அவள் ஒரு தேவதை-1
அவள் ஒரு தேவதை
எபிசோட்-1
அவள் ஒரு தேவதை.!
கிழிந்த ஆடையும், பொழிவிழந்த
முகமுமாய்,
சாலையோரம் படுத்திருக்கும்
வயதானப் பெரியவருக்கு
உணவளிக்கிறாள் பெண்ணொருத்தி
அவளும் ஒரு தேவதைதான்.
விமானம் வாசிங்டென் நகரில்
இருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டு ஒன்றரை
நாள் முடிந்திருந்தது…
காலை மணி ஆறு… இன்னும் சில
மணி நேரங்களின் அந்த மேக்னீசியம் கலந்த அலுமினியப் பறவை தமிழ் மண்ணை முத்தமிட்டு சரணடைந்துவிடும்…
ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த
கார்திக்கின் கண்களில் கலக்கம் தெரிந்தது… இந்த விமானப் பயணம் எப்பொழுது முடியும் என்று
சொல்வதுபோல் இருந்தது அவனது நடவடிக்கை… அடிக்கடி கையில் கட்டி இருந்த ரோலக்ஸ் வாட்சை
பார்த்துக் கொண்டான்…
அருகே அமர்ந்திருந்த அந்த
பெருசு தனது லொட லொட பேச்சை நிறுத்திக் கொண்டு அயர்ந்து உறங்கி இருந்தார்…
இரவு கார்திக்கின் மனநிலை
புரியாமல்… வீட்டு பக்கத்துக்கடையில் முட்டையின்
விலை அதிகரித்ததில் ஆரம்பித்து பார்லிமென்டில் நடக்கும் முறைகேட்டில் இருந்து,தான்
தன் மகன் குடும்பத்தை வாசிங்டென்னில் ஒரு மாதம் இருந்து பார்த்துவிட்டு வருவது வரை
சொல்லிவிட்டுத்தான் தூங்கினார் அந்த பெருசு..
அவர் சொல்லும் எல்லாவற்றுக்கும்
“உம்… உம்…” போட்டுக் கொண்டே அவர் சொன்னவற்றை எல்லாம் அசுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தவன்
அந்த பெரிய மனிதர், அவன் பாசையில்
பெருசு.. உறங்க ஆரம்பித்ததும் இவனும் கண்ணயர்ந்திருந்தான்
வழக்கம் போல் காலையில் விளிப்புத்
தட்டவே எழுந்து அமர்ந்து இந்த பயணம் எப்பொழுது முடியும் என்ற அவஸ்தையோடு மணியை பார்த்தவாறு
அமர்ந்திருக்கின்றான்
சிறு வயதில்
தன் தாயை இழந்த கார்திக் சென்னையில் நாங்கு
வருடம் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு அமெரிகாவில் வாசிங்டென் நகரில்
உள்ள பிரபல பழ்கலைக் கழகத்தில் எம். எஸ் படிப்பை முடித்தவனுக்கு மூன்று தலைமுறைக்கு
வேலை செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தார்
அவனது பாட்டனார்.
ஆனாலும் படித்து முடித்து சும்மா இருக்கப் பிடிக்காமல் தனது அறிவுக்கு
சவாலான வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தவனுக்கு அதுபோலவே நாசாவில் வேலை கிடைத்தது. அந்த வாய்ப்பை நழுவ விடாமல் அங்கேயே கடந்த ஒன்றரை
வருடமாக வேலை பார்த்து வந்தான்.
அப்பாவிற்கு
ஹார்ட் அட்டாக் ரொம்பவும் சீரியஸ் என்ற செய்தி தொலைபேசி மூலம் வர, உடனே அவசரகால விடுமுறை
கேட்க, விடுமுறை கிடைக்காததால் வந்த கோபத்தில் வேலையை ரிசைன் செய்து விட்டு சென்னையை நோக்கி விமானத்தில் புறப்பட்டு இதோ இப்பொழுது
டென்சனாக மணியை பார்த்தவாறு அமர்ந்திருக்கின்றான்
அந்த பெருசும்
தனது உறக்கத்தில் இருந்து விடு பட்டார்…. கண்ணில் குழி விழுந்து…. தலை முடியோடு தாடியும்
நரைத்துப் போய் காணப்பட்டது. அவரது முகம் தாடிக்குள் மறைந்துபோய் இருந்தது.. தாடியை
எடுத்துவிட்டு தலையில் டை அடித்தால்… ஐம்பது வயதிற்கு மேல் அவரது வயதை சொல்ல முடியாது...
அவரோடு சேர்ந்து
அவரது வாயும் விழித்துக் கொண்டது…
“என்ன தம்பி
நைட் நல்ல தூக்கமோ….?”
“ம்…”
“என்ன தம்பி
நானும் நேத்தில இருந்து பாக்குறேன் எதுவும் பேச மாட்டேன்ற…. நான் மட்டுமே பேசிட்டு
வாறேன்…” என அந்த பெருசு கேட்க
கார்த்திக்
அமைதியாக அவரைப் பார்க்க
“சரி விடுங்க
தம்பி நானே பேசறேன்….” என நேற்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பித்தார்…
“தம்பி உங்களுக்கு
எத்தனை வயசு….”
அவன் பதில்
சொல்லாமல் அவரை பார்க்க…
“தம்பி உன்னைத்தான்….
உன் வயசு என்னான்னு கேட்டேன்….”
“இ…இருபத்தி
ஆறு…. ஆகுது” என பதில் சொன்னவாறே அவரை ஏறிட்டான்
“ஓஹ்…. கல்யாணம்
ஆயிடுச்சா…. தம்பி”
“இல்லை பெரு…”என
நிறுத்திவிட்டு
“சார்… ஏன்
கேக்குறீங்க…?” எனக் கேட்டான்.
“என்ன தம்பி
இப்படி சொல்ற… கல்யாணம்லாம் காலா காலத்துல பன்னிப்புடனும் தம்பி… இப்ப வாழாம வேற எப்ப
வாழப் போறீங்க….”என அந்த பெருசு சொல்ல
கார்த்திக்
அமைதியாக அவர் சொல்வதை செவிமெடுத்தான்
“இப்ப என்னை
எடுத்துக்கோங்க…. எனக்கு நாளு தங்கச்சிங்க… அப்பா அம்மா ரெண்டு பேரும் என்கிட்ட ஒப்படச்சிட்டு
போய் சேர்ந்திட்டாங்க…. நாளு பேரையும் கர சேர்த்திட்டு திரும்பிப் பார்த்தால் நான்
மட்டும் தனியா நிக்கிறேன்…. வயசும் 35 ஆயிடுச்சு… அப்பதான் நான் என்னோட கல்யாணத்தைப்
பத்தி யோசிச்சேன்….. கல்யாணமும் பன்னிக்கிட்டேன்…” என நிறுத்தியவர் நிதானித்து மீண்டும்
ஆரம்பித்தார்..
“அந்தந்த வயசுல
வாழவேண்டிய வாழ்கையை வாழ்ந்திடனும் தம்பி… 35 வயசுல பொண்டாட்டியோட ஓடிப் பிடிச்சு விளையாட
முடியுமா ? என்ன நான் சொல்றது…. எனச் சிரித்தவர் மேலும் தொடர்ந்தார்…
அந்தந்த வயசுக்குன்னு
ஒரு வாழ்கை இருக்கு தம்பி.. அதை வாழ வேண்டிய நேரத்துல சந்தோசமா மன நிறைவோட வாழ்ந்திடனும்….
அதனாலதான் பாருங்க
என்னோட மவனுக்கு 22 வயசுலேயே கல்யாணத்தை முடிச்சிட்டேன், இப்ப ஒரு பேரக் குழந்தை பெத்துக்
கொடுத்திட்டான் என் மவன்…” என பெருமிதம் அடைந்துக் கொண்டார் பெருசு…
இதெல்லாம் எதுக்கு
என்கிட்ட சொல்லிட்டு இருக்காரு இந்த பெருசு என எண்ணமிட்டவாறே அவரை பார்க்க
அவன் மனதை படித்தவர்
போல்…
“இதெல்லாம்
ஏன் உன்கிட்ட சொல்றேன்னா… காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பன்னி குழந்தை குட்டின்னு சந்தோசமா
வாழுங்க தம்பி… இப்ப விட்டா போன காலம் திரும்ப வராது… காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள
வேண்டும் தம்பி…” என இடையில் பழமொழியையும் சேர்த்துக் கொண்டார்…
அய்யய்யோ….
என்னடா இந்த ஆளு… இப்படி ஆரம்பிச்சிட்டாரு….. இப்படி மொக்கை போட்டு கொல்லுறார்யா… என
நினைத்துக் கொண்டவன் எழுந்துக் கொண்டான்…
“தம்பி எங்க
எழுந்திட்டீங்க…”
திரும்பி பார்த்தவன்
“ரெஸ்ட் ரூம் போரேன் சார்..” என சொல்லிவிட்டு வேகமாக அவரிடம் இருந்து விலகிச் சென்றான்…
ரெஸ்ட் ரூம்
சென்று பேஸ்வாஸ் செய்து கொண்டு மீண்டும் தனது இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். குளிர்ந்த
நீர் முகத்தில் பட்டதும் ஒரு புத்துணர்வு வந்து மனதில் குடி கொண்டது. மனம் லேசானது
போல் தோன்றியது.
கார்த்திக்
அவரிடம் எதாவது பேச்சு கொடுக்கலாமே என்ற எண்ணத்தில்
“சார் உங்க
கூட உங்க வைஃப் வரலையா….” என்றான் அவரை பார்த்தவாறு.
சட்டென்று அந்த
பெரியவரின் முகம் வாடிப் போனது….
சில கணம் தனது
கண்ணை மூடி திறந்தவர்
“அவ போய்ட்டாப்பா…
போய்ட்டா…. எப்ப என் முதல் மகன் விபத்துல செத்துப் போனானோ அப்பவே அவளும் என்னை விட்டு
போய்ட்டா…” என்றவரின் குரல் அவருடைய பேரிழப்பைச் சொன்னது, கண்ணிலும் சிறுதுளி நீர்.
அவரின் சோர்வடைந்த
கண்ணீர் முகத்தை கண்டவனுக்கு… ஏன்டா கேட்டோம் என்றாகி விட்டது..
“சா..சாரி சார்….”என்றான்
உன்மையான வருத்தத்துடன்.
அவரும் “பரவா
இல்லை தம்பி.. அது அவங்க விதி... என்னை விட்டுட்டு போகனும்னு” என்றுவிட்டு கண்ணை துடைத்துக்
கொண்டவர் அமைதியை துணைக்கு அழைத்துக் கொண்டார்.
இத்தனை நேரம்
பேசிக் கொண்டே வந்தவர் திடீரென அமைதியாகிப் போனது… கார்திக்கிற்கு அவரின் மனநிலையை
புரிந்து கொள்ளச் செய்தது மேலும் அவரிடம் எதுவும் கேட்காமல்… மீண்டும் தனது கண்ணை மூடி
சீட்டில் சாய்ந்து கொள்ள…
சிறிது நேரம்
அப்படியே அமைதியாகச் சென்றது…. திடீரென அந்த பெரியவருக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது….
மூச்சுக்குத் திணறியவர் போல் காணப்பட்டார்… சத்தம் கேட்டு திரும்பியவன் அதிர்ந்தான்….
செய்வதறியாது…..
“சார் சார்….. என்னாச்சு…. சார்….”என கேட்க
அவர் வேகமாக
மூச்சை இழுத்துக் கொண்டே… அவருடைய பையை நோக்கி தனது கையை காண்பித்தார்….
கார்த்திக்
வேகமாக பையை திறந்து உள்ளே இருந்த டப்பாவை எடுத்தான்… அது ஒரு பர்ஸ்ட் எய்டு பாக்ஸ்
மாதிரி இருந்தது… மருந்து மாத்திரைகள் இருந்தது.. கூடவே மூச்சுத் தினறலுக்கான, வீசிங்கை
நிறுத்துவதற்கான இன்ஹெலர் இருந்தது..
உடனே அதை எடுத்து
அவரின் வாயில் வைத்து அழுத்த……. சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு வந்தார்… அவரது
மூச்சு சீரானது
சிறிது நேரம்
சுகமாக மூச்சு விட்டவர்…
“ரொம்ப நன்றி
தம்பி….” என்றார் கார்த்திக்கின் கை பிடித்து..
“என்ன சார்….
இவ்வளவு பிரச்சனையை வச்சிக்கிட்டு இப்படி தனியா வரலாமா…?” என்றான் கண்டிப்பான குரலில்
“என்ன பன்றது
தம்பி….. எல்லாம் என்னை விட்டுட்டு போய்ட்டாங்க…. இன்னும் கொஞ்ச நாள்ல நானும் நிம்மதியா
அவங்க கூட போய் சேர்ந்துக்குவேன்…” என்றார் பெருமூச்சை வெளியிட்டபடி
“அட என்ன சார்….
இப்படிலாம் பேசிக்கிட்டு… உங்க மகன் கூடவே இருந்துடலாம்ல….”
“அவனும் இப்படித்தான்
சொன்னான்…. ஆனால் எனக்கு இதுல விருப்பம் இல்லை தம்பி…. என்னோட உயிர் என் சொந்த மண்ணுலதான்
போகனும்…. என்னோட உடல் நம் தமிழ் மண்ணுக்குத்தான் உரமாகனும்…” என்று சொன்னவரின் குரலில்
ஒரு உறுதி தெரிந்தது
.
கார்த்திக் அவரை பெருமை பொங்கப் பார்த்தான்…. பின் இருவருக்கும் இடையில் பெருத்த அமைதி நிலவியது,
கார்த்திக்
கண் மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான். அவனது அப்பா மாணிக்கம் மனதை ஆக்கிரமித்தார்….
கார்த்திக்கின்
அப்பா மாணிக்கவாசகம்…. சுருக்கமாக மாணிக்கம்.. கார்த்திக்கிற்கு நினைவு தெரிந்த நாட்களில்
இருந்தே தனது பாசத்தை பொழிபவர்…. அவரது மனைவி புற்று நோயால் இறந்த பின்னும் இன்னொரு
மணம் புரியாமல் தனது மகனுக்காக வாழ்ந்துக் கொண்டிருப்பவர்…
கார்த்திக்கிற்கும்
அப்பா என்றால் அவ்வளவு பிரியம்… சிறிய வயதில் அவன் தப்பு செய்யும் போதெல்லாம்… அவன்
அம்மா பார்வதி அவனை அடித்து துவைக்கும் பொழுது…. மாணிக்கம்தான் கார்த்திக்கிற்கு பரிந்து
பேசுவார்… “ஏண்டி சின்னப் பையனை போட்டு அடிக்கிற…
அடிக்காதேடி…” என மனைவியிடம் சண்டை போடுவார்…. அவரது
அப்பாவின் ஜாடையில் இருந்ததாலோ என்னவோ…. அந்த அளவிற்கு தனது மகனின் மேல் பாசத்தையும்
நேசத்தையும் சேர்த்து பொழிந்து வளர்த்தார்….
கார்த்திக்
தன் கண் முன்னே படித்து வளர்ந்தவன் திடீரென அமெரிக்கா சென்று படிக்கப் போவதாகச் சொன்னதை
அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… ஆனாலும் கார்த்திக்கின் பிடிவாதம் அவரை ஏற்றுக்
கொள்ள வைத்தது… படிப்பு முடிந்ததும் வந்துவிடுமாறு அழைத்தும் அவன் அங்கேயே வேலை செய்யப்
போவதாக மீண்டும் அடம்பிடித்து கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை செய்து வந்தவன்…
அப்பாவிற்கு
ஹார்ட் அட்டாக் என்றதும் துடித்துப் போனான்… அவசர அவசரமாக அடித்து பிடித்து.. இந்தியா
கிளம்பினான்.
கார்த்திக்
அப்பாவின் நினைவிலேயே மூழ்கிப்போய் இருக்க
அடுத்த சில
மணி நேரங்களில் விமானம் தரை இறங்குவதைப் பற்றிய அறிவிப்பு வந்தது… அனைவரும் கிளம்ப
ஆயத்தமானார்கள்….
அடுத்த பத்து
நிமிடத்தில்… சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது… விமானத்தை விட்டு வெளியேறி
சம்பிரதாயங்களை முடித்துவிட்டு வெளியே வர அரை மணி நேரம் பீடித்தது.
கார்த்திக்கிற்கு
முன்னதாகவே எமிக்ரேசன் முடிந்துவிட்டபடியால் அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு வர வாய்பில்லாமல்
போனது…
வாசலில் கார்த்திக்
வீட்டு கார் ட்ரைவர் சாமிதுரை நின்று கொண்டு இருந்தான்.
“கார்த்திக்
சார்…. எப்படி இருக்கீங்க…. நல்லா இருக்கீங்களா….?”என்றபடி சாமிதுரை கார்த்திக்கின்
கையை எடுத்து பிடித்துக் கொள்ள….
“அது இருக்கட்டும்…
அப்பாவுக்கு என்னாச்சு…. இப்ப எப்படி இருக்கார்…. டாக்டர் என்ன சொல்லிருக்கார்…. அப்பாவுக்கு
ஒன்னும் ஆகலைல…?”என பதட்டத்துடன் கேள்விகளை அடுக்கினான் கார்த்திக்…
கார்திக்கின்
கேள்விகளினால் நெற்றியை சுருக்கிய சாமிதுரை உடனே சுதாரித்து….. மாணிக்கம் சொல்லி கொடுத்ததுபோல்…
“அப்பாக்கு
இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை….. நேத்து நைட்டே டிஸ்ஜார்ஜ் பன்னிட்டாங்க…” என்றான்
சாமியின் பதிலில்
சில நொடிகள் நிம்மதியடைந்த கார்திக் மீண்டும்
அடுத்த கேள்வியை அவனிடம் முன் வைத்தான்…
“அப்ப எதுக்கு
அப்பாக்கு ரொம்பவும் சீரியஸ்னு கால் பன்னின…”
கார்த்திக்கின்
கேள்வியில் தடுமாறியவன்…. பின்பு சமாளித்து..
“போன் பன்னும்போது
ரொம்ப சீரியஸா இருந்தார்.. இப்ப சரியாயிடுச்சு….”என்றவனின் தடுமாற்றத்தை மனதில் பதிய
வைத்துக் கொண்டான் கார்த்திக்..
அதன் பிறகு
அவனிடத்தில் ஒன்றும் கேளாமல்… காரை நோக்கிச் செல்வதற்காக திரும்பி நடக்க எத்தனிக்க…
கார்த்திக்கின்
தலை நச்….சென்று எதிலோ இடிக்க…. தலையை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவேறே…
“பார்த்து வரமாட்ட
கண்ணை என்ன பொரடிலயா….?” என சொல்ல வந்ததைச் சொல்லாமல் அப்படியே உறைந்து போய் நின்றான்.
கருப்பு நிறச்
சுடிதாரில் வெள்ளை நிற தேவதையாக நின்றிருந்தாள் அவள்… இறக்கைகள் மட்டும் காணவில்லை…
கார்த்திக்கை
கண்டு சில நொடிகள் அவளிடம் ஒரு திகைப்பு… பின்பு அதை மறைத்தவளாக தனது தலையை தேய்த்துவிட்டுக்
கொண்டு..
“ஹலோ மிஸ்டர்….
பார்க்காம வந்து இடிச்சது நீங்க…” என்றுவிட்டு அவனை பார்க்க…
அவனிடம் பதிலில்லை….
இவள் சொன்னது காதிலே விழாதவனாக…. இந்த தேவதையைக் கண்ட மயக்கத்தில் உறைந்துபோய் நின்றிருந்தான்…
அழுத்திப் பிடித்தால்
இரத்தம் தெறிக்கும் மெல்லிய தேகம் அவள்… பவுர்ணமி வட்ட நிலவு அவளது முகம்… அதில் மையிட்ட
படபடக்கும் இரு விழிகளின் இமைகள்…. அவளுக்கென அழவெடுத்து செய்ததுபோல் கூரிய நாசி… அதற்கும்
கீழ் ரோஸ்நிற சாயமில்லா தேனூறும் மெல்லிய பவள இதழ்கள்….
கார்த்திக்
அந்த அழகு தேவதையை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்க…
அவனிடம் பதிலில்லாது
போகவே… தனது தோள்களை குலுக்கிக் கொண்டு அவள் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர முயல..
அப்பொழுதுதான்
தன்னிலை உணர்ந்தான் கார்த்திக்…. அவளை நோக்கி…
“ஹேய்… ஏஞ்சல்….
தெரியாம இடிச்சதுக்கு சாரி..”
கார்த்திக்கின்
குரல் அவளை நிறுத்தியது…. அவள் திரும்பி
“என்னது ஏஞ்சலா…?”
என்றாள் அதிர்ச்சி குரலில், அவளது முறைப்பை கண்டவன்
“ஓஹ்… சாரி….
உன் பேரு எனக்கு தெரியாதில்லையா…. அதான் தேவதை மாதிரி இருக்குற உன்னை ஏஞ்சல்னு கூப்பிட்டேன்….” எனச் சொன்னவன் சிறிது தயங்கி
“உன் பேரை நான்
தெரிஞ்சிக்கலாமா…..?” எனக்கேட்டவனை வித்தியாசமான பார்வையில் முறைத்தவள்…
“ஹலோ… தெரியாம
என் தலைல இடிச்சீங்க…. சாரி கேட்டுட்டீங்க….. அப்புறம் என்ன….? என் பேரு தெரிஞ்சுக்கிட்டு
என்ன பன்ன போறீங்க….? ஹ்ம்…..?” என அவனையே அவள் திரும்ப கேள்வி கேட்க
கார்த்திக்
என்ன சொல்வது என்று தெரியாதவனாக… சில நொடிகள் அவளைப் பார்த்தான் பின்பு
“இட்ஸ் ஓக்கே….”என்றுவிட்டு
அவளைப் போலவே தனது தோள்களை குலுக்கிக் கொண்டு வாசலை நோக்கி நடக்கலானான்…
ட்ரைவர் சாமிதுரை
அவனது பெட்டியை காரின் டிக்கியில் வைத்துவிட்டு கார்த்திக்கிற்காக காத்திருக்க….
கார்த்திக்கின்
மனது அவளை அசைபோட்டது….. “யப்பா…. என்னா அழகுடா
சாமி….” என கார்த்திக் வாய் விட்டு சொல்லிவிட
“என்ன சார்
கூப்பிட்டீங்களா…..?” என சாமிதுரை கார்த்திக்கின் அருகே வந்தான்…
கார்த்திக்
கண்ணை மூடி தனது தலையை உதறிக் கொண்டான்….
“இல்லை சாமி…
ஒன்னுமில்ல போய் கார எடு..” என்று சொல்லிவிட்டு காரின் கதவை திறந்து கொண்டு உள்ளே அமர்ந்தவன்…
மீண்டும் அவளைப் பார்த்துவிடும்
ஆவலில் ஏர்போர்டின் உள்ளே பார்வையை செலுத்த அவள் கண்ணில் படவில்லை…. கார் வேகமெடுத்து
கார்த்திக்கின் வீட்டை நோக்கிப் பயணித்தது..
அரை மணி நேரப்
பயணம், பூந்தமல்லி ஏரியாவில் இருக்கும் சாதிக் நகரில் உள்ள நான்காவது சந்தில் நுழைந்த
வண்டி சீரமைக்கப்படாத மேடு பள்ளங்களில் வண்டி குலுங்கி குலுங்கி தவழ்ந்து ஊர்ந்து சென்று
ஒரு வீட்டின் முன்னே….. இல்லை இல்லை ஒரு பங்களாவின் முன்னே நின்றது… சாமிதுரை ஹாரன்
அடிக்க… வாட்ச்மேன் கேட்டை திறந்துவிட கார்
உள்ளே சென்று போர்டிக்கோவில் தஞ்சம் புகுந்து
நின்றது.
“சே…. என்ன
ஊருயா… இது, இந்த ரோட்ல இன்னும் நாலு தடவ வண்டில போனால் போதும் ஒரு அம்பளையே பிள்ளை
பெத்துடுவான் போல….” என சலித்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினான் கார்த்திக்…
“என்ன சார்
பன்றது… நமக்கு வாய்ச்ச ஏரியா கவுன்சிலர் அப்படி…” என அவனுக்கு பதில் சொன்னபடியே காரைவிட்டு
இறங்கி லக்கேஜ்களை எடுத்துக் கொண்டான்…
வாசலில் கார்
சத்தம் கேட்டு வெளியே வந்திருந்தார் மாணிக்கம்….
கதவைத்திறந்துக்
கொண்டு உள்ளே சென்ற கார்த்திக் தனது அப்பாவைக் கண்டதும் கலங்கிப் போனான்….
அவரின் கண்களில்
கண்ணீர்த்துளி எட்டிப் பார்த்தது… வேகமாக வந்து தனது மகனை அனைத்துக் கொண்டார்…
“ஏன்யா…அப்பு….
நல்லா இருக்கியாயா….” என்ற மாணிக்கம் என்றும் பழமையை மறக்காத நல்ல மனிதர்…. தனது தாத்தா
விட்டுச் சென்ற சொத்துக்கள் என்றாலுமே…. அதை ஆடம்பரமாக செலவு செய்யாமல் ரொம்பவும் சிக்கனமாக
இருக்கக் கூடியவர்….
ஆனாலும் மாதமாகிவிட்டால்.. அனாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும்
நன்கொடையாக ஒரு பெரும் தொகையை தர மறக்கமாட்டார்… சாகும் போது இந்த சொத்துக்கள் எல்லாம்
கூடவே வரப்போறதில்லை… நாலுபேரின் நல்ல வார்த்தைகள் தரக்கூடிய சந்தோசமும் நல்ல பெயரும்தான்
என்றும் நிலைக்கும் என்பதை நன்கு உணர்ந்து வைத்திருப்பவர்….
மைலாப்பூரில் பெரிய காம்ப்ளக்ஸ்
கட்டி கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்… அதிலும் நல்ல வருமானம்…. ஆனாலும் மாணிக்கம்
சும்மா இருப்பதில்லை…. கூட நான்கு பேரை வேலைக்கு வைத்துக் கொண்டு…. சிறிய அளவில் ஏற்றுமதி,
இறக்குமதி பிஸினசையும் நடத்திவருகிறார்.. இவ்வளவுதான் மாணிக்கம்.
“நா…நான்..
நல்லா இருக்கேன்பா…. முடியாத நேரத்துல ஏன்பா வெளியலாம் வந்துக்கிட்டு, உங்களுக்கு இப்ப
எப்படி இருக்கு, டாக்டர் என்ன சொன்னாரு… ஒன்னும் பிராப்ளம் இல்லையே… சொல்லுங்கப்பா…?”
“இல்லய்யா…
இல்ல… ஒன்னும் பிரச்சனை இல்லை…. நீ வந்துட்டேல்ல இனி ஒன்னும் பிரச்சனை இல்லை….” என்றபடி
அவனை அனைத்துக் கொண்டு நின்றிருந்தார்..
“சரி வாங்கப்பா…..
உள்ள போய் பேசலாம்…….” என்றுவிட்டு தோளோடு அனைத்தபடி உள்ளே செல்ல, ட்ரைவர் சாமிதுரை
லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் வைத்துவிட்டு
வெளியே சென்றுவிட
இருவரும் சோபாவில்
அமர்ந்தனர்… “என்ன மகனே இப்படி பன்னிப்புட்ட…. மூனரை வருசமா உன்னை பிரிஞ்சு ரொம்ப தவிச்சுப்
போயிட்டேன்டா.. என் மகன் சாப்பிட்டானா… இல்லையா…? அவனுக்கு ஒரு பிரச்சனையும் வரக்கூடாதேன்னு…
எல்லாம் உன் நினைப்புதான்.. மகனே…” என்று அவன் மீது வைத்திருந்த பாசத்தை கொட்ட…
“என்னப்பா நீங்க
பொம்பளை பிள்ளையாட்டம் பேசிக்கிட்டு இருக்கீங்க…. நான் இன்னும் என்ன சின்ன பையனா… என்
மேல உங்களுக்கு நம்பிக்கை வரலையேப்பா… எதுவா இருந்தாலும் ஒத்தை ஆளா நின்னு சமாளிப்பேன்பா….
நான் எங்க போனாலும் நினைவெல்லாம் இங்கதான்பா இருக்கும்….” எனச் சொல்ல
“உன் மேல நம்பிக்கை
இல்லாம இல்லை அப்பு…. காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு அப்பு அதான் மனசு கிடந்து அடிச்சிக்கிட்டே
கிடந்துச்சு…”
“சரி அதை விடுங்கப்பா
அதான் வந்துட்டேன்ல…. டாக்டர் என்ன சொன்னார்… உங்க ரிப்போர்டை நான் பார்க்கனுமே…. அப்பதானே
உங்களை நான் நல்லபடியா பார்த்துக்க முடியும்…” என கார்த்திக் சொல்ல
மாணிக்கம் திரு
திருவென முழித்தார்… “அ.. அது..அது.. எதுக்குடா மகனே எனக்கு ஒன்னுமில்லடா…. சரி வா…
சாப்பிடலாம்….” எனச் சமாளித்தவராக
“ஏய்… கோகிலா…
டிபன் ரெடியா….” என மாணிக்கம் சத்தம் கொடுக்க…
“ரெடிங்க ஐயா….”என
சமயல்காரப் பெண்ணிடம் இருந்து பதில் வந்தது…
சாமிதுரை தடுமாறியதிலும்…
அப்பா பேச்சை மாற்றுவதிலும்
உறுத்தலாக இருக்க… உடனே தனது அப்பாவிடமே கேட்டான்..
“அப்பா…. பேச்சை
மாத்தாதீங்க….. உங்க ஹெல்த் ரிப்போர்டை நான் பார்த்தே ஆகனும்…”என பிடிவாதமாகச் சொல்லவும்…
மாணிக்கம் நெளிந்தார்…
“என்னப்பா…
உங்க ஹெல்த் ரிப்போர்டை நான் பார்க்கக் கூடாதா….” என்றான் மெல்லிய குரலில்
சிறிது நேரம்
தயங்கியவர்….. பின்பு சொன்னார்.
“அது.. அதுவந்து
மகனே எனக்கு ஒன்னுமில்லடா….. உன்னை சும்மா
கூப்பிட்டா ஊருக்கு வரமாட்டேன்னு நான் தான் எனக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்ல சொன்னேன்….”
அப்பாவிற்கு
ஒன்றுமில்லை…. என்றதும் ஒருபுறம் மனம் மகிழ்ந்தவன்…
“ஏன்பா….? உங்களுக்கு
கொஞ்சமாவது அறிவிருக்கா….? நான் எப்படி துடிச்சிப் போயிட்டேன் தெரியுமா…..? சே… போங்கப்பா….”
என சலித்துக் கொண்டான் கார்த்திக்
“எனக்கு வேற
வழி தெரியலை மகனே… அடுத்தவாரம் உனக்கு கல்யாணம் பேசிருக்கும்போது உன்னை உடனே வரவழைக்க
இதுதான் நல்ல யோசனையா இருந்தது….” என அடுத்து ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார் மாணிக்கம்…
“என்னப்பா சொல்றீங்க….
எனக்கு கல்யாணமா….?” என்றான் அதிர்ச்சி நீங்காதவனாக..
ஆமாம் என்று
தலையாட்டினார் மாணிக்கம்…
“ஏன்பா நான்
என்னைக்காவது உங்ககிட்ட எனக்கு கல்யாணம் பன்னி வைங்கன்னு கேட்டிருக்கேனா…?”என எரிச்சல்
நிறைந்த குரலில் கேட்க
“அப்படி நீயா
என்கிட்ட கேட்டு கல்யாணம் பன்னிக்கக்
கூடாதுன்னுதான்…. நானா முடிவு பன்னேன்….. மேலும்
உனக்கு வயசு வேற ஏறிட்டே போகுது… இதுக்குமேல இப்படியே இருக்குறது சரிபடாது அப்பு…”என்றார்
மாணிக்கம்..
“அப்பா என்னப்பா
நீங்க…… இப்படி திடீர்னு கல்யாணம் பன்னிக்கோன்னு சொன்னா என்னப்பா அர்த்தம்….. எனக்கு
யோசிக்கக் கூட டைம் கொடுக்கல….. அடுத்த வாரம் மேரேஜ்னா என்னப்பா அர்த்தம்….” என்றான்
இயலாமையுடன்…
“நான் சொல்றதை
கேளு அப்பு…. பொண்ணு யாருன்னு தெரிஞ்சா… நீ இப்படி பேசமாட்ட….” என மாணிக்கம் சொல்ல
“யாரு….?”என
ஒட்டுதலே இல்லாத குரலில் சொல்ல
“பொண்ணு யாரு
தெரியுமா….? உன் அத்தை பொண்ணு சித்ரா… பொண்ணு பார்க்க அடக்க ஒடுக்கமா எவ்வளவு அழகா
என் பையனுக்கு பொருத்தமா இருக்கா…. அந்த பொண்ண நீ கட்டிக் கிட்டா நான் ரொம்ப சந்தோசப்
படுவேன்டா… அப்பு…” என்றார் மாணிக்கம்..
இப்பொழுது சித்ரா…
கார்த்திக்கின் மனக்கண்ணில் தோன்றினாள்….
இரட்டை ஜடை
போட்டுக் கொண்டு தோளில் பையை மாட்டிக் கொண்டு பள்ளியில் கார்த்திக்கோடு மாமா… மாமா…
என இழைந்துக் கொண்டு விளையாட்டுப் பிள்ளையாய் துள்ளிக் குதித்துக் கொண்டு ஜாலியான குறும்புக்
காரியாய், வளைய வருவாள்…. ஆம் அவள் அழகுதான்…. ஆனால் காலையில் ஏர்போர்ட்டில் பார்த்த
தேவதையின் அளவுக்கு அழகில்லை என்றாலும் அவளும் ஒருவித அழகு தேவதைதான்… கார்த்திக் ஒரு கணம் தடுமாறியவன்
“அப்பா நான்
கொஞ்சம் யோசிக்கனும்….”என்றான் மெல்லிய குரலில்….
“நல்லா யோசிடா…
அப்பு… ஆனால் பதில் மட்டும் எனக்கு சாதகமா இருக்கனும்….”
“என்னப்பா இது…..
இதுக்கு நான் யோசிக்காமலே இருந்துடலாம்….”
“சரிப்பா சாப்பிட்டு
போய் நல்லா யோசி….. இந்த விசயத்துல கண்டிப்பா என் பேச்சை நீ… மீற மாட்டேன்னு நினைக்கிறேன்…”
என மாணிக்கம் சொல்ல…
கார்த்திக்
யோசனையாக தனது அப்பாவையே சிறிது நேரம் பார்த்துக்
கொண்டிருந்தான்…
பிறகு சாப்பிட்டுவிட்டு
மேலே தனது அறைக்குச் சென்று பெட்டில் பொத்தென்று விழுந்தான்….
பயணக் களைப்பால்
சிறிது நேரம் கண் அயர்ந்தவன் ஒரு மணி நேரம்
கழித்து கண் விழித்தான்…
விட்டத்தையே
வெறித்துக் கொண்டு படுத்திருந்தவனின் மனது தனது அப்பாவைப் பற்றியே அசைபோட்டுக் கொண்டிருந்தது…
எனக்காக மறுமணம்
புரியாமல்… நான் கேட்டவை எல்லாம் வாங்கி கொடுத்து.. என் இஸ்டப் படி அப்ராட் அனுப்பி...
அங்கே படித்து…. வேலையிலும் சேர்ந்து…. எல்லாமே என் விருப்பப்படிதான் இதுவரை நடந்திருக்கிறது….
இப்பொழுது முதல்முறை அவர் முடிவு செய்திருக்கிறார்….. நான் இதை தவிற்ப்பது சரியா….? இதுவரை அவர் எனக்கு ஒரு நல்ல அப்பாவாக இருந்திருக்கிறார்,
இப்பொழுதும் இருக்கிறார்…. நானும் நல்ல மகனாக இருப்பதுதான் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்….
என நினைத்துக் கொண்டிருந்தவனின் மனதில்…
காலை ஏற்போர்ட்டில்
சந்தித்த….. அந்த தேவதை கண் முன்னே தோன்றினாள்….
கார்த்திக்கை
பார்த்து முறைத்தாள்.. கார்த்திக் அவளைக் கண்டு செயலற்று நின்றிருந்தான்…. இதுவரை இப்படி ஒரு பெண்ணை தன் வாழ்நாளில் அவன் சந்திக்கவில்லை…..
அவள் முறைத்தாலே இவ்வளவு அழகாய் தெரிகிறாளே….. வாய்விட்டுச் சிரித்தாள் என்றால்…?
தன் தலையை உதறிக்
கொண்டான் கார்த்திக்…. “இப்ப எதுக்கு இந்த தேவை இல்லாத நினைப்பு… பார்த்தோமா சைட் அடிச்சோமா
வந்தோமான்னு இல்லாம…. அவளையே திரும்ப திரும்ப நினைக்கிறதே இந்த பாழாய் போன மனது…. ஒரு
வேளை இதற்க்குப் பெயர்தான் காதலோ….? என ஒரு கணம் நினைத்தவன்… மறுகணமே…
இல்லை இல்லை….
இருக்காது…. இதே இடத்தில் ஒரு சராசரி அழகுள்ள பெண் நின்றிருந்தால் இப்படி நினைத்துக்
கொண்டு இருக்குமா இந்த மனது…. ஆக இது காதலில்லை…. அழகானப் பெண்ணை பார்த்ததும் வந்த
ஈர்ப்பு… இதை இப்பவே மறக்குறது நல்லது…. என
திரும்ப திரும்ப அவளையே நினைத்துக்கொண்டு கிடந்தான்
கார்த்திக்…
கண்ணை மூடினால்
அவளது தேனில் ஊரிய இதழ்கள் வந்து இம்சை செய்தது…. படக்கென படுக்கையில் இருந்து எழுந்தான்….
“ஊஹூம்….. இது
சரிபட்டுவராது….. எழுந்து கீழே போய்விட வேண்டியதுதான்….” என வேகமாக பாத்ரூமிற்குள்
புகுந்து முகத்தை கழுவிக் கொண்டு கீழே சென்றான்….
சோபாவில் அமர்ந்து
சன் ந்யூஸ் பார்த்துக் கொண்டிருந்தார் மாணிக்கம்….
கார்த்திக்
கீழே இறங்கி வருவது தெரிந்ததும்…. ரிமோட்டை எடுத்து டி.வியை அனைத்தவர்
“என்ன அப்பு…
நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தியா…..?” எனக் கேட்க
“ஹ்ம்ம் பா…”
என்றவாறே அவர் அருகில் வந்தமர்ந்தான்…
“ஹ்ம்ம் அப்பறம்
என்ன முடிவு எடுத்திருக்க….” என கேள்வியாக மகனைப் பார்க்க…
“நான் என்னப்பா
முடிவு எடுக்குறது….. இதுவரை எல்லாம் என் இஸ்டப்படி நடந்தது…. இந்த ஒரு விசயமாவது உங்க
முடிவுபடி நடக்கட்டும் பா…. எனக்கு நீங்க நல்லதுதான் நினைப்பீங்கன்னு எனக்கு தெரியும்
பா…” என்றான் கார்த்திக்..
“எனக்கு தெரியும்
அப்பு…. நீ சம்மதிப்பேன்னு…… ரொம்ப சந்தோசமா இருக்குடா…… இவ்வளவு சொத்து இருந்தும்….
இத்தனை நாள் தனியா, ஒரு வெறுமையான வாழ்கையைத் தான்டா வாழ்ந்தேன்…. இனி நீ கல்யாணம்
பன்னிக்கிட்டு இங்கேயே என் கூடவே இருக்கனும்டா… கூடிய சீக்கிறமே பேரனோ இல்ல பேத்தியோ
என் மடில தவழ்ந்து விளையாடனும்டா….. அதுலதான்டா இருக்கு உன்மையான சந்தோசமும் மன நிறைவும்….”
என்று நீளமாக தனது மனதில் உள்ளதை தன் மகனிடம் கூறினார் மாணிக்கம்.
“உங்க ஆசை நியாயமானதுப்பா…
உங்க ஆசைப்படியே இனி எல்லாம் நடக்கும்…. ஆனால் ஏன்ப்பா கல்யாணத்தை இவ்வளவு சீக்கிறம்
ஏற்பாடு பன்னிருக்கீங்க.. ஒரு ஒரு மாசம் கழிச்சு வச்சிருக்கலாமே… ஒருவாரம் ரொம்ப சீக்கிரம்பா….”
“நான் அவசரப்படலை
அப்பு… உன் அத்தைக் காரிதான் அவசரப்படுறா… கல்யாணத்தை உடனே முடிச்சிரனும்னு தீவிரமா
இருக்கா… அவ நச்சரிப்பு தாங்காமத்தான்… நானும்
சரின்னு சொல்லிப்புட்டேன்… நான் தனியாளா இருந்து
என்ன பன்ன முடியும் அதான் கல்யாண ஏற்பாட்டை எல்லாம் அவங்களே பார்த்துக்கிறோம்னு சொல்லிட்டாங்க….
ஆனால் கல்யாணத்தை ஆடம்பரம் இல்லாம எளிமையா நடத்தனும்னு நான் கண்டிப்பா சொல்லிட்டேன்…
அதனால வேலையும் அதிகம் இருக்காது…. இனி கல்யாணத்துக்கு
ஆட்களை அழைக்கிறது மட்டும்தான் நமக்கு வேலை…” என்று விளக்கமளிக்க…
கார்த்திக்
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு … சரிப்பா நான் வெளியே போயிட்டு வந்திடுறேன் என்றவாறு
எழுந்து கொள்ள…
“மதியம் சாப்பிட்டு
போப்பா……” என்றார் மாணிக்கம்.
“இல்லைப்பா…
நான் ஃப்ரென்ட்ஸோட வெளியே சாப்ட்டுக்குறேன்….”எனச் சொல்ல
“சரிப்பா போயிட்டு
வா….”என சொல்லிகொண்டே…. டெலிபோனை கையில் எடுத்தார்…. தனது மகனின் சம்மதத்தை அவனது அத்தைக்கு
தெரிவிக்கும் பொருட்டு.
சாமிதுரையை
வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு காரில் கிளம்பியவன்
அவனது நண்பர்கள் சிலருக்கு கால் செய்ய எல்லோரும் பிசியாக இருப்பதாகச் சொல்ல… அடுத்து
எங்கே போவது என்று புரியாமல் சிறிதுநேரம் யோசித்தவன் நேராக மதுரவாயலில் இருக்கும் தனது அப்பாவின் தங்கை,
அவனது அத்தை வீட்டிற்குச் சென்றான்…
வாசலில் கார்
சத்தம் கேட்டு பேப்பரில் இருந்த கவனத்தை வாசலுக்கு கொண்டு வந்தார் கார்த்திக்கின் மாமா
ரங்கராஜன்…
“அடடே… வா..
கார்த்திக்…. எப்படி இருக்க…. ஆளே மாறிட்டியேப்பா…” என்றபடி கார்த்திக்கை நோக்கி எழுந்து
வந்தார்…
“ஹ்ம்ம் நல்லா
இருக்கேன் மாமா…..”என புன்னகையுடன் அவரது கையை பிடித்துக் கொண்டான்..
“அதுசரி… நீ
வீட்டுக்கு வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாமே….. இப்படி திடீர்னு வந்து
சாக் கொடுக்குறியேப்பா….”
“இல்லை மாமா…
இங்க வரனும்னு நான் கிளம்பல….. ஃப்ரெண்ஸை பார்க்கலாம்னு கிளம்பினேன்… ஆனால் எல்லாரும்
இப்ப பிசி… அதான் நேர இங்க வர்றேன் மாமா…”என தான் இங்கு வந்ததற்கு விளக்கமளிக்க…
சரி உள்ள வாடா
மாப்ள வெளிய வச்சே பேசிட்டு இருக்கேன் பாரு நான் ஒருத்தன்…. எனச் சொல்லிக் கொண்டே ரங்கராஜன்
உள்ளே செல்ல… கார்த்திக் பின் தொடர்ந்தான்..
ஹாலில்… அவனது
அத்தை ராஜேஸ்வரி சன் டிவி சீரியலில் மூழ்கி இருந்தாள்… அந்த சீரியலில்…. எப்படி எல்லாம்
தன்னோட மகனை தன் மருமககிட்ட இருந்து பிரிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள் கொடுமைக்காரி
மாமியார்….
“ராஜி…. யாரு
வந்திருக்காங்க பாரு…” என கணவர் சத்தம் கொடுக்க… சீரியலில் இருந்து விடுபட்டாள் ராஜேஸ்வரி…..
ராஜேஸ்வரியின்
துரதிர்ஷ்டம்… யாரோ ஒரு பெண்ணின் அதிர்ஷ்டம்…. ராஜேஸ்வரி ரங்கராஜன் தம்பதினருக்கு….
ஆண்பிள்ளை பிறக்கவில்லை…. ஒரே ஒரு மகள் சித்ரா மட்டும்தான்…
கணவரின் சத்தம்
கேட்டு திரும்பியவளுக்கு கார்த்திக் கண்ணில் பட்டான்..
“வாடா…. என்
மருமவனே…. எப்படி இருக்க…” என்றவாறே சோபாவில் இருந்து எழுந்து கொள்ள…. நல்லா இருக்கேன்
அத்தை…. என்றபடி உள்ளே வந்தான் கார்த்திக்…
“என்னப்பா இப்படி…
சொல்லாம கொல்லாம வந்து நிக்கிற……”
“ஏன் அத்தை
நான் வரக்கூடாதா….?”
“அய்யயோ என்ன
கார்த்திக்….. இப்படி சொல்லிட்ட…. இது உன்வீடுமாதிரி எப்பவேனும்னாலும் வரலாம் போகலாம்….
நீ வர்றேன்னு ஒரு தகவல் சொல்லலையேன்னுதான் கேட்டேன்…” என ராஜேஸ்வரி சொல்ல…
ரங்கராஜனுக்கு
சொன்ன அதே பதிலை தனது அத்தையிடமும் சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தான்…..
“ஹ்ம்ம்…. இப்பதான்
அப்பா… போன் பன்னிருந்தாரு…. உனக்கு சம்மதம்னு சொன்னார்…. ரொம்பவும் சந்தோசமா இருக்கு….
கார்த்திக்…” என்றவளிடம்…
தனது மனதில்
உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை கேட்டான் கார்த்திக்
“ஏன் அத்தை
கல்யாணத் தேதியை இவ்வளவு சீக்கிறம் வச்சிருக்கீங்க…. ஒரு மாசம் இல்லை ஒரு ரெண்டு மாசம்
கழிச்சு வச்சிருக்கலாமே…” என்றவனிடம்…
“வச்சிருக்கலாம்தான்…..
ஆனால் சித்ராவோட ஜாதகத்தை பார்த்த ஜோசியக்காரர்…. அந்த நாள்ல கல்யாணம் பன்னாதான்….
உங்க பொண்ணுக்கு… மாங்கல்யம் உறுதியா இருக்கும்… இல்லைன்னா… தாலிக்கு உத்திரவாதம் இல்லைன்னு
சொல்லிட்டார்..…” எனச் சொல்ல….
“என்னத்தை இன்னுமா
இந்த ஜோசியம் ஜாதகம் அது இதுன்னு எல்லாத்தையும் நம்புறீங்க….. நாட்கள்ல கெட்ட நாள்
நல்லநாள்னு எதுவும் கிடையாது….. எல்லாமே விதிப்படிதான் நடக்கும்… இறைவன் நமக்கு எதை
விதிச்சிருக்கானோ அதை மீறி எதுவும் நடந்திடாது”எனச் சொல்ல..
“இருந்தாலும்….
ஒரு மன நிம்மதிக்குதான் கார்த்திக்….. அவர் சொன்ன நாள்லயே கல்யாணத்தை முடிச்சிட்டா
பயப்பட வேண்டியது இல்லையே… அதனாலதான்….” என முடித்தாள் ராஜேஸ்வரி…
“சரி எதுவோ….
பன்னுங்க…. கல்யாணம் பன்றதுன்னு முடிவாயிடுச்சு அதை எப்போ பன்னா என்ன….” என கார்த்திக்
சொல்ல….
“ஏய் ராஜி…..
போய் மாப்ளைக்கு காப்பி போட்டு எடுத்துட்டு வா…. சும்மா வாயடிச்சிக்கிட்டு…” என ரங்கராஜன்
சொல்ல…..
“அய்யோ காப்பிலாம்
வேணாம் மாமா…. சாப்பிடுற நேரத்துல…. எனக்கு காப்பி சாப்பிட்டு பழக்கம் இல்ல…”
“அப்ப சாப்பிடுங்க….”என
ரங்கராஜன் சொல்ல…
“இல்லை மாமா….
நான் சும்மா பார்த்துட்டு போயிடலாம்னுதான் வந்தேன்…. அதுபோக நான் வர்றதே உங்களுக்கு
தெரியாது சேர்த்து சமைச்சிருக்க மாட்டீங்க…”
“அதெல்லாம்
ஒன்னுமில்ல…… எப்பவுமே ஒரு கைபிடி அரிசி அதிகமா போட்டுத்தான் சமைப்போம்…. அதனால எதுவும் சொல்லாம சாப்பிட்டுத்தான் போகனும்….”எனச்
சொல்லிவிட
கார்த்திக்கால்
அதை தவிற்க்க முடியவில்லை….
“சரி மாமா…
சித்ரா எங்க ஆளையே காணோம்…” என கார்த்திக் ரங்கராஜனிடம் கேட்க….
“மேலதான் ஏதோ
வேலையா இருக்கான்னு நினைக்கிறேன்…. இதோ கூப்பிடுறேன் கார்த்திக்….”எனச் சொல்லிவிட்டு
மாடிப்படி அருகே சென்று….
“சித்ரா…..
சித்ரா….” என சத்தம் போட….
“என்னப்பா….”
என்ற ஒரு அழகிய குரல் ஒலித்தது….
“கீழ வந்து
யாரு வந்திருக்காங்கன்னு பாரு…”என சத்தம் போட….
“இதோ வர்றேன்பா….”
என்ற அடுத்த நிமிடத்தில்….. இறங்கி வந்தாள் சித்ரா….
நேராக ஹாலிற்கு….
வந்தவள்…. கார்த்திக்கை பார்த்து…. எந்தவித சலனமும் இல்லாமல்…. வாங்க மாமா…. எப்படி
இருக்கீங்க…..” என்று மட்டும் கேட்டுவிட்டு அமைதியாக நின்றாள்….
கார்த்திக்
அவளையே வித்தியாசமாகப் பார்த்தான்…. சித்ரா.. எவ்வளவு மாறிவிட்டாள்….. முன்பெல்லாம்
என்னைக் கண்டதும்…. ஓடி வந்து கையை பிடித்துக் கொண்டு துள்ளி விளையாடும் குழந்தைப்
பெண் இல்லை இவள்… என புரிந்தது.. ஆளும் கொஞ்சம் சதை போட்டு முன்னை விட கொஞ்சம் அழகாகி
இருந்தாள்…
“நான் நல்லா
இருக்கேன்….சித்ரா… ஹ்ம்ம் ஏன் நிக்கிற இப்படி உட்கார்…”எனச் சொல்லவும் அவன் அமர்ந்திருந்த
சோபாவில் தள்ளி அமர்ந்து கொண்டாள்…
“ஹ்ம்ம்… அப்பறம்
படிப்பெல்லாம்… எப்படி போகுது…”என சம்பிரதாயமாக ஆரம்பித்தான் கார்த்திக்
“ம்ம்…. இப்பதான்
ஃபைனல் செமெஸ்டர் எக்சாம் எழுதிருக்கேன்…. படிப்பு அவ்வளவுதான்..”என சொல்லிவிட்டு தலை
குனிந்து கொள்ள…
“நீ ரொம்ப மாறிட்ட
சித்ரா…. எனக்கு உன்கிட்ட பிடிச்ச அந்த குழந்தைத்தனம் காணாமல் போயிடுச்சு…”
“ஆமாம் கார்த்திக்……
ரொம்ப மாறிட்டா இந்த கழுதை, கொஞ்ச நாளா திமிரெடுத்து திரியிது..….” என ராஜேஸ்வரி கடுகடுத்தாள்…
“ஏய்… ராஜி…
வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா…என் புள்ள பாவம்..” என கடிந்து கொண்டார்
ரங்கராஜன்.
“சரி… சித்ரா….
என்னை மேரேஜ் பன்னிக்க உனக்கு சம்மதமா….?”என கார்த்திக் கேட்க…
அவள் இந்த கேள்வியை
சற்றும் எதிர் பார்க்கவில்லை என்பது அவளது முகத்திலேயே தெரிந்தது… நிமிர்ந்து எல்லோர்
முகத்தையும் பார்த்தாள்…. பிறகு சொன்னாள்…
“எனக்கு உங்களை
மேரேஜ் பன்னிக்க சம்மதம்தான் மாமா….”என்றாள் சன்னமான குரலில்.
“சரி வாங்க
மாப்ள சாப்பிடலாம்…..”என ரங்கராஜன்… அழைக்க..
எல்லோரும் சாப்பிட
அமர்ந்தார்கள்…… கல்யாண வேலைகளைப் பற்றி பேசிக் கொண்டே சாபிட்டார்கள்… சித்ரா மட்டும்
அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்…..
பத்து நிமிட
முடிவில் கார்த்திக் கிளம்பி இருந்தான்… காரில் வீட்டை நோக்கி போகும் போது யோசனையோடயே
காரை செலுத்தினான்…
“என்னாச்சு
இவளுக்கு…. சிரிக்கச் சிரிக்கப் பேசும் சின்னப் பிள்ளை சித்ரா… இப்பொழுது அமைதியின்
மறு உருவமாக மாறியது கண்டு… யோசனையாக இருந்தது….” யோசனையோடையே வீட்டைச் சென்றடைந்தான்…..
அடுத்தடுத்த
வந்த நாட்களெல்லாம்…… கல்யாண வேலைகளிலேயே ஓடியது… தனது நண்பர்களை கல்யாணத்திற்கு அழைப்பது…
கல்யாண வேலைகள் முழுவதும் பெண் வீட்டாரே செய்தாலும்….. கார்த்திக்கும் கூட நின்று….
உதவி செய்தான்…. இப்படியாக நாட்களும் ஓட..
கல்யாணத்திற்கு
முதல் நாள்…. கார்த்திக் தனது நண்பர்களுடன் மாணிக்கத்தின் காம்ப்ளக்ஸிற்குச் சென்றிருந்தான்…. நண்பர்களின் வேண்டுகோள்களுக்கு
இணங்க அன்று கார்த்திக் பேச்சிலர் பார்ட்டிக்கு அரேஞ்ச் செய்திருந்தான்.
அவனது காலேஜ்
நண்பர்கள் எல்லாம் வந்திருந்தனர்…. சிறிய அளவில் அந்த இடம் அலங்கரிப்பட்டு இருந்தது..
சுத்தி கடைகளும் நடுவே வெட்ட வெளியுமாக இருந்தது… அந்த வெட்டவெளியிலேதான் அனைவரும்
நின்றிருந்தனர்…
ஸ்பீக்கரில்….
ஆலுமா டோலுமா… என புரியாத பாசையில் அனிருத் அலறிக் கொண்டிருந்தார்….
பெரிய கேக்
ஒன்று டேபிள் மீது வைக்கப்பட்டு கத்தியால் அறுபட்டுக் கடிபடுவதற்காக காத்துக் கொண்டு
இருந்தது..
கார்த்திக்கை
ஆளாளுக்கு கேளி செய்து கொண்டு இருந்தார்கள்…. “டேய் மாப்ள இன்னைக்கே நீ நல்லா சந்தோசமா இருந்துக்கடா…”என ஒருவன் சொல்ல
“இதுதான்டி
உனக்கு கடைசி நாள் மாப்ளே….”என இன்னொருவன் கத்தினான்….
இன்னொருத்தன்
“ஊ ஊ.. ஊ… ஊ…”என ஊளையிட்டான்,,
கார்த்திக்கின்
நெருங்கிய நண்பன் சிவா அருகே வந்து “இந்தா மாப்ள கேக்கை வெட்டு….” என கத்தியை நீட்ட…
கேக்கை வெட்டி
சிவாவின் வாயில் தினித்தான் கார்த்திக்….. வாயில் வைத்ததுபோக மீதியை சிவாவின் முகத்தில்
பூசிவிட.. அவனும் பதிலுக்கு எடுத்து பூச ஆரம்பிக்க…. அவ்வளவுதான்… எல்லோரும்…. “ஹோ…. வென கூச்சலிட்டனர்…..
அதன்பிறகு அந்த
கேக்கை யாரும் சாப்பிடவில்லை…. ஆளாளுக்கு கேக்கை அள்ளி முகத்தில் பூச ஆரம்பித்திருந்தனர்….
கொஞ்ச நேரம்
அனைவரும் ஜாலியாக பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடினர்….
சிலர் ஆலுமா
டோலுமா என கத்திக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தனர்… சாப்பிங் வந்திருந்த சிலர்…. சுற்றி
நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்….
கார்த்திக்
தன் முகத்தில் அப்பியிருந்த க்ரீமை கர்சீப்பால் துடைத்தவன்…. சிவாவிடம்… மாப்ள…. நான்
போய் முகத்தை கழுவிட்டு வந்திடுறேன் எனச் சொல்லிவிட்டு முன்னே நடக்க…. இருடா நானும்
வாறேன்… என அவனுடன் சேர்ந்துக் கொண்டான் சிவா….
இருவரும் முகத்தைக்
கழுவிக் கொண்டு ரெஸ்ட்ரூமில் இருந்து வெளிபட்டனர்…
“மச்சான் நீ
சித்ராவை மேரேஜ் பன்னிக்க கொடுத்து வச்சிருக்கனும்டா…” என்றான் சிவா…
“ஏன்… அப்படி
சொல்ற… அவகிட்ட அப்படி என்ன ஸ்பெசல்….”
“இல்லை ரொம்ப
நல்ல பொண்ணு….. அழகா உனக்கு பொருத்தமா வேற இருக்கா…. அதான் சொன்னேன்”
“ஹ்ம்ம்….”என
பதில் சொல்லியவாறே அவன் சுதாரிப்பதற்குள், திடீரென அந்த கடையில் இருந்து வெளிப்பட்டவள்
அவன் தலையில் வந்து நச்சென்று இடித்தாள்….
“ஹேய்…. பார்த்து
வரமாட்ட…” என தன் தலையை பிடித்தவாறே நிமிர்ந்து பார்த்து கார்த்திக்கை கண்டு திகைத்தாள்….
சில நொடிகள்
அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்….. அன்று அனிந்திருந்த
அதே கருப்பு நிறச் சுடிதாரில் வெள்ளை தேவதையாக நின்றிருந்தாள்….. சிறிது நேரம் தடுமாறியவன் சுதாரித்து..
“ஹலோ மேடம்…
பார்க்காம வந்து இடிச்சது நீங்க….”என அன்று ஏர்போர்டில் அவள் சொன்னது போல் இவன் இப்பொழுது
சொல்ல….
“சா…சாரி….
பார்க்காம……” என்றாள் மெல்லிய குரலில்
“ஹா..ஹா…. எனக்கு
சாரி எல்லாம் வேண்டாம்…..”
“வேற என்ன வேணும்….”என்பதுபோல்
அவள் கேள்வியாகப் பார்க்க…
“உன் பேரை நான்
தெரிஞ்சுக்கனும்….” என கூர்மையாக அவளது கண்களை பார்த்தவாறே கேட்க…. அவனது கூர்மையான
பார்வையில் அவள் தடுமாறவில்லை….
“ஹேய்…. இங்க
என்னடி பண்ணிட்டு இருக்குற….” என அவளது தோழி சத்தம் கொடுக்க….
“ஒன்னுமில்லடி….
இதோ வந்துட்டேன்….”என அதுதான் சாக்கு என்பதுபோல் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் அந்த
தேவதை…
“நான் சொன்னேன்ல
மச்சி ஏர்போர்ட் ல ஒரு அழகான பொண்ணை பார்த்தேன்னு அவதான் இவ….. சே…. சான்சே இல்ல மச்சி…..
எவ்வளவு அழகா இருக்கால்ல….”என கார்த்திக் சொல்ல….
“டேய்… மாப்பு…..
என்னடா ஆச்சு உனக்கு… நாளைக்கு மேரேஜை வச்சிக்கிட்டு யாரோ ஒரு பொண்ணை சைட் அடிச்சிட்டு
இருக்குற…”
“அது சும்மா
ஒரு ஜாலிக்குடா….”
“ஹ்ம்ம்…. பார்த்தா
அப்படி ஒன்னும் தெரியலையே….”
“ஆமாம் மச்சான்….
நீ சொல்றது கரெக்ட்.. நான் இவளை ரொம்பவும் மிஸ் பன்றேன்னுதான் நினைக்கிறேன்….”
“அடப்பாவி…..
டேய்…. உனக்கு புத்தி கித்தி மழுங்கி போச்சா…. நாளைக்கு மேரேஜை வச்சிக்கிட்டு இவளை
மிஸ் பன்றேன்னு சொல்ற…. இது சரி இல்ல மாப்ள…”
“டேய்… பயப்படாதடா…
நான் மிஸ் பன்றேன்னுதானே சொன்னேன்… அவதான் எனக்கு வேணும்னு நான் சொல்லலையே…. யாருக்கு
யாருன்னு முன்னாடியே எழுதப்பட்ட முடிவான ஒரு விசயம்… அதனால இத நினைச்சி நான் பீல் பன்ன
வேண்டிய அவசியமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்…” என கார்த்திக் சொல்ல…
சிவா அதற்கு
மேல் அவனிடம் அதைப் பற்றி பேச விரும்பவில்லை… அமைதியாகிப் போனான்….
அதன் பிறகு
பார்ட்டி முடிந்து சிலர் கிளம்பி சென்றிருந்தனர்…
சிலர் கேட்டுக் கொண்டதற்காக அவர்களுக்கு மட்டும் மது வகைகளை அரேஞ்ச் செய்திருந்தான்…
கார்த்திக்கை தவிர அனைவரும் குடித்து கும்மாளம் போட்டு முடிக்க இரவு 10 மணி ஆகிருந்தது…
பிறகுதான் அனைவரும் கிளம்பினர்..
அடுத்த நாள்
காலை….. மணி எட்டு மீனாட்சி கல்யாண மன்டபம்…
கல்யாணத்தை எளிமையான முறையில் நடத்தவேண்டும்
என்று மாணிக்கம் சொன்னபடியால்… ரொம்பவும் ஆர்ப்பாட்டம் இல்லாமல்.. முக்கியமான ஆட்களை
மட்டும் அழைத்திருந்ததால் அவ்வளவாக கூட்ட நெரிசல் இல்லாமல் நடந்துகொண்டிருந்தது…. மணவரையில்
பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்து கழுத்தில் மாலையோடு அமர்ந்திருந்த கார்த்திக்… ஓடியாடி
வேலை செய்து கொண்டிருந்த நண்பன் சிவாவின் கையை பிடித்து நிறுத்தி…..
“சிவா… கொஞ்சம்
உதறலா இருக்கு…. என் பக்கத்துலயே இருடா….” என்ற கார்த்திக்கை பார்த்து சிரிப்பாக வந்தது…
சிவாவிற்க்கு
“அதெல்லாம்
ஒன்னுமில்ல….. ஃபர்ஸ்ட் டைம் கல்யாணம் பன்றேல்ல அதான் அப்படி இருக்கு…”என சிவா சொல்ல..
“ஏன்டா நக்கலா…
எல்லாருக்குமே கல்யாணம் ஃபர்ஸ்ட் டைம் தான்டா நடக்கும்…. நீ என் பக்கதுலயே இரு எங்கேயும்
போகாத வேலை எல்லாம் மத்தவங்க பார்துக்குவாங்க…”
“சரி நிக்கிறேன்
மாப்ள… கல்யாணத்துக்கே இப்படி பதர்றியே ஃபர்ஸ்ட் நைட் ல எப்படி எல்லாம் பதறுவியோ தெர்ல…போ…”
“டேய் என்னை
கடுப்பேத்தாம வாய மூடிக்கிட்டு நில்லு…”என எரிச்சலோடு சொல்ல
சிவாவும் கார்த்திக்கின் மனநிலை
புரியாதவனாக அமைதியாக நின்று கொண்டான்… மந்திரம் ஓதிக் கொண்டிருந்த ஐயர்….
“நேரம் ஆயிடுத்து… பொண்ணை
அழைச்சுண்டு வாங்கோ…”என குரல் கொடுக்க…
தோழிகள் புழைசூட அழைத்து வரப்பட்டாள்
சித்ரா என்னும் அழகுப் பூக்குவியல்… சிகப்பு நிற பட்டுச் சேலை உடுத்தி கண்ணிற்கு மை
இட்டு… மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி எடுப்பாக
காட்டியது…, தடித்த உதட்டிற்கு செயற்கை சாயம் பூசப் பட்டு… ஒரு இளவரசியின் தோரணையோடு
நளினமாக நடந்து வந்தாள்…..
தோழிகள்… அவளை கார்த்திக்கின்
அருகே அமரச் செய்தனர்… அமர்ந்தவள் தலை குனிந்துகொண்டாள்….
தாலி ஒரு குங்குமம்
வைக்கப்பட்ட தேங்காயின் மேல்…. தவழ்ந்தபடி.. அமர்ந்திருந்தவர்களின் ஆசீர்வாதத்துடன்
கட்டுவதற்க்காக காத்திருந்தது…
அமர்ந்திருந்த
சொந்த பந்தங்கள்…. தெரிந்தவர்கள்…. தொழில் நண்பர்கள் என அனைவரும் தங்களது கைகளில் உள்ள
அட்சதையை தூவும் நேரத்திற்க்காக காத்திருக்க… அதற்கேற்றார்போல்…
“டைம் ஆயிடுத்து…”என்றபடி…
தாலியை எடுத்து… “வாங்கி கட்டுங்கோ….”என கார்த்திக்கிடம் நீட்ட…. தாலியை வாங்கியவன்
எழுந்து கொண்டான்…
அனைவரும் என்னவோ
ஏதோ என பார்த்துக் கொண்டிருக்க… அவன் அடுத்த செய்த காரியம் அனைவருக்கும் அதிர்ச்சியை
கொடுத்தது…..
தாலியோடு எழுந்தவன்….
“ஹ்ம்ம் நீ உட்காரு மாப்ள….”என சிவாவின் சட்டை பிடித்தான் கார்த்திக்….
கார்த்திக்கின்
செயலில் சிவா மட்டுமல்ல அனைவரும் மிரண்டு போயினர்…
“என்னடா… ஆச்சு
உனக்கு…. நான்… எப்படி” என தடுமாறினான் சிவா…
“உட்காருடா….
உட்காருன்றேன்ல…..”என அவனது சட்டையை பிடித்து இழுத்து கட்டாயப்படுத்தி அமரச் செய்தான்
கார்த்திக்….
அவனது கடுமை
சிவாவை மிரளச் செய்தது….
“ஹ்ம்ம் இந்தா
அவ கழுத்துல கட்டு….”என எச்சரிக்கை குரலில் சொல்ல…
“கார்த்திக்
நா… நான்… எப்படிடா…”எனச் சொல்ல…
“அப்படியே அறைஞ்சு
பல்லை உடைச்சிடுவேன் ராஸ்கல்….கட்டுடா….”என கத்தியபடி அவன் கையில் தாலியை தினித்தான்
கார்த்திக்…..
சிவா மேலும்
தயக்கத்தோடு பார்க்க… கார்த்திக் ஆத்திரத்தோடு கண்ணத்தில் அறைய கையை ஓங்க…..
அடிக்கு பயந்தவன்….
சித்ராவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்….
சித்ராவின்
முகத்தில் அதிர்ச்சியும்….. ஆனந்தக் கண்ணீரும்…… வெளிபட்டுக் கொண்டிருந்தது…
கண்ணீரோடு கார்த்திக்கை
கை எடுத்து கும்பிட்டாள்….
ஆனால் அந்த
மண்டபத்தில் இருந்த அனைவரும் நடந்ததை நம்ப முடியாமல் வாய் பிளந்து நின்றிருந்தனர்…
யாருக்கு யாரென்று
முடிவு செய்த-இறைவனதை
இரகசியப்படுத்தி
சுவாரஸ்யமாக்கி விடுகின்றான்.
(புதுக் குறள்)
…..தொடரும்
Comments
Post a Comment
உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்