருசம் நான் போயே ஆகனும்…” எனச் சொல்ல
“அப்படினா…. என்னையும்
குழந்தையும்… உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க…” என்றாள் அவன் கண்ணத்தில் முத்தம் ஒன்றை
கொடுத்தவாறு.
அதைப் பற்றி இதுவரை இவன்
யோசித்ததே இல்லை, இப்பொழுது ப்ரியா சொன்ன அந்த யோசனை கதிருக்கும் பிடித்திருந்தது, அவளோடு எப்பொழுதும் பக்கத்தில் இருக்கலாம் இல்லையா, இனிமேலும் இவளைப் பிரிந்து இருப்பது
முடியாத காரியம் என்றே தோன்றியது, அதைப் பற்றி அப்பறம் முடிவு செய்யலாம் என நினைத்தவன்.
தனது ஒரு வருடப் பிரிவின்
ஏக்கங்களை தீர்ப்பதற்காக அவளை குழந்தைப் போல் தூக்கிக் கொள்ள அவள் அவன் கழுத்தை கட்டிக்
கொண்டாள், அப்படியே மெத்தையில் சரித்தவன் தானும் சரிந்தான்.
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
ஒன்று தொடங்கியது… அந்தக் காதல் போர் நீண்ட நேரமாக நடந்தது… அந்தப் போரில் தோற்றது
யார் ஜெயித்தது யார் எனச் சொல்ல முடியவில்லை,
உன்மையைச் சொல்லப் போனால், தோற்றது இரண்டு பேரும்தான்… அவன் அவளிடமும், அவள் அவனிடமும்
தொற்றுப் போனார்கள்,
என்னதான் தொற்றுப் போனாலும்,
மீண்டும் மீண்டும் அந்த காதல் போர் நடந்தேறியது…. அவன் அவளிடமும் அவள் அவனிடமும், தாங்கள்
தொலைத்துவிட்டதை தேடினார்கள்,
ஆனால் அது கிடைப்பது போல்
தெரியவில்லை, மீண்டும் மீண்டும் தேடினார்கள், தேடியது கிடைக்கவே இல்லை,இறுதியில் கிடைத்தது என்னவோ
இருவரின் அளவில்லாத காதல்தான்.
குளித்துவிட்டு வெளியே வந்தான் கதிர். குழந்தையை கொஞ்ச வேண்டும்
என ஆசைதான் ஆனால் அதன் உறக்கத்தை கெடுக்க மனமின்றி குழந்தையை தூக்கவில்லை.
“ப்ரியா நான் கீழ போறேன்
அம்மாகிட்ட சரியா பேசல நான் போய் பேசிட்டு இருக்கேன் நீ குளிச்சிட்டு கீழே வா…” என கனிவான குரலில் சொல்லிவிட்டு,
உடை அனிந்து கீழே செல்ல துரைச்சாமியும் விசயம் அறிந்து வந்திருந்தார்.
கதிர் அவர்களிடம் தனக்கு
துபாயில் ஏற்பட்ட அனுபங்களைப் பற்றி கதையளக்க ஆரம்பித்தான்.. பேசிக் கொண்டு இருக்கும்
தனது மகனிடத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிந்தது, அவன் பேசுவதில் ஒரு நிதானம் வந்திருந்தது தெரிந்தது.
முன்பு வேலைக்குப் போகாமல்
சுற்றிய கதிர் இல்லை இவன், கட்டாயப் படுத்தியதும் கடமைக்கு ஆஃபிஸ் வரும் கதிர் இல்லை
இவன் எனப் புரிந்தது.
ஒரு நிறுவனத்தைத் தனியாகப்
பொறுப்பேற்று நடத்தும் அளவிற்கும் முன்னேற்றம் வந்திருந்தது தெரிந்தது.
இனி தான் ஓய்வெடுக்கும்
காலம் வந்துவிட்டதாக நினைத்தார் துரைச்சாமி.
கொஞ்ச நேரத்தில் மாடியில்
இருந்து இறங்கி வந்தாள் சுகப்ரியா.
குளித்து முடித்து ஒரு வாயில் சீலை உடுத்தி அளவான மேக்கப்போடு, முகத்தில் வெட்கச்சிவப்பை பூசிக்கொண்டு ஆளை அசத்தும் அழகோடு இறங்கி வந்தவளை பார்த்த கதிர் கிறங்கிப் போனான்
குளித்து முடித்து ஒரு வாயில் சீலை உடுத்தி அளவான மேக்கப்போடு, முகத்தில் வெட்கச்சிவப்பை பூசிக்கொண்டு ஆளை அசத்தும் அழகோடு இறங்கி வந்தவளை பார்த்த கதிர் கிறங்கிப் போனான்
அந்த அழகு மொத்தமும் எனக்குத்தான்
சொந்தம் என்ற கர்வம் எழுந்தது கதிருக்கு.
ப்ரியாவின் முகத்தில் வெட்கத்தை
கண்டதும், புரிந்து கொண்டார்கள் கதிரின் பெற்றோர்கள், இரண்டு பேருக்கும் சுமூகமான நிலை
இருப்பதை அறிந்து கொண்டார்கள்.
மதிய உணவை முடித்து விட்டு
மேலே செல்ல குழந்தை விழித்துவிட்டிருந்தது, குழந்தையை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தான்
கதிர், அதுவும் தன்னை போன்ற ஒரு குழந்தை, அவனையே அவன் கையில் வைத்திருப்பது போல் உணர்ந்தான்.
பிஞ்சுக் கைகளை தொட்டுப்
பார்த்தான், பஞ்சுக் கண்ணங்களில் முத்தமிட்டான், கால்களை வருடி கொடுத்தான், தனது
குழந்தையை கைகளில் வைத்திருப்பதே பேரின்பமாக உணர்ந்தான், குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பித்து
ரொம்ப நேரம் ஆகி இருந்தும் தனது பார்வையை குழந்தையை விட்டு அகல மறுத்தது, ஆசை தீர
தன் குழந்தையை பார்த்தான், ஒரு வருடமாக வீடியோ சேட்டில் பார்த்து ஏங்கிய ஏக்கமெல்லாம் இந்த நிமிடம் தீர்ந்ததுபோல் இருந்தது.
குழந்தையை கையில் எடுத்ததும்
தன்னை மறந்துவிட்ட கணவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், தன் குழந்தையின்
மீதே அவளுக்கு பொறாமை ஏற்பட்டது அதற்கும் மேல் அவளால் பொறுக்க முடியவில்லை.
“க்கும்…” என சத்தம் கொடுக்க
அவன் என்னவென்பது போல் பார்க்க அவள் முறைத்தவாறே சொன்னாள்.
“அந்த குழந்தைய கொஞ்சுனது
போதும் கொஞ்சம் இந்த குழந்தையையும் கவனிக்கிரீங்களா…” எனச் சொல்லவே
இவனுக்கு சிரிப்புதான்
வந்தது, அவள் கையை பிடித்து அமற வைத்தவன் அவள் உள்ளங்கையில் முத்தமிட்டவாறே சொன்னான்
“நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் என் முதல் குழந்தை நீதான்டி… என் செல்லாம்… என் ஸ்வீட் பேபி…”என்றான் கதிர்
“நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் என் முதல் குழந்தை நீதான்டி… என் செல்லாம்… என் ஸ்வீட் பேபி…”என்றான் கதிர்
ப்ரியாவும் அவனை கட்டிக் கொண்டாள், கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாகப் போக கதிர் அவலை விலக்கி விட்டு சீரியசான குரலில் கேட்டான்.
“ப்ரியா… என்மேல எதுவும்
வருத்தம் இல்லையே….”
“நீங்க எத சொல்றீங்க எனக்கு விளங்கல”
“அதான் ப்ரியா… உன்னை நான் அசிங்கப்படுத்துனக்கு… என் மேல எதுவும் வருத்தம் இல்லையே…” என கேட்க
அவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னாள்
“அதை நான் எப்பவோ மறந்திட்டேன்…
இப்ப நான் உங்கமேல என் உயிரையே வச்சிருக்கேன்.. திரும்பவும் அதை ஞாபகப்படுத்தி இந்த
சந்தோசமான தருணத்த கெடுக்காதீங்க ப்ளீஸ்.. இப்ப நீங்க என் பக்கத்துல இருக்கனும், இப்ப
மட்டும் இல்லை எப்பவும் என் கூட இருக்கனும்… தயவு செய்து பழச மறுபடியும் கிழறாதீங்க, அத நினைச்சாலே…. எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு எங்கே திரும்பவும் உங்களை நான் வெறுத்திடுவேனோன்னு,
அதனால ப்ளீஸ்… அதைப்பத்தி மட்டும் பேசாதீங்க…” எனச் சொன்னவள் எழுந்துக் கொண்டாள்.
அப்படியே சென்று சன்னலின்
வழியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவள் எழுந்து சென்றதும் இவனுக்கு ஏதோமாதிரி
ஆகிவிட்டது, ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது.
மெல்லக் குழந்தையை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, பின்னால் சென்று தோளில் கை வைத்தவன்.
“சாரிடா… கண்ணம்மா…” என்று மட்டும் சொன்னவன் வேறு எதுவும் சொல்லவில்லை.
மெல்லக் குழந்தையை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, பின்னால் சென்று தோளில் கை வைத்தவன்.
“சாரிடா… கண்ணம்மா…” என்று மட்டும் சொன்னவன் வேறு எதுவும் சொல்லவில்லை.
அடுத்தடுத்து வந்த நாட்கள்
எல்லாம் அவர்களின் வாழ்வில் வசந்த காலமாக மாறி இன்பமயமாக இருந்தது.
வீட்டிற்குள்ளேயே… கிடந்து
போர் அடிக்கவே ஒரு நாள் வெளியேச் செல்லலாம் என முடிவு செய்தார்கள்.
அன்று காலை இருவரும் கிளம்பி
கீழே வர துரைச்சாமி டிவி இல் செய்தி பார்த்துக் கொண்டு இருந்தார்.
அந்த செய்தியில்,
“ஆள் கடத்தல் விவகாரத்தில் கூலிப் படைத்தலைவனான அருவா ஆறுச்சாமி கைது செய்யப் பாட்டார்… கூடவே இருந்து உதவி செய்த ட்ரைவர் நல்ல தம்பியும்… இன்னும் சில அடியாட்களும் கைது செய்யப் பட்டனர்….” என்ற செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
அந்த செய்தி துரைச்சாமிக்கும்,
கதிருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் அவர்களைவிட அதிகமாக மகிழ்ச்சியடைந்தது
சுகப்ரியா என்று சொன்னால் அது மிகையாகாது.
காலை உணவை முடித்துக் கொண்டு
இருவரும் கிளம்பினர்.
கதிர் தான் ஆசைப்பட்டது
போல் தனது ஹோன்டாவில் அவன் காதலி தன்னை கட்டி அணைக்க இன்பமாக பயணம் செய்தான்.
அன்று அவர்கள் இருவரும்
புதிதாக காதலிக்க ஆரம்பித்த காதலர்கள் போல் பார்க் சாப்பிங் மால் எனச் சுற்றினார்கள்.
ப்ரியா வழக்கம் போல் ஐஸ் க்ரீம் வாங்கிக் கேட்டு அடம் பன்னவே
வேறு வழி இல்லாமல் வாங்கி கொடுக்க,ஒரு சிறு பிள்ளை போல் சாப்பிடும் தனது காதல் மனைவியையே ஆசையாகப் பார்த்தான்.
அவள் சாப்பிட சாப்பிட அவளுக்கு திகட்டவில்லை, அவனும் அவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை… இவள் சாப்பிட்டுக் கொண்டே இருக்க அவன் பார்த்துக் கொண்டே இருக்க,
“சார்.. வெண்ணிலா ஃப்ளேவர்
தீர்ந்து போச்சு வேற ஃப்ளேவர் கொண்டு வரவா” என சர்வெர் பையன் சொல்லவும்தான் நடப்புக்கு
வந்தான் கதிர்.
“இல்லப்பா போதும் பில்
கொண்டு வா..” என சொல்லவே அவன் சென்றுவிட
கதிர் தன் மனைவியை செல்லமாக
முறைக்க அவள் கண்ணத்தில் ஐஸ் க்ரீம் வழிய அவள் அசடு வழிந்தாள், இவன் அவள் கண்ணத்தில்
இருந்த ஐஸ் க்ரீமை எடுத்து தன் வாய் அருகே கொண்டு செல்லும் முன் அவள் படக்கென அவன்
கையை பிடித்து தன் வாயில் வைத்து இழுத்துக் கொண்டாள், இவன் ஏமாற்றத்தோடு அவள் தலையில்
செல்லமாக தட்டினான்…அவளும் செல்லமாகச் சினிங்கினாள்.
பிறகு அங்கிருந்து கிளம்பி
சேகர் வீட்டிற்குச் சென்றார்கள்.
கதிர் சேகரை அனைத்துக்
கொண்டான்.
“உன்னைபோல் ஒரு நண்பன்
கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்டா…. எனக்காக அந்த ஆறுச்சாமி கால்ல விழுந்து உன்
காலை உடச்சிக்கிட்டு என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம்டா…”
“என்னடா மச்சான் உனக்காக இது கூட செய்யலைனா நான் என்னடா ஃப்ரெண்ட்” என உருக்கமாக பேசவே
“ஜாலியா இருக்கலாம்னு இங்க வந்தா…, நீங்க ரெண்டு பேரும் இப்படி பன்றீங்களேப்பா… போதும்பா… உங்க ஃபீலிங்சுக்கு அளவே இல்லாமப் போச்சு…” என ப்ரியா சொல்ல
கதிரும் சேகரும் ஒரு சேர
ப்ரியாவை முறைக்க, ப்ரியாவும் வாய்விட்டுச் சிரிக்க அந்தச் சிரிப்பில் சேகரின் மனைவி
கார்த்திகாவும் கலந்து கொண்டாள்.
சேகர் சாப்பிட்டு விட்டுச்
செல்லுமாறு சொல்லவே, அங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பியவர்கள் நேரே ப்ரியாவின்
வீட்டிற்குதான் சென்றார்கள்.
வேதவள்ளி இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்காத குறையாக வரவேற்றாள்.
மதியமே வந்திருக்கலாமே இங்கேயே சாப்பிட்டிருக்கலாம் என குறைப்பட்டுக் கொண்டாள்.
மதியமே வந்திருக்கலாமே இங்கேயே சாப்பிட்டிருக்கலாம் என குறைப்பட்டுக் கொண்டாள்.
பாக்கியநாதன் ஆஃபிஸ் போய்விட்டதாகச்
சொன்னாள், ரெண்டு பேரும் இருந்து மாலை டீ, காப்பி குடிச்சிட்டு போங்க எனச் சொல்லவே, மாலை வரை அங்கேயே இருந்தார்கள்.
மொட்டமாடியில் நின்றிருந்தார்கள்
ப்ரியாவும் கதிரும்.
“கதிர் என்னால இந்த நாளை
என்னைக்குமே மறக்கவே முடியாது…”
“அப்படி என்ன சம்திங் ஸ்பெசல்”
“நீங்க கிடச்சதே எனக்கு ஸ்பெசல்தான், உங்க பின்னாடி பைக்ல உக்கார்ந்துக்கிட்டு உங்களை அணைச்சுக்கிட்டு இப்படி பயணம் பன்னனும்னு எத்தனை நாள் ஆசை தெரியுமா…? அது இன்னைக்குதான் நிறைவேறி இருக்கு…”
இவனுக்கு வியப்பாக இருந்தது
தான் நினைத்ததையே இவளும் நினைக்கிறாளே என்று இதைத்தான் சேம் வேவ்லெந்த் என்பார்களோ
காதலாகப் ப்ரியாவை பார்த்தவனுக்கு
அந்த விபரீத ஆசை வந்தது, அது மொட்டை மாடி என்றும் பாராமல் முத்தமிட நெருங்கவே… அவள்
சுதாரித்து விலகி அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்த ரூமிற்க்குள் நுழைந்து அவனது ஆசையை
நிறைவேற்றினாள்.
பிறகு கீழேச் செல்ல மரகதம்
இருவருக்கும் காபி போட்டுக் கொடுக்க இருவரும் குடித்துவிட்டு விடை பெற்றார்கள்.
கதிர் வண்டியை தனது வீட்டை
நோக்கிச் செலுத்த
“கதிர்…”
“என்னம்மா… பேபி”
“இப்ப ஒரு இடத்துக்கு போலாமா…”
“அதான் காலைல இருந்து பல இடங்களுக்குச் சுத்திட்டோமே…”
“இந்த இடம் சம்திங் ஸ்பெசல்…. நாம ரெண்டு பேரும் காதலிக்கும்
போது அடிக்கடி சந்திக்கிற இடம்…. நாம கடைசியா சந்திச்ச இடமும் அதுதான்…”
“ஓஹ்… அப்படியா… என்ன இடம் அது…”
“தெப்பக் குளம்…”
“என்னது தெப்பக் குளமா… அடப்பாவி கதிர் உனக்கு காதல் பன்ன வேற இடமே கிடைக்கலையாடா… அங்கு எதுவுமே பன்ன முடியாதேடா… ”என தன்னையே குறைபட்டுக் கொண்டு வண்டியை தெப்பக்குளத்தை நோக்கி விட்டான்
“ஓய்.. என்னைப்பத்தி உங்களுக்கு முழுசா தெரியாதுன்னு நினைக்கிறேன் அந்த மாதிரி எதுவும் பன்னக் கூடாதுன்னுதான் இந்த இடத்த சூஸ் பன்னதே..” என பதில் சொன்னாள் ப்ரியா…
ஒரு பத்து நிமிடத்தில் தெப்பக் குளம் வந்திருந்தது…. கதிர் வண்டியை நிப்பாட்டிவிட்டு ப்ரியாவின் தோளில் கைப் போட்டு இருவரும் ஒன்றாக தெப்பக் குளத்தை நோக்கிச் செல்ல
அவர்கள் வழக்கமாக அமரும்
இடத்தில் வேறு இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள்.
கதிரும் ப்ரியாவும் அவர்கள்
இருவரையுமே பார்த்துக் கொண்டிருக்க,
அந்தப் பையன் சொன்னான்
“சரி இப்ப என்ன பன்னலாம்னு சொல்ல வர்ற”
அந்தப் பெண் சொன்னாள் தீர்க்கமாக,
நிதானமாக.
"ஓடிப்போலாமா…?"
[முற்றும்]
Comments
Post a Comment
உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்