அவள் ஒரு தேவதை - 8

அவள் ஒரு தேவதை - 8


கார்த்திக் பயத்துடனே வாசலை பார்த்துக் கொண்டு இருக்க... அவன் பயந்தது போலவே ஒருவன் பல்ஸர் பைக்கை மண்டபத்திற்குள் ஓட்டி வந்து பரேக் அடித்து நிற்க...

"நோ..." என்று கத்தியபடி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் கார்த்திக்... 

கார்த்திக்கின் சத்தம் கேட்டு அருகே உறங்கிக் கொண்டு இருந்த சிவாவும் எழுந்து கொண்டான்...

"என்ன மாப்ள என்னாச்சு..." 

ஒரு கணம் ஒன்றும் புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தவன் சிவாவின் குரல் கேட்டு திரும்பி

"ஒன்னுமில்ல மச்சி.... ஒரு கெட்ட கனவு...."

"என்ன கனவு...? அந்த ராஜேஷ் வந்துட்டானாக்கும்..."

"ஆமாம் மச்சி..."

"டேய்... டேய்... ஏன்டா பயந்து சாகுற... இன்னும் அஞ்சு மணி நேரத்துல உனக்கு மேரேஜ் ஆக போகுது... நியூசை பார்த்துட்டு இத்தனை நாள் வராதவன் இன்னைக்கு மட்டும் வந்திருவானா என்ன...?"

"அப்படி இல்லை மச்சி... காலைல கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க...."

"அடச்சே... இன்னுமாடா இதெல்லாம் நம்பிட்டு திரியிறீங்க... நீ எல்லாம் ஐடி ல வேலை செய்றேன்னு வெளில சொல்லிடாத..." என்றவனை முறைத்தான் கார்த்திக்

"ஹ்ம்ம்... அப்படியே அவன் வந்தாலும் என்னை மீறி அவனால ஒன்னும் பன்ன முடியாது... உன் மேரேஜை  நான் நடத்தி காட்றேன் பாரு..."

"டேய் மச்சி... கவி எனக்கு கிடைச்சிடுவாளாடா...பயமா இருக்குடா..."

"கவி உனக்குதாண்டா... பயப்படாம தூங்கு யாரு வந்து தடுக்குறான்னு நான் பாக்குறேன்..." என சிவா தைரியம் சொல்ல...

"ஹ்ம்... தேங்ஸ் மச்சி.." என்றபடி படுத்துக் கொண்டான்.


காலை மணி  ஏழு...

கல்யாண மண்டபம் பரபரப்பாக் காணப்பட்டது.. கார்த்திக் டென்ஸனுடன் அமர்ந்திருந்தான்... சிவா அருகே இருந்து தைரியம் சொல்லிக் கொண்டிருந்தான்...



"மச்சி எதுவும் கவலைப் படாத... எல்லாம் நல்லபடியா நடக்கும்...." சிவா சொல்லிக் கொண்டு இருக்க..

அறைக்கதவு தட்டப்பட்டது...

சிவா கதவைத் திறக்க வெளியே மாணிக்கம் நின்று கொண்டிந்தார்..

"முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சாம் கார்த்திக்கை கூட்டிட்டு வரச் சொன்னாங்க..."

"ஓக்கே அங்கிள் கார்த்திக் ரெடி ஆனதும்... நானே கூட்டிட்டு வாறேன்.." என சிவா சொல்ல...

"சரிப்பா..." என்றபடி மாணிக்கம் செல்ல... கதவை மூடிவிட்டு சிவா கார்த்திக்கிடம் திரும்ப... மீண்டும் கதவு தட்டப்பட்டது.

சிவா கதவை திறக்க, வெளியே ஒரு சின்னப் பையன் நின்று கொண்டிருந்தான் கையில் சிறு பேப்பர் துண்டோடு... சிவா அவனிடம் குனிந்து என்னவென்று கேட்க அவன் பதில் சொல்லாமல் சிவாவின் கையில் பேப்பரை தினித்துவிட்டு ஓடிவிட்டான்.. சிவா ஒன்றும் புரியாமல் பேப்பரை பிரித்து படித்தான்...


"கார்த்திக் நான் உங்க கூட தனியா பேச வேண்டும்... மொட்டை மாடிக்கு வரவும் -  கவிதா"

சிவாவிடம் பேப்பரை வாங்கி படித்த கார்த்திக் வேகமாக மொட்டை மாடிக்குச் சென்றான்..

அங்கே பந்தலின் நிழலில் மணப்பெண் கோலத்தில் நின்று கொண்டிருந்தாள் கவி..

வேகமாக அவளிடம் நெருங்கி வந்தவன்... "என்ன கவி இங்க என்ன பன்ற... கீழ டைம் ஆச்சுன்னு கூப்பிட்டு இருக்காங்க..."

"கார்த்திக்... இந்த மேரேஜ் நடக்கக் கூடாது..."

"என்னது...?"

"ஆமாம் கார்த்திக்... இந்த மேரேஜ் நடக்கக் கூடாது..." என்பவளை வித்தியாசமாக பார்த்தவன்

"இங்க பாரு கவி... நான் சொன்ன சொல் மாறமாட்டேன்... நமக்கு மேரேஜ் ஆகுறதுக்கு ஒரு செகெண்ட் முன்னாடி அந்த ராஜேஷ் வந்துட்டா கூட உன் இஸ்டப்படி இந்த மேரேஜை நிறுத்திடுறேன்... அதர்வைஸ்... நோவே..."

"இங்க பாருங்க கார்த்திக்.. எனக்கு இந்த மேரேஜ் ல எனக்கு சம்மதம் இல்லை... அன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி அந்த ராஜேஷ் நீயூஸ் பேப்பரை பார்த்தாவது வருவான்னு நினைச்சுதான் இந்த மேரேஜ் கு சம்மதிச்சேன்... ஆனால் அவன் வர்றது போல தெரியல... அதனால எனக்கு பிடிக்காத இந்த மேரேஜை நிறுத்திடுங்க..." என்றவளை கோபத்துடன் பார்த்தான்.

"சே... உன் சுய நலத்துக்காக என்னை யூஸ் பன்ன பார்த்திருக்கேல்ல.... முடியாது கவி... நீ எப்படி சுய நல வாதியோ அது போல நானும் சுய நல வாதிதான்.... இந்த மேரேஜ் நடந்தே ஆகனும்... அப்படி எதாவது பன்னி இந்த மேரேஜை நிப்பாட்டனும்னு நினைச்சேன்னா அப்றம் இந்த கார்த்திக்கை நீ உயிரோடு பார்க்க முடியாது கவி... நான் செத்துப் போவேன்." என்றவனை கோபத்தோடு வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கவி...

"இங்க பாருங்க கார்த்திக்... நான் இவ்வளவு சொல்லியும்... நீங்க கேக்கலேன்னா... நீங்க செத்துப் போறதும் என்னை மேரேஜ் பன்னிக்கிறதும் ஒன்னுதான்...." என்றுவிட்டு விறு விறுவென கீழே இரங்கிச் சென்றாள்.


மணவறையில் அமர்ந்திருந்தனர் கார்த்திக்கும் கவியும்...

நாளி ஆயிடுத்து கெட்டி மேளம் கெட்டி மேளம்... மேளச் சத்தத்தோடு  கார்த்திக் கவி திருமணம் முடிந்திருந்தது.

கவி கண்களில் கண்ணீரோடு கார்த்திக்கை ஏறிட... அவன் கவியைப் பார்த்து புன்னகைத்தபடி இருந்தான்... எதையோ சாதித்துவிட்டதைபோல் இருந்தது அவனது மனநிலை.

குங்குமத்தை எடுத்து கவியின் நெற்றியில் வைத்துவிட்டவன் அவளது கண்ணீரையும் துடைத்துவிட்டான்.


இந்த ஒரு நொடியில் என் வாழ்வை உன்னுடன்  இனைத்துவிட்டேன்... உன் மனம் தருவாயா... காதல் வரம் தருவாயா...?


நண்பர்களும் உறவினர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்க... கார்த்திக் தன் மனைவியின்  கையை தன் கையோடு பினைத்து வைத்திருந்தான்... சிரித்த முகத்துடன் வாழ்த்துக்களை வரவேற்றுக் கொண்டிருந்தான். கவியும் வேண்டா வெறுப்பாக நின்று கொண்டிருந்தாள்.


கார்த்திக் பக்கவாட்டில் திரும்பி கவியைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தான்.. அவளின் முகமோ மிகவும் சோர்வுற்றிருந்தது, அவனை நிமிர்ந்து பார்த்தவள் தலை குணிந்து கொண்டாள். எல்லோரும் மகிழ்ச்சியுடன் அலைந்துகொண்டு இருக்க... கவியின் மனதோ கவலையுற்றிருந்தது.

முகம் தெரியாத அந்த ராஜேஷ் கவியின் மணக்கோலத்தைக் கண்டு கதறியழுவதுபோல் உணர்ந்தாள் கவி. தலைவேறு வின் வின் என்று தெரித்தது. யாருமில்லா இருட்டு அறைக்குள் தள்ளியதை போல் கண் இருட்டிக் கொண்டு வந்தது. தலையில் கை வைத்துப் பிடித்துக் கொண்டவள் யாரும் கவனிக்கும் முன் மயங்கிச் சரிந்தாள்.




மணி காலை பத்து...

"ஒன்னும் இல்ல... நால்லா சாப்பிட்டு தூங்கி எழுந்தா சரியா போய்டும்..." என்றார் டாக்டர் பரமசிவம் அங்கு சுற்றி நின்றிருந்தவர்களிடம்.

கார்த்திக் தான் மிகவும் பயந்திருந்தான்... விஷம் எதாவது குடிச்சிட்டாளோ என்று. இப்பொழுது டாக்டர் சொன்னதைக் கேட்டதும்தான் நிம்மதியடைந்திருந்தான்.

"சரி அவங்களை யாரும் டிஸ்டர்ப் பன்னாம நால்லா தூங்கவிடுங்க... ரெஸ்ட் எடுக்கட்டும்." என்றபடி டாக்டர் வெளியேற சுற்றி நின்றிருந்தவர்களும் வெளியேற.. கார்த்திக் மட்டும் அப்படியே நின்றிருந்தான் கவியை பார்த்தபடி.

கவி ஒரு பூக்குவியல் போல் பெட்டில் கிடந்தாள். சில நொடிகள் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெருமை உண்டாகியது... இவள் என்னவள் எனக்காகப் படைக்கப்பட்டவள் என் வாழ்வை வசந்தமாக்க வந்த வானலோக தேவதை இவள்.

உறங்கிக் கொண்டிருந்தவளை தொந்தரவு செய்யா வண்ணம் அவளது நெற்றியில் உதடு ஒற்றி எடுத்தான்.

அவனது முதல் முத்தம்.. ஒரு தாய் தன் குழந்தையை உச்சி முகர்ந்து கொடுப்பாளே அதுபோல ஒரு முத்தம். உன்னை பாதுகாக்க வேண்டியது எனது கடமை என்பதை உணர்த்துவதுபோல் ஒரு முத்தம்.

முத்தம் கொடுத்துவிட்டு கார்த்திக் நிமிர... கவியின் அப்பா கருனாகரன் உள்ளே வந்தவர்... "மாப்ள காலைல இருந்து டயர்டா இருப்பீங்க வீட்ல போய் ரெஸ்ட் எடுங்க கவி எழுந்ததும் நாங்க கூட்டி வந்து விடுறோம்.." எனச் சொல்ல..

"அப்படி எல்லம் இல்லை மாமா... நானே இருந்து கூட்டிட்டு போறேன் மாமா..." என்றபடி சேரில் அமர்ந்து கொண்டான்.

"சரிங்க மாப்ள" என்றபடி அவர் வெளியே செல்ல... அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியின் முகத்தையே ரொம்ப நேரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

தனது தோளில் யாரோ கைபோட... திடுக்கிட்டுத்திரும்பி பார்க்க... அவனருகே கார்த்திக்கின் அத்தையும் கூடவே அவனது மாமாவும் வந்திருக்க... எழுந்துகொண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

அவன் அமைதியாக நிற்க.. அவனது அத்தை முதலில் கவியின் நலம் விசாரித்தவள்

"கார்த்திக் அன்னைக்கு இந்த அத்தை பேசுனதை எதையும் மனசுல வச்சுக்காத... உன்னோட இடத்துல இருந்து பார்த்தா நீ அன்னைக்கு பன்னது சரிதான்... எனக்கு என் பொண்ணு மேலதான் கோவம்.. உன் மேல இல்லை... இன்னைக்குகூட என் வரட்டு கவுரவத்துனால... உன் கல்யாணத்துக்கு வரல ஆனால்... கல்யாணபொண்ணு மயங்கி விழுந்துட்டான்னு கேள்விபட்டதும்  என் மனசு கேக்கல அதான் பாக்குறதுக்கு வேகமா ஓடியாந்தேன்.." என்றாள் கார்த்திக்கின் அத்தை ராஜேஷ்வரி.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை.... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரி ஆய்டும்னு டாக்டர் சொல்லிருக்காங்க... அன்னைக்கு பேசுனதை நான் எப்பவோ மறந்துட்டேன்.. என் மனசுல எதுவும் வச்சுக்கல.. மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்தை எல்லாம் சொல்லாதீங்க" என அத்தையும் மருமகனும் உருகிக் கொண்டிருக்க.. சித்ரா சிவாவுடன் அந்த அறைக்குள் வர..

தன் மகளைக் கண்டவள் தன் கணவனிடம் திரும்பி "வாங்க போகலாம்...." எனச் சொல்ல..


"என்ன ராஜீ அவசரம்... இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாமே..."என்றார் தன் மகளைப் பார்த்தபடி.

கார்த்திக் என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்று கொண்டிருக்க... " இப்ப வரபோறீங்களா இல்ல நான் மட்டும் ஆட்டோ பிடிச்சு போகட்டுமா..." எனக் கடுங்குரலில் சொல்ல..

ராஜேஸ்வரியின் வார்த்தைக்குக் கட்டுபட்டவர்போல் அவளது பின்னாள் அவர் செல்ல...

"அம்மா..." என்ற சித்ராவின் அழைப்பை அலட்சியம் செய்தவளாக அந்த அறையை காலி செய்தாள்.

சித்ரா சோகத்துடன் நிற்க "கொஞ்ச நாள் போகட்டும் அவங்களா புரிஞ்சுகிட்டு உன்கிட்ட வந்து பேசுவாங்க பாரு.." என்றான் சிவா.

பின்பு இருவரும் கவியின் நலம் விசாரித்தார்கள்.. சிவா கார்த்திக்கை கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.

"என்ன மச்சான்... இன்னைக்கு நைட் கஷ்டப்பட்டு கண்ணு முழிக்க வேண்டியது இல்லை போல..."

"என்னடா சொல்ற... எனக்கு புரியல..."

"இல்ல..... சிஸ்டர் இப்பவே நால்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டாங்க....அதான் நைட் கண் முழிக்க கஷ்டப்பட வேண்டியதில்லைன்னு சொன்னேன்."

"அடச்சீ வெக்கங்கெட்டவனே...என்னடா பேசுற.."

"போடா டேய்.. போடா.. நல்லவன் மாதிரி நடிக்காதடா.. நீ யாரு எப்படி.. எல்லாம் எனக்குத் தெரியும்..." என பதில் சொல்ல..

சித்ராவிடம் திரும்பிய கார்த்திக் "அம்மா தாயே... தயவு செஞ்சு இவன கூட்டிட்டு போமா என் மானத்தை வாங்கிட்டு இருக்கான்.." எனச் சொல்ல

"ஹேய்... இங்க பாருங்க கவி எழுந்துட்டா..." எனச் சித்ரா சொல்ல

இருவரும் திரும்பி பார்க்க கவி எழுந்தமர்ந்தாள். தான் எங்கே இருக்கிறோம் என்பதுபோல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.

"ஒன்னும் இல்ல கவி... நீ மயங்கி விழுந்துட்ட அதான் ஹாஸ்பிட்டல் கூட்டி வந்திருக்கோம்... வேற ஒன்னும் இல்ல.. தூங்கி எழுந்துட்டா எல்லாம் சரி ஆகிடும்னு டாக்டர் சொன்னார்.." என விளக்கினான் கார்த்திக்.

சிறிது நேரத்திற்கு அவளுக்கு எதுவும் புரியவில்லை... மெல்ல மெல்ல நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது... தனது கழுத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.. கழுத்தில் தாலிக் கயிரு தொங்கியது.
துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு பேச்சு வரவில்லை... செய்கையின் மூலம் கார்த்திக்கை அருகே கூப்பிட்டாள்.

அவனும் மனதில் காதல் பொங்க அவளருகே செல்ல... அவள் இவன் கண்களையே குறு குறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தவள் பின்பு என்ன நினைத்தாளோ.. அவன் சட்டையைப் பிடித்து மேலும் அருகே இழுத்தவள் அவன் கண்ணத்தில் ஓங்கி அறைந்தாள்.

மூவரும் திகைத்துக் கொண்டிருக்க... மேலும் மேலும் கார்த்திக்கின் கண்ணத்தில் அறை விழுந்தது.

"என் வாழ்கையை நாசம் பன்னிட்டியேடா பாவி..." என்றவாறு மேலும் மேலும் அறைந்தவள் அதற்குமேல் அவளிடம் தெம்பில்லை என்பதுபோல்  மீண்டும் மயங்கிச் சரிந்தாள்.

கார்த்திக் திகைப்புற்று நின்றிருந்தான், கூடவே சிவாவும் சித்ராவும் திகைப்போடு பார்த்துக் கொண்டு இருக்க..

கார்த்திக்கின் அப்பா ஒரு பெண்ணோடு அந்த அறைக்குள் நுழைந்தார்.

"அப்பு... இவ கவியோட தோழியாம்...பாக்க வந்திருக்காங்க..."

மூவரும் திரும்பி பார்க்க.... "ஹலோ... ராஜேஷ் எப்படி இருக்கீங்க..." என்றபடி கார்த்திக்கிடம் கை நீட்டினாள் அவள்.

கார்த்திக் குழப்பத்துடன் அவளுக்கு கை கொடுத்தவன் " என் பேரு ராஜேஷ் இல்ல... கார்த்திக்.. கவியோட ஹஸ்பண்ட்.."

"ஹ்ம்ம் தெரியும் நியூஸ் பேப்பர்ல பார்த்தேன்... ஆனால் நீங்களும் கவியும் காதலிக்க ஆரம்பிச்ச காலத்துல நீங்க ராஜேஷ்ணு சொல்லிதான் கவிகிட்ட பழகிட்டு இருந்தீங்க" என மிகப் பெரிய குண்டு ஒன்றை தூக்கிப் போட்டாள் அவள்.

அவள் சொல்வதை கேட்ட கார்த்திக் விதிர்த்துபோய் நின்றிருந்தான்.



                                                                                                           -தொடரும்

















Comments

Popular posts from this blog

தி ப்ரேகப் (The Breakup)

அவள் ஒரு தேவதை-6

ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு