அவள் ஒரு தேவதை-6
அவள் ஒரு தேவதை-6
எபிஸோட்-6
சுவற்றில் அறையப்பட்டிருந்த கடிகாரம் மணி பத்து என்றது. பெட்டில் படுத்திருந்த கவியின் கண்கள் மெல்ல மெல்ல திறக்க அந்த அறை மசமசப்பாக கண்களில் புலப்பட்டது.
சில நொடிகளில் அந்த அறை தெளிவாகத் தெரிய.... தாம் எங்கு இருக்கிறோம் என்பது அங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் சொல்லாமல் சொல்லியது, ஒன்றும் புரியாமல் எழுந்தமர்ந்தவள் திரு திருவென விழித்துக் கொண்டிருந்தாள்.. என்னைக் கடத்தியது யார்...? என்னை ஏன் கடத்தினார்கள். கடத்தியவர்கள் ஏன் என்னை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வரவேண்டும்...? என எண்ணியபடி அமர்ந்திருக்க.. அவளது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் வண்ணம் அந்த அறைக்குள் நுழைந்தாள் நர்ஸ்.
"ஹலோ சிஸ்டர்... யாரு என்னை இங்க கொண்டுவந்து சேர்த்தது....?" என்றபடி கட்டிலில் இருந்து எழுந்தாள் கவி.
அதற்கு அந்த நர்ஸ் பதிலளிக்கும் முன்பு..
"நான் சொல்றேன்" என்றபடி உள்ளே வந்தான் கார்த்திக்..
கார்த்திக்கை கண்டு அதிர்ச்சியுற்றவள்... "நீ... நீங்களா....?"
"ஹ்ம்ம்.. எஸ்... நானேதான்..." என்றான் புன்னகை புரிந்தபடி.
"ஏன் என்னை கடத்துனீங்க...? இங்க எதுக்கு கொண்டு வந்தீங்க...?" குரலில் கொஞ்சம் கடுமை வெளிப்பட்டது.
"கூல் பேபி கூல்.. நேத்து நீ சொன்ன விசயங்கள் எந்த அளவுக்கு உன்மைன்னு தெரிஞ்சிக்கத்தான்.. இங்க கொண்டு வந்தேன்... உன்னை கூப்பிட்டா நீயா வரமாட்டேன்னு எனக்குத் தெரியும் அதான் உன்னை கடத்தவேண்டியதாப்போச்சு..." என்றதும் கவியின் முகம் வெளிரிப்போனது அவளது கண்கள் விரிய கார்த்திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவன் எதையோ வெற்றி பெற்றதுபோல் புன்னகைத்துக் கொண்டிருந்தான்... அமைதியாக நின்றுகொண்டிருந்தவள் அவனது வெற்றிப் புன்னகையை கண்டதும் கோபம் வந்தது..
"ஹலோ மிஸ்டர் கார்த்திக்... என்னை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வந்து செக்கப் பன்றதுக்கு நீங்க யாரு..?"
"ஓஹோ.... நான் யாருன்னா கேக்குற...? நான் உன்னை கட்டிக்கப் போறவன்..."
"எனக்கு இஸ்டம் இல்லை..." பட்டென்று கவி சொல்ல..
"அதான் ஏன்னு கேக்குறேன்....உனக்கு என்னை பிடிச்சுருக்குன்னு எனக்கு தெரியும்.. ஏன் உனக்கு இஸ்டம் இல்லை... எதுக்கு நேத்து அப்படி பொய் சொன்ன...?" என்றவனை இயலாமையுடன் பார்த்தாள் கவிதா.
"ப்ளீஸ் கார்த்திக் என்னோட நிலமை உங்களுக்குப் புரியாது.... ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மீ..."
"டாக்டர் உன்னை நல்லா செக் பன்னிட்டாங்க.... நீ நார்மலாதான் இருக்கியாம் எந்த பிராப்ளமும் இல்லைன்னு சொல்லிட்டாங்க... இதுக்கு அப்பறமும் நீ அதையே சொல்லிட்டு இருக்குறதுல எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை... நானும் இந்த மேரஜை நிறுத்தவும் போறது இல்லை..." என்றவனை சில நொடிகள் பாவமாகப் பார்த்தவள்...
"இதுக்கு மேல நான் எதுவும் சொல்றதுக்கு இல்லை....." என்றபடி அவனைக் கடந்து வெளியேறினாள் கவி.
அவள் பின்னாடியேச் சென்றவன் "வா கவி நான் ட்ராப் பன்றேன்.. நானும் ஆபிஸ்கு தான் போறேன்..." என்றதும் அவள் பேசாமல் அமைதியாக காரில் ஏறி அமர்ந்தாள்.
அவள் காரில் ஏறி அமர்ந்ததும் கார்த்திகிற்கு உற்சாகம் பிடித்துக் கொண்டது.... தனக்கு பிடித்த பாடலொன்றை விசிலடித்தபடி ட்ரைவிங்க் சீட்டில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து மிதமான வேகத்தில் மிதக்க விட்டான்..
"சிறிது நேரம் அமைதியாகவே சென்றது... கவி தலை குனிந்து அமர்ந்திருக்க... கார்த்திக் சாலையையில் இருந்த பார்வையை திருப்பி கவியை நோக்கினான்..."
"என்ன கவி அமைதியாவே வர்ற... எதாவது பேசலாமே..."
"என்ன பேசச் சொல்றீங்க...?" வெடுக்கென்று கேட்டாள் கவி.
"சரி.. சரி.. நீ கோபமா இருக்க... பேச வேண்டியதெல்லாம் மேரேஜ் க்கு அப்பறம் பேசிக்கலாம்..." என்றபடி வண்டியை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.... அவ்வப்பொழுது அவளது பக்கம் தனது பார்வையை திருப்பி அவளது அழகை இரசிக்கத் தவறவில்லை...
பதினைந்து நிமிடப் பயணம் ஆபிஸ் வந்திருந்தது... காரின் உயிரை தற்காலிகமாக நிறுத்தியவன் கவியிடம் திரும்பினான்... அவள் கார்த்திக்கை பார்த்தபடி அப்படியே அமந்திருக்க...
"ஹலோ... மேடம் என்னாச்சு.... ஆபிஸ் வந்தாச்சு..." என்றதும் நடப்பிற்கு வந்தவள் காரிலிருந்து இறங்கிக் கொண்டாள்.
இறங்கி நேரே கார்திக்கிடம் வந்தவள் "தயவு செஞ்சு நமக்கு மேரேஜ்னு ஆபிஸ்ல யார்கிட்டயும் சொல்லாதீங்க..."
"ஏன்...ஏன் சொல்லக்கூடாது...."
"ஏன்னா....? நமக்கு மேரேஜ் நடக்காது..." என்றுவிட்டு அவள் விறுவிறுவென முன்னே செல்ல...
"அதையும் பார்க்கத்தானே போற..." என்றபடி அவளைப் பின் தொடர்ந்தான் கார்த்திக்.
கேண்டினில் அமர்ந்திருந்தனர் சிவாவும் கணேஷும்.... "என்ன மச்சி... நான் கொடுத்த ஐடியா ஒர்கவுட் ஆச்சா..."
"அடப்போடா....அவ என் தங்கச்சி ரூம்ல போய் படுத்துக்குறா... அப்றம் எப்படி உன் ஐடியா ஒர்கவுட் ஆகும்.
"ஓஹ்... அப்படியா... என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு..."
"ஒரு எழவும் வேணாம்... நானே பாத்துக்கிறேன்..."
"நான் சொல்றதை கேளு மச்சி... இந்த ஐடியா கண்டிப்பா ஒர்கவுட் ஆஹும்..."
"ஹ்ம்ம்... சொல்லும்.... சொல்லித் தொலையும்...." என சிவா சலிப்பாக சொல்ல...
"மச்சி... இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் சில வீக்னெஸ் இருக்கு... எங்க... எப்படி.. என்ன செஞ்சா.. வழிக்கு வருவாங்கன்னு எனக்குத் தெரியும்...ஒவ்வொன்னா சொல்றேன் நால்லா கேட்டுக்கோ.... இதெல்லாம் ட்ரை பன்னி பாரு நிச்சயம் அவ உன் வழிக்கு வருவா..." என தான் அடிவாங்கி அனுபவப்பட்ட விசயங்களை சிவாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்...
அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டு முடித்தவன்... "டேய்... நீ சொன்னதெல்லாம் நம்பி ட்ரை பன்னலாமா...?"
"பயப்படாம ட்ரை பன்னு மச்சி... அடி விழுந்தா வாங்கிக்கோ... பரவால்ல உன் பொண்டாட்டிதானே..."
"அப்படிங்கிற.."
"அப்படித்தான்..."
கணேஷ் சொன்னவற்றை மனதில் அசைபோட்டவனுக்கு பொறுமை தாங்கவில்லை... உடனே முயற்ச்சி செய்து பார்க்க வேண்டும் போல் இருந்தது. மதியம் லீவ் சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றான் சிவா.
சிவா கதவைத் தட்ட, கதவைத் திறந்த சித்ரா... " என்னாச்சு சிவா... அதுக்குள்ள வந்துட்டீங்க..."
"ஒன்னுல்ல... தலைவலியா இருந்துச்சு அதான் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்...." என்றபடி உள்ளே வந்தான்.
"ரொம்ப தலை வலிக்குதா... நான் வேணா சூடா காப்பி போட்டுத் தரட்டுமா.." என்றவளை நோக்கி மேலும் கீழும் பார்வையை அலையவிட்டான்.
ஆரஞ்சு நிறச்சேலையில் தங்கச்சிலைபோல் நின்றிருந்தாள் சித்ரா. ரோஸ் நிற அதரங்களை கண்டவனின் உடல் உதறியது... ஆப்பிள் கண்ணங்களை கண்டவனின் கண்கள் விரிந்தது.
"என்ன ஒரு மாதிரியா பாக்குறீங்க..."
"ஆங்.... அது.. அது.. ஒன்னுல்ல சும்மாதான்...."
"உங்க பார்வையே சரி இல்லையே... திருட்டுப் பார்வையால இருக்கு... உங்களை பார்த்தா தல வலி வந்த ஆளு மாதிரி தெரியலையே.."
"ஆஹா... கண்டுகொண்டாளே... இப்ப என்ன பன்றது..." என நினைத்தவன்
"ஹேய்... என்ன நீ... என் பொண்டாட்டி உன்னை நான் பார்க்க கூடாதா...?"
"ஹ்ம்ம்.. பார்க்கலாம்தான், ஆனால் உங்க பார்வையே சரி இல்லையே..."
"மச மசன்னு பேசிட்டு இருக்காம போய் சூடா காப்பி போட்டு கொண்டுவா... தலை வேற வின்னு வின்னு தெரிக்கிது" என்றபடி நாற்காலியில் சாய்ந்து கொண்டு தலையை பிடித்துக் கொண்டான்
"சரிங்க.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. நான் போய் காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்" என்றபடி சித்ரா உள்ளே
செல்ல...
"ஆமா அம்மா எங்கே...?" என்றான் அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவனாக...
"அத்தை அவங்க தோழி யாருக்கோ முடியலைனு பக்கத்து தெருவரைக்கும் போய் இருக்காங்க..." அடுப்பில் பாலை ஏற்றியபடி சொன்னாள்.
சித்ரா கப்போர்டில் இருந்து காப்பி பவுடரை எடுப்பதற்காக கையை நீட்ட, இரு முரட்டுக் கரங்கள் அவளை பின்னால் வளைத்து அனைத்துக் கொள்ள...
"ஆவ்..." எனக் கத்தியபடி பின்னால் திரும்ப அவனது நெஞ்சில் மோதி அவனது கை வளயத்திற்குள் நின்றாள்.
அவன் இன்னும் தனது கைகளை இருக்கி அவளை தன்னுடன் நெருக்கிக் கொண்டான். இருவருக்குமிடையே இடைவெளி என்பது நூலளவு கூட இல்லை.. அந்தளவுக்கு அவளை தன்னுடன் அனைத்து நிற்க... அவள் விட்ட சூடான மூச்சுக் காற்று அவனது நெஞ்சைத் தாக்க.. அவனது ஸ்பரிசம் கொடுத்த அந்த இனிமையான உணர்வை அனுபவித்தபடி கண்மூடி அவனது நெஞ்சில் சாய்ந்து அவள் நிற்க.. தனது நெஞ்சில் பஞ்சுமூட்டையாய் கிடந்தவளின் முகத்தை நிமிர்த்தினான்.
அவள் கண்களை திறந்து பார்க்க... இருவரின் கண்களும் சத்தமில்லாமல் கதை பேசிக் கொண்டன...
அவனது பார்வையில் தன்னை இழந்திருந்தாள் சித்ரா... அவளது முகத்தை அவ்வளவு பக்கத்தில் கண்டவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.... அப்படியே கட்டுப் படுத்த முடிந்தாலும் அதை அவன் விரும்பவில்லை... அவன் தனது உதடுகளால் அவளது முகத்தினை அர்ச்சிக்க ஆரம்பித்தான்... அவளது அழகிய முகத்தின் ஒவ்வொரு பாகத்தினையும் இரசித்து இரசித்து முத்தமிட்டான்...
அவன் கொடுத்த முத்தங்களால் சித்ரா கட்டுண்டு கிடக்க... அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பால் பொங்கி வழிந்து ஏற்பட்ட சத்தத்தில் கண் விழித்துக் கொண்டவள் தன் நிலை உணர்ந்து அவனிடம் இருந்து விலகி கேஸ் அடுப்பை அனைத்தாள்.. அவன் கொடுத்த முத்தத்தில் அவளது உதடுகள் சற்று தடித்தது போல் அவள் உணர அவனிடம் திரும்பி முறைத்தாள்... ஆனால் அவனது கண்கள் அவனது தாபத்தை காட்டியது.... அத்தனை முத்தம் கொடுத்தம் அவனது முத்த தாகம் அடங்கவில்லை என்பதைச் சொன்னது..
அதற்கு மேலும் அவனது கூர்மையானப் பார்வையை அவளால் சந்திக்க இயலவில்லை... தனது நாக்கினைக் கொண்டு தனது உதட்டிற்கு ஒத்தடம் கொடுத்தபடி அவன் பார்வையை தவிர்த்த வண்ணம் காப்பி போடும் வேலையில் இறங்கினாள்.
மீண்டும் அவள் பின்னால் அவன் வந்து நெருங்கி அனைக்க...
"ப்ளீஸ்... சிவா. என்னை காப்பி போட விடுங்க... தொல்லை பண்ணாதீங்க..."
"எனக்கு காப்பி வேணாம்.... நீதான் வேணும்.."
"என்ன சிவா இது... தலை வலிய வச்சுக்கிட்டு இப்படி பன்னிட்டு இருக்கீங்களே... போங்க போய் ரெஸ்ட் எடுங்க காப்பி போட்டு கொண்டு வர்றேன்..."
"அடிப்போடி லூசு... எனக்கு ஒன்னும் தலை வலி எல்லாம் இல்லை...உன்னை பார்க்கத்தான் நான் வந்தேன்..."
"என்னது தலை வலி இல்லையா?..." என்றபடி அவனை முறைத்தவள் அவனுக்கு வலிக்காமல் அவனது நெஞ்சில் குத்தினாள்...
தனது நெஞ்சில் குத்திய அவளது கையைப் பிடித்து லாக் செய்தவன்.... மீண்டும் அவளை தன்னுடன் இருக்கிக் கொண்டான்..
"அய்யோ... என்ன பன்றீங்க விடுங்க...ப்ளீஸ் விடுங்க என்னை.." என அவள் கெஞ்ச அவன் மிஞ்சினான்...
மீண்டும் அவளது மெல்லிய உதடுகளை ஆக்கிரமித்திருந்தான். அவனது முத்ததில் அவள் மீண்டும் மூர்சையானாள்.
அப்பொழுதுதான் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. மீண்டும் சுதாரிப்புக்கு வந்தவள் அவனை விலக்கித் தள்ளிவிட்டு கைகளால் தன் உதடுகளை துடைத்துக் கொண்டவள் கதவை நோக்கி ஓடினாள்.... வெளியே சிவாவின் அம்மா மேகலை நின்று கொண்டிருந்தார்.
*******************************************************************
ஆபிஸில் கார்த்திக் கவியைப் பார்த்து புன்னகைப்பதும் அவள் அவனை "போ.." என்பது போல் தலையசைத்து முறைப்பதுமாய் போய் கொண்டிருந்தது... அவன் பார்க்கும் பொழுதெல்லாம் கவி தன்னைச் சுற்றி பார்த்துக் கொண்டாள்.. யாராவது தங்களைப் பார்க்கிறார்களா என பார்த்துவிட்டு இவனைக் கண்டு முறைத்துக் கொண்டாள்.
மணி இரவு ஏழு ஆனதும் கவி கிளம்ப கார்த்திக்கும் அவச அவசரமாக சிஸ்டத்தை அனைத்துவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.
இவன் செல்வதற்குள் லிப்ட் கதவு மூட ஆரம்பிக்க.. வேகமாக ஓடிப்போய் கதவு மூடுவதற்கு உள்ளே புகுந்தான்.. லிப்டிற்குள் கவியைத்தவிற வேறு யாரும் இல்லை.. அது கார்த்திக்கு வசதியாய் போனது... தள்ளி நின்றிருந்தவன் கதவு மூடியதும் கொஞ்சம் கொஞ்சமாக கவியை நெருங்கினான்...
அவன் தனதருகே வருவதைக் கண்டவளின் இதயம் தாறுமாறாகத் துடித்தது... கவி சுவற்றில் பல்லி போல் ஒட்டியபடி நிற்க... கார்த்திக் தன் இரு கரங்களால் சிறை வைத்தான்... அவள் கண்களில் மிரட்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்க... இவன் அவளை முத்தமிடுவதுபோல் அவள் முகத்தை நோக்கி குனியவும்... தரை தளத்தில் லிப்ட் ஓப்பன் ஆகப் போவதாக அறிவிப்பு வர... கவி அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளிவிடவும் கதவு ஓப்பன் ஆகவும் சரியாக இருக்க... கவி வேகமாக லிப்டைவிட்டு வெளியேறிச் சென்றாள்...
கார்த்திக் அவளைப் பின் தொடர... வேகமாக சென்றுகொண்டிருந்தவள் சட்டென்று பிரேக் அடித்து நின்றாள்... கார்த்திக்கும் நின்றான்...'
"இங்க பாருங்க கார்த்திக் நீங்க பன்றது கொஞ்சம் கூட நால்லா இல்லை...நான் ஒன்னும் உங்க ஒய்ப் கிடையாது... இந்நேரம் உங்க இடத்துல வேற யாராவது இருந்துருந்தா நடக்குரதே வேற... செருப்பு பிஞ்சிருக்கும்..." அவளது வார்த்தையில் அனல் பறந்தது.. கோபம் கொப்பளித்தது.
"ஹ்ம்ம்... இப்ப சொன்னியே ஒரு வார்த்தை.... உங்க இடத்துல வேற யாராது இருந்திருந்தால்னு... அப்ப நான் உனக்கு ஸ்பெசல் தானே என்னை உனக்கு பிடிச்சிருக்குல்ல... அப்ப இது லவ்தானே கவி..."
"நோ... இல்லை லவ் இல்ல..உங்க மேல எனக்கும் எப்பவும் லவ் வராது வரவும் கூடாது...."
"அதான் ஏன்னு கேக்குறேன்...."
அவள் சற்றும் யோசிக்கவில்லை பட்டென்று சொன்னாள் " ஏன்னா நான் வேற ஒருத்தருக்கு என் மனசை கொடுத்திட்டேன்...."
"பொய்... பொய்... இதை நான் நம்ப மாட்டேன்..."
"நம்பித்தான் ஆகனும் கார்த்திக் அதுதான் உன்மை...."
"ஹா.... ஹா.... எப்படி நம்புறது.... நேத்து ஒரு கதை சொன்ன.. அது பொய்னு தெரிஞ்சு போச்சு... இப்ப புதுசா ஒரு கதை சொல்றியா.... நெவெர் நீ என்ன சொன்னாலும் நான் நம்ப போறது இல்லை..." எனச் சொல்ல...
"ஓ.. நம்ப மாட்டீங்களா... இதோ பார்த்துக்கோங்க..." என்றபடி தனது துப்பட்டாவை விலக்கிவிட்டு தன் சுடியை நெகிழ்த்தி தன் நெஞ்சை காட்டினாள் கவி....
அவள் நெஞ்சில் "ராஜேஷ்" என பச்சை குத்தப் பட்டு இருந்தது
----தொடரும்.

கவிதை எழுத நினைத்தேன்...
சிந்தித்தேன் வந்தது கவிதை அல்ல.. உன் முகம்
ஆம் உன் முகமே என் முதல் கவிதை.

Comments
Post a Comment
உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்