அவள் ஒரு தேவதை-4


அவளை விலைமகளின் மகள் என்றனர்
ஒருநாள் இரவிற்கு விலை பேசினர்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பதை..
படித்தறிந்த சுற்றங்கள் அவளை தீண்டத் தயங்கினர்...
வேசி மகளுக்கு வேலை இல்லை என்றனர் பலர்
படுக்கை பகிர் வேலை பகிர்கின்றேன் என்றனர் சிலர்
வேலையின்றி. கடனால் வீடும் பறிபோனது..
ஒரு வேளைச் சோற்றுக்கு வழியும் இல்லாமல் ஆனது..
மதிகெட்டு மானம் இழந்து வாழ்வதற்கு, வீழ்வதே மேல்..
என்றுணர்ந்து... தன் கூந்தல் மழித்து அழகிழந்து..
அனாதை இல்லத்தில் பல குழந்தைகளுக்குத்..
தாயாகிப் போனாளே...
அவளும் ஒரு தேவதைதான்...

எபிஸோட்-4
இரவு... மணி ஏழு... ஐடியல் ரெஸ்டாரண்ட்.. பிண்ணனியில் இளையராஜாவின் இசை  ஒலித்துக் கொண்டிருக்க... வட்ட வடிவ டேபிளில் வாட்டர் க்ளாஸ் வைக்கப் பட்டிருக்க.. கார்த்திக்கின் முகம் அந்த மெல்லிய இருட்டிலும் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது... இருக்காதா பின்னே...?  தான் ஆசைப்பட்டப் பெண்ணே இன்னும் சில நாட்களில் மனைவியாகப் போகிறாள் என்றால்.. கார்த்திக்கின் முகம் பிரகாசமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை... கடவுளே இது கனவாக இருந்துவிடக்கூடாது என சில நேரம் பயப்படவும் செய்தான்... தன் முடியை பிடித்து இழுத்துப் பார்த்து இது கனவல்ல உன்மை  என்பதை அடிக்கடி உறுதிபடுத்திக் கொண்டான்...
நடந்ததெல்லாம்.. நினைத்துப் பார்க்க கார்த்திக்கிற்கு வியப்பாக இருந்தது..  இப்படியும் நடக்குமா...? என வியந்துபோய் மாலை நடந்த நிகழ்வுகளை அசை போட ஆரம்பித்தான்..
"பொண்ணு இதாம்பா.... போட்டோல பார்த்துருப்பீங்க... நேர்லயும் ஒரு தடவ பார்த்துக் கோங்க...." என பொண்ணோட அப்பா... சொல்ல...

கார்த்திக் நிமிர்ந்து பார்த்து இன்ப அதிர்ச்சியை உள் வாங்கினான்...  கவி  பெண்ணாக நின்றுகொண்டிருந்தாள்... கையில் காப்பி ட்ரேயோடு..

கார்த்தி சுக அதிர்விலிருந்து மீண்டு வந்த அடுத்த நொடி அவளும் நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தாள்...

"நீயா...?"என அவன் மனதிற்குள் கேட்க...

"நீங்களா....?"என அவளும் மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்...

கார்த்திக் தன் கண்களையே நம்பாமல்.. கண் இமைத்தால் எங்கே அவள் மறைந்து விடுவாளோ என பயந்தவனாக இமை மூடாமல் அவளையே வைத்த கண் வாங்காமல்  பார்த்துக் கொண்டு இருக்க... அவனருகே அமர்ந்திருந்த அப்பாதான்.. அவனை கலைத்துவிட்டார்...

"என்ன அப்பு.... போட்டோல பொண்ணு  வேற மாதிரி இருந்தா... இப்ப வேற மாதிரி இருக்கா...?  இருந்தாலும் போட்டோவைவிட நேர்லதான் அப்பு நல்லா இருக்குறமாதிரி தோனுது.." என அவர் கார்த்திக்கிற்கு மட்டும் கேட்கும்படி சொல்ல

கார்த்திக் திரும்பி மெல்லிய குரலில் சொன்னான்... "அப்பா இது போட்டோல பார்த்த பொண்ணே இல்லை..வேற பொண்ணு..."என சொல்லவும்தான் மாணிக்கம் தன் கண்களை கூர்மையாக்கி தலை குணிந்து நின்றிருந்த  அவள் முகத்தை பார்த்து அவரும் கார்த்திக்கை ஆமோதித்தார்....

"என்னங்க.. மாப்பிள்ளையும் அப்பாவும் மாத்தி மாத்தி குசு குசுன்னு பேசிக்கிறீங்க.... என்ன விசயம்... மாப்ளைக்கு பொண்ணை பிடிச்சிருக்காம்மா.?" என கவிதாவின் அப்பா கருணாகரன்  கேட்க...

"அதுவந்து ஒன்னுமில்லைங்க.... இதுதான் பொண்ணுங்களா....?"

"ஆமாம் இதுதான் என்னோட ஒரே பொண்ணு...ஏன் கேட்கறீங்க..."

"இல்லை.... போட்டோல.... வேற பொண்ணு இருந்துச்சு.... இங்க வந்து பார்த்தால் வேற ஒரு பொண்ணு இருக்கு..."

"என்னங்க சொல்றீங்க..... வேற ஒரு பொண்ணா....."என தனது நெற்றியை சுருக்கி ஓரிரு நொடிகள் யோசித்தவர்

"ஒருவேளை... தரகர் போட்டோவை மாத்தி கொடுத்திருப்பாரோ..." எனச் சொல்ல...
அப்பொழுதுதான் மாணிக்கத்திற்கு தரகர் அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றது  ஞாபகம் வந்தது....
மாணிக்கமும்.. தலையசைத்து கருணாகரனை ஆமோதித்தார்......

"ஆமாங்க..... அன்னைக்கு தரகர்... அவசரமா எங்கேயோ கிளம்பிட்டு இருந்தார்.... ஒரு வேளை நீங்க சொன்ன மாதிரியும் இருக்கலாம்... ஆனாலும் அந்த பொண்ணைவிட இந்த பொண்ணு ரொம்ப லட்சணமா இருக்கா..." புன் முறுவல் செய்தார் மாணிக்கம்....

"ஹ்ம்ம் அது என்னவோ வாஸ்தவம்தான்.... எம்பொண்ணு அழகா இருக்கா... இஞ்சினியரிங்க் படிச்சிட்டு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறா... மாதமானால் இருபத்தைஞ்சாயிரம் சம்பளம் வாங்குறா... ஆனால் பொண்ணு பார்க்க வர்ற எல்லோரும் வீட்டுக்கு போய் பதில் சொல்றேன்னு சொல்றாங்க... என் பொண்ணுக்கிட்ட அப்படி என்ன  குறை கண்டாங்கன்னு தெரியலை... என்ன எதிர் பார்கிறாங்கன்னு தெரியலை.. பொண்ணை பிடிக்கலைன்னு சொல்லிடுறாங்க... இதுவரை நாலு சம்பந்தம் தட்டிக் கழிஞ்சிருக்கு...." என பெருமூச்சுவிட்டவர். நிதானித்து..

"என்னடா இவர்.. இப்படி எல்லாத்தையும் வெளிப்படையா சொல்றாறேன்னுதான்னே பாக்குறீங்க....? வேற என்னங்க பன்ன சொல்றீங்க.. என்னால முடியலை... புடிச்சிருக்கோ இல்லையோ நீங்களாவது இங்கேயே பதில் சொல்லிட்டு போயிடுங்க...."என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கருணாகரன்

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.... இப்படிப் பட்ட தேவதை மாதிரியான பொண்ணு கிடைக்க என் மகன் கொடுத்து வச்சிருக்கனும்... இப்பவே சொல்றேங்க நல்லா கேட்டுக் கோங்க.... உங்க மகதான் என்னோட மருமக.." என வாக்குக் கொடுத்த மாணிக்கம்...

"என்னடா நான் சொல்றது சரிதானே....?" என மகனிடம் திரும்பினார் மாணிக்கம்...

கார்த்திக் இவர்கள் பேசுவதை காதில் வாங்காதவனாக.... கவிதாவின் அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தான்..

ஆரஞ்சு நிறச் சேலையில்.... அதற்கு மேட்சிங்காக இரவிக்கை அனிந்து.... முகத்தில் அளவான மேக்கப் போட்டு ஆளை அசத்தும் அழகோடு ஜொலித்துக் கொண்டிருந்தாள்..

குணிந்திருந்த  கவிதா இமை உயர்த்தி தனது பளிங்குக் கண்களால் கார்த்திக்கை பார்க்க... சைடு கேப்பில் தெரிந்த அவளது வெண்ணிற இடையை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்..   அவள் கையில் காப்பி ட்ரே வைத்திருந்ததால் அவளால் அதை மறைக்க இயலவில்லை.. லட்ஜையே இல்லாமல் அவள் இடையையே வெறித்துக் கொண்டு இருந்தான் கார்த்திக்

அவனது பார்வையே சம்மதத்தைச் சொன்னது...

"என்ன பார்வை இது... இத்தனைபேர் மத்தியில்...கொஞ்சம் கூட விவஸ்தை என்பதே இல்லாமல்.... இப்படி பார்க்கிறானே.... ஏதோ காணாததை கண்டதுமாதிரி.."என மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டு அவஸ்தையோடு தலை குனிந்து நின்றுகொண்டாள் கவிதா...

"என்னம்மா அப்படியே நிக்கிற.... காப்பிய எல்லோருக்கும் கொடும்மா..."என கருணாகரன் சொல்ல...
நிமிர்ந்தவள் மென்னடை நடந்து வந்து... எல்லோருக்கும் கொடுத்துவிட்டு இறுதியாக கார்த்திக்கிடம் வந்து காப்பியை நீட்ட... அவன் எடுக்காமல் அவளது சிவந்த அழகிய அதரங்களை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க...  நேரமாகியும் இன்னும் காப்பி எடுக்கப்படவில்லை என்பதை உணர்தவள் நிமிர்ந்து பார்க்க.. அவன் கண்களின் கூர்மை இவளை தடுமாறச் செய்தது... கை கால்கள் உதறியது.. கை ஆடியதில் காப்பி கார்த்திக்கின் கால் சட்டையில் சிந்தியது..

காப்பியின் சூடு கார்த்திக்கை நடப்பிற்கு கொண்டு வந்தது... "ஸ்ஸ்ஸ்..." என்றபடி  தன் கைகளால் தன் தொடையை தடவி கொடுக்க...

"என்னாச்சு.... தம்பி.."

"காப்பி... கொட்டிடுச்சு மாமா...." என்று அவனையும் அறியாமல் மாமா என்ற  வார்த்தை வெளிப்பட... கருணாகரன் மனமகிழ்ந்து போனார்... மகிழ்சியுடனே மகளிடம் திரும்பியவர்

"அட என்னம்மா அஞ்சலி பார்த்து கொடுக்கறதில்லையா... இப்பப்பாரு மாப்பிள்ளை மேல கொட்டிடுச்சு.. பாரு"  என்றவர் கார்த்திக்கிடம் திரும்பி பாத்ரூம் உள்ளதான் மாப்ள இருக்கு போய் சுத்தம் பன்னிட்டு வாங்க மாப்ள... என்றுவிட்டு கவிதாவிடம் திரும்பி என்னம்மா பார்த்துட்டு இருக்க மாப்ளைக்கு வழி காட்டும்மா... எனச் சொல்ல அவள் காப்பி ட் ரேயை டீபாயில் வைத்துவிட்டு முன்னே நடக்க அவளை பின் தொடர்ந்தவன்..

ஒரு கணம் அப்படியே நின்று திரும்பி "மாமா... உங்க பொண்ணு பேரு அஞ்சலிதானா...?" என தன் மனதில் உள்ள சந்தேகத்தை கேட்க...

"ஆமாம் மாப்ள... என் பொண்ணோட பேரு கவிதாஞ்சலி... நாங்க எல்லாம் அஞ்சலின்னுதான் கூப்பிடுவோம்... எங்கம்மா வச்ச பேரு... ஏன் கேக்குறீங்க மாப்ள...?" என வார்த்தைக்கு வார்த்தை மாப்பிள்ளை என்றார் கருணாகரன்

"இல்லை சும்மாதான் கேட்டேன்..." என்றவன் கவிதாஞ்சலியை பின் தொடர்ந்தான்..
முன்னே சென்று கொண்டிருந்தவள் நின்று கார்த்திக்கிடம் திரும்பி.... இப்படியே நேரா போய் லெப்ட் கட் பன்னீங்கன்னா ரெஸ்ட் ரூம் வந்திடும் எனச் சொல்ல...

கார்த்திக் மென்மையாக புன் முறுவல் பூத்தான்..  அவள் அமைதியாக தலை குணிந்து நின்றிருக்க...

"என்னமோ... அட்ரெஸ்கு வழி கேட்டமாதிரி சொல்ற...?"  அவன் கேள்வியில் நிமிர்ந்தவள்

"வேற எப்படி சொல்றது...?"



"வழி சொல்றதுக்கு பதிலா கூட்டிட்டு போகலாமே..." என்றவனுக்கு பதில் சொல்லாமல் அவனை சில நொடிகள் முறைத்தவள்.. "சரி வாங்க.." முன்னே நடக்க ஆரம்பித்தாள்..

ரெஸ்ட் ரூம் வாசலில் நின்றவள்... கார்த்திக்கிடம் திரும்பி இதுதான் ரெஸ்ட் ரூம்.... கதவை உங்களுக்குத் திறக்கத் தெரியுமா.... இல்லை நான்தான் திறந்துவிடனுமா...? என்றாள் கேளியான குரலில்
"உனக்கு குசும்பு ஜாஸ்தி... எனக்கு திறக்கத் தெரியும்.. நீ போ..." என்றுவிட்டு உள்ளே சென்று சுத்தம் செய்து கொண்டு வெளியே வர அவள் வீட்டினுள் சென்றிருந்தாள்..

இவனும் வீட்டிற்குள் செல்ல ஹாலில் அனைரும் பேசிக் கொண்டு இருந்தனர்... கவிதா ஒரமாக நின்றிருக்க.. கார்த்திக் தனது இடத்தில் அமர்ந்துகொண்டு தன் வேலையை தொடங்கினான்.. 

செப்புச் சிலையாக நின்றிருந்தவளை கண்கள் மூலம் தன் மனதில் நிறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்... மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றுகூட அவன் நினைக்கவில்லை... சொல்லப் போனால் அவனையும் அவளையும் தவிற அங்கு வேறு யாரும் இல்லை என்றே உணர்ந்தான் கார்த்திக்...

கவிதா நிமிரவில்லை... ஆனாலும் தன்னை யாரோ பார்வையாலையே ஊடுருவதை போல் உணர்ந்தாள்....
"எல்லாம் சரி... பொண்ணுக்கு பையனை பிடிச்சிருக்கா.... அவனை கல்யாணம் பன்னிக்க சம்மதமா.... கேட்டுச் சொல்லுங்க.." என்றார் மாணிக்கம்

"என்னங்க இப்படி கேட்டுட்டீங்க... எம்பொண்ணு எம்பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டா...."
"அது இருக்கட்டுங்க.... எனக்கு பொண்ணோட விருப்பம் முதல்ல தெரிஞ்சுக்கனும்... அப்பறம்தான் எந்த முடிவும் எடுக்க முடியும்" என மாணிக்கம் சொல்லிவிட..

கருணாகரன்  தன் மகளிடம் திரும்பினார்... "கேக்குறாங்கள்ள... சொல்லும்மா... உனக்கு சம்மதம்தானே... பையனை பிடிச்சிருக்குள்ள... சொல்லும்மா..."

அவள் நிமிர்ந்து கார்த்திக்கை ஏறிட்டாள்.... அவன் அவளின் பதிலைக் கேட்க காதை கூர் தீட்டி ஆவலோடு கண்களில் எதிர்பார்ப்போடு அவளது முகத்தை பார்க்க

அவள் ஓரிரு வினாடிகள் அவனை பார்த்துவிட்டு.... "ஹ்ம்ம் பிடிச்சிருக்கு..." என்றுவிட்டு தலை குணிந்துவிட.... 

கார்த்திக்கிற்கு கால் தரையில் இல்லை... பிசிக்கலாக கால் தரையில் இருந்தாலும்... வெர்சுவலாக கால் காற்றில் பறந்தது... இல்லை இல்லை மிதந்தது.. கொஞ்ச நேரத்தில் அவன் பித்துப் பிடித்தவன் போல் ஆகிவிட்டான்.... உடனே அவளை கைகளில் அள்ளி அவளது அழகை ஆராதிக்க வேண்டும் போல் இருந்தது... முத்தத்தால் அவளை மூழ்கடிக்க வேண்டும் போல் இருந்தது...



அடிக்கள்ளி.... மனசுல ஆசையை வச்சுக்கிட்டுத்தான்... என்னை விரட்டியடிக்கிறமாதிரி நடிச்சியா... கல்யாணம் முடியட்டும் உன்னை வச்சிக்கிறேன்... என மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தான்...

சிறிது நேரத்தில் பேச்சு வார்த்தை முடிந்தது..  போட்டோவில் இருந்த பெண் இல்லை என்றாலும் மாணிக்கத்திற்கு மனம் திருப்தியாக இருந்தது... பெண் அழகில் தன் மகனிற்கு குறைவில்லை.. படிப்பிலும் செய்யும் வேலையிலும் கூட தன் மகனிற்கு ஏற்ற ஜோடிதான் என்று நினைத்துக் கொண்டார் மாணிக்கம்... பெண் பார்க்கும் படலம் இனிதே நிறைவேறியது..  கூடிய விரைவில் திருமணத் தேதியை குறித்துவிடலாம் என முடிவு செய்யப் பட்டது..


வீட்டிற்கு வந்தவன் தன்  அறைக்குச் சென்று பொத்தென்று மெத்தையில் விழுந்தான்.. "ஹ்ம்ம் பிடிச்சிருக்கு... ஹ்ம்ம்.. பிடிச்சிருக்கு..." என்ற அவளது குரல் அவனது செவியில் தேனாய் வந்து பாய்ந்து கொண்டு இருந்தது... கல்யாணக் கனவுகளில் கண் மூடி படித்திருக்க.... அதை கலைக்கும் விதமாக அவனது போன் ஒலித்தது...

 தேவதை  அவளொரு  தேவதை
அழகிய  பூமுகம்  காணவே
ஆயுள்  தான்  போதுமோ
காற்றிலே  அவளது  வாசனை
அவளிடம்  யோசனை  கேட்டு  தான்
பூக்களும்  பூக்குமோ
நெற்றி  மேலே  ஒற்றை  முடி  ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே  மின்னல்  பூக்கும்
பார்வை  ஆளை  தூக்கும்
கன்னம்  பார்த்தால்  முத்தங்களால்
தீண்ட  தோன்றும்
பாதம்  ரெண்டும்  பார்க்கும்  போது
கொலுசாய்  மாற  தோன்றும்
அழகாய்  மனதை  பறித்துவிட்டாளே...
(பையா படத்தில் இருந்து)

பாடல் வரிகளில் லயித்திருந்தவன் போன் ரொம்ப நேரம் அடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து போனை எடுத்து காலை அட்டெண்ட் செய்தான்....

"ஹலோ.... மச்சி நான் சிவா பேசுறேண்டா..."

"ஹ்ம்ம் சொல்லு மாப்ள.... நானே உனக்கு கால் பன்னனும்னு நினைச்சிருந்தேண்டா..."

"டேய்.. உன்னை உதைக்கனும்டா... என்கிட்ட கூட சொல்லாம உனக்கு பொண்ணு பார்க்க போயிருக்க..."
"உனக்கு யார்டா சொன்னது....."

"உன் அப்பாதான்.... இப்பதான் சித்ராவுக்கு கால் பன்னி சொன்னாரு..."

"சொல்லக் கூடாதுன்னு இல்லை மாப்ள... எனக்கு இந்த பொண்ணு பார்க போறது பிடிக்கலைடா... அதனாலதான் சொல்லல..."

"அப்பறம் எப்படிடா... ஓக்கே சொன்ன....?"

"டேய்... சொல்ல மறந்துட்டேனே... பொண்ணு யார் தெரியுமா...?" என ஆரம்பித்து கம்பெனியில் பார்த்ததில் இருந்து பெண் பார்த்துவிட்டு வந்ததுவரை சொல்லி முடிக்கவும்..

கார்த்திக்கின் உர்ச்சாகம் சிவாவையும் தொற்றிக்கொண்டது...

"செம மச்சி.. சூப்பர் மச்சி... அப்பறம் ட்ரீட் எப்ப..."

"நான் ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா...ட் ரீட் தானே கொடுத்துட்டா போச்சு.... நீ நேரா ஐடியல் ரெஸ்டாரெண்ட் வந்திடு.. இன்னைக்கு நாம எஞ்சாய் பன்றோம்..."

"சூப்பர் மச்சி....இன்னும் அரை மணி நேரத்துல நான் அங்க இருப்ப்பேன்...."

"ஓக்கே மாப்ள.... இப்ப வைக்கிறேன்..." என்றுவிட்டு போனை தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் கவிதாவுடன் கனவில் டூயட்டிற்கு அண்டார்டிகா சென்றிருந்தான்...

கண் மூடி கொஞ்ச நேரம் கூட ஆகி இருக்காது.. மீண்டும் போன் ஒலித்தது...

தேவதை  அவளொரு  தேவதை
அழகிய  பூமுகம்  காணவே
ஆயுள்  தான்  போதுமோ


"எவண்டா அவன் டிஸ்டர்ப் பன்னிக்கிட்டு" என்றபடி எடுத்து காதில் பொறுத்த..

"ஹலோ.... இஸ் திஸ் கார்த்திக்....? "என்ற இனிமையான பெண் குரல் ஒன்று ஒலிக்க....
ஒரு வேளை அவளோ... என நினைத்தவன்....

"ஹ்ம்ம் கார்த்திக்தான் பேசறேன்... நீங்க யாரு பேசுறது....?" என்றான்

"நான் கவிதா... பேசுறேன்..."

"ஹாய்... மை ஸ்வீட்டி... வாட் எ சர்ப்ரைஸ்....நீ கால் பன்னுவேன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை ஹவ் ஸ்வீட்..."

"ப்ச்ச்.." என சலித்தவள் "உங்ககூட நான் பேசனும்..." என்றாள்

"ஹ்ம்ம்ம்... நானும்கூட உன்கிட்ட நிறைய பேசனும்... நான் சொன்னேன்ல....உனக்கும் எனக்கும் ஏதோ ஒரு வயர்லெஸ் கனக்சன் இருக்குன்னு.... பார்த்தேல்ல... இறைவனின் விளையாட்டை... நீ என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா... அப்படியே உன்னை...."

"ப்ளீஸ்... ஸ்டாப் இட்..." என்றதும் அவன் சொல்ல வந்ததை முடிக்காமல் நிப்பாட்டினான்..

"நான் உங்க கூட முக்கியமான விசயம் ஒன்னு பேசனும்...."

"சரி பேசு..."

"போன் ல இல்ல நேர்ல பார்த்து பேசனும்... இது லைப் மேட்டர்... ரொம்பவும் முக்கியமான மேட்டரும் கூட... அதனால நேர்ல பார்த்து பேசுறது நல்லதுன்னு படுது..."

"ஹ்ம்ம் ஆமாம் நேர்ல பார்த்து பேசுறது நல்லதுதான்... லைப் பார்ட்னர் ஆகப் போறோம்... மேரேஜ் முடியும் வரை இப்படி அடிக்கடி நேர்ல பார்த்து பேசிக்கிறது நல்லதுதான்... ஒருவருக்கொருவரை நல்லா புரிஞ்சிக்க முடியும்..." என ஆவலோடு கார்த்திக் பேச

மறுமுனையில் கவிதா அமைதிகாக்க  "ஹேய்... கவி இருக்கியா....என்ன சத்தத்தையே காணோம்.."
"ஹ்ம்ம் இருக்கேன் சொல்லுங்க..."

"சரி எங்க மீட் பன்னலாம்.. தியேட்டருக்கு போலாமா இல்லை... சாப்பிங் மால்..இல்லைனா... மெரினா பீஜ் போலாமா...? சூடா சுண்டல் இல்லை... மொளாகா பஜ்ஜி சாப்பிட்டுகிட்டே ஜாலியா பேசலாம்.." அவன் சொன்னதை எதையும் காதில் வாங்காதவளாக...

"ஐடியல் ரெஸ்டாரண்ட் வந்திருங்க.... இன்னும் ஹால்ப் அன் அவர்ல அங்க நான் இருப்பேன்... நேர்ல பார்க்கலாம் பாய்..." என இவன் பதில் சொல்லும் முன் போனை துண்டித்தாள்.

பதில் சொல்ல வாய் திறக்கும் முன் கட் செய்ததும்... போனை எடுத்து அதை கடுப்புடன் முறைத்துப் பார்த்தான்... உனக்கு குசும்பு ஜாஸ்திடி... உன்னை கவனிச்சிக்கிறேன்... என மனதிற்குள் சொல்லிக் கொண்டான்...

அப்பொழுதுதான் சிவா ஞாபகத்திற்கு வந்தான்.... உடனே அவனுக்கு கால் செய்தான்...

"ஹ்ம்ம் சொல்லு மச்சி.... இதோ... கிளம்பிட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்..."

"இல்லை... மாப்ள இன்னைக்கு நீ வர வேண்டாம்....."

"ஏன் என்னாச்சு...."

"எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங்க் ஒன்னு இருக்கு நாளைக்கு பார்த்துக்கலாம்....பாய்.." எனச் சொல்ல

மறுமுனையில்  "டேய்...டேய்...இருடா... காலை.. கட் பன்னிடா..." என அவன் சொல்லி முடிக்கும் முன் காலை கட் செய்தான் கார்த்திக்..

அடுத்த கால் மணி நேரத்தில் குளித்து ரெடியாகி தனது பைக்கை பறக்கவிட்டு இதோ இப்பொழுது ஐடியல் ரெஸ்டாரெண்டில்... இளையராஜாவின் இசை மனதை வருட முகத்தில் உர்ச்சாகம் வழிய மனதில் மகிழ்ச்சி பொங்கல் போல் பொங்கி வழிய கவிதா எனும் அழகுக் கவிதையை தன் கண்களால் அர்ச்சிக்கக் காத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றான் புன்னகை முகத்தோடு கார்த்திக்.

   அன்பே உன் புன்னகை என்ன பூகம்பமா..?
   உன் ஒற்றைப் புன்னகையில்
என் உறமேறிய நெஞ்சம் உழுங்குகிறதே!!
  
                                                                                                                            .....தொடரும்

Comments

Post a Comment

உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்

Popular posts from this blog

தி ப்ரேகப் (The Breakup)

அவள் ஒரு தேவதை-6

ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு