ஒருநாள் அந்த ஒருநாள்....
ஒருநாள் அந்த ஒருநாள்
எனக்கு அறிமுகம் தேவை இல்லை…. ஏனெனில் ஏற்கெனவே அரைநாள் அனுபவத்தில் அறிமுகமாகிவிட்டேன்…. ஆம் அந்த கதையில் ஆரம்பத்தில் அறிமுகமாகி இறுதியில் பல்ப் வாங்கிய அதே அபு தான் நான்… சரி விசயத்திற்கு வருவோம்
எனக்கு புத்தகம் படிப்பதென்றால் மிகவும் இஷ்டம்…. சின்ன வயதில் இருந்தே எனக்கு வாசிப்பு பழக்கம் இருக்கின்றது… இதனாலேயே எனக்கு புத்தகத்தின் மீது தீராத காதல் என்று சொல்லலாம்.... (பாடப் புத்தகம் தவிற)
இராமநாதபுரத்தில் புத்தக கண்காட்சி ஆரம்பித்து நான்கு நாட்கள் ஆகியும் என்னால் போக இயலவில்லை…
(அயாம் ரொம்ப பிஸி யூ நோ....?)
இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது காலேஜில் இருந்து.. நேராக ஒரு டப்பா டவுன் பஸ்ஸை(2B) பிடித்து இராமநாதபுரம் செல்கிறேன்... நான் இப்பொழுது பைனல் இயர் என்பதால் எதிர்காலத்தை பற்றிய பயம் துளிர்விட்டு வளர ஆரம்பித்து என்னை ஆட்டி படைத்துக் கொண்டு இருந்தது..
இதனாலேயே முன்னைவிட அதிகமாக நான் துறை சம்பந்தமான விவரங்கள் சேமிக்க வேண்டியதாய், இருந்தது, மேலும் எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நேரம் சரியாக இருந்தது...
அதனாலேயே எனக்கு நேரம் கிடைக்காமல் போனது.... இன்று வெள்ளிக் கிழமையாதலால் நாளை இரண்டு நாட்களுக்கு விடுமுறை எனவே இன்று புத்தகக் கண்காட்சிக்கு போகலாம் என கிளம்பிவிட்டேன்...
இதோ இராமநாதபுரமும் வந்துவிட்டது.... பஸ்ஸைவிட்டு இறங்கிய நான்.... புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.....
ஒரு நல்ல நாவல் படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.... ஏதாவது நல்ல காதல் கதையாக எடுத்து படிக்க வேண்டும் அப்பொழுதுதான் மனதிற்கு ஒரு இதம்.... ரிலாக்ஸேசன் கிடைக்கும் என முடிவு செய்து கொண்டு உள்ளே நுழைந்தேன்...
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி அலசி ஆராய ஆரம்பித்தேன்... பதினோறாம் நம்பர் கடைக்குள் நுழைந்து பார்வையிட்டேன்....
குழந்தைகளுக்கான ட்ராயிங் புத்தகங்கள்..... அதைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான சில புத்தகங்களும் இருந்தன.....
அதைவிடுத்து வேறு பக்கம் எனது பார்வையை திருப்ப.. அங்கே பணக்காரன் ஆவது எப்படி என்ற தலைப்பிட்ட புத்தகம் தென்பட்டது... அதைக் கண்டதும் ரீசென்டாக பார்த்த வடிவேலு காமெடி ஞாபகத்திற்கு வந்தது.....
"நான் எப்படி விளம்பரம் பன்னி உங்களை எல்லாம் வரவழைச்சு பணக்காரன் ஆனேனோ அதே மாதிரி நீங்களும் வரவழைச்சு பணக்காரன் ஆகுங்க....."
என் முகத்தில் சிறு புன்னகை அரும்பியது.... மெல்ல சிரித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் சென்றேன்....
சமையல் குறிப்புகள்.... காரைக்குடி செட்டிநாடு சமையல்... பாட்டி செய்த சமையல்.....போன்ற புத்தகங்கள் தென்பட்டது....
இதெல்லாம் கண்டிப்பாக கல்யாணத்துக்கு அப்பறம் வாங்கி படிச்சு கத்துக்கணும்.... நமக்கு வாய்க்கப் போரவ எப்படிச் சமைப்பாளோ தெரியாது, நாமதான் முன்னெச்சரிக்கையா இருக்கனும்.... என நக்கலாக மனதிற்குள் நினைத்துக் கொண்டு... சிரித்துக்கொண்டே அடுத்த பகுதிக்குள் நுழைந்தேன்....
புத்தக கண்காட்சியில் சொற்பமான ஆட்களையே பார்க்க முடிந்தது....மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது....
எப்பொழுது டி.வி வந்ததோ அப்பொழுதிருந்து மக்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் பாதியாக குறைந்திருந்தது...
பிறகு செல்போன், இன்டெர்நெட், பேஸ்புக் வந்ததில் இருந்து மக்களின் புத்தகம் வாசிக்கும் சதவீதத்தின் மதிப்பு சரிந்து போய் இருப்பது இப்பொழுது தெரிந்தது..... மிகவும் குறைவான ஆட்களையே பார்க்க முடிந்தது...
ஆனாலும் சில பள்ளிகளில் இருந்து மாணவர்களை பள்ளியே அழைத்து வந்திருந்தது.... ஓடிப் பிடித்து விளையாடிய சிறுவர்களை அதட்டியபடி இருந்தார் ஒரு ஆசிரியை…..
புத்தகம் படிப்பதின் அவசியத்தை நான் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றேன்.... நம் மன உளைச்சலை போக்கும் சக்தி ஒரு புத்தகத்திற்கு உண்டு.... ஒரு புத்தகம் பத்து சைக்கியட்ரிஸ்ட்களுக்குச் சமமானது.....
நமது உள்ளத்தை செம்மை படுத்தக் கூடியது.... மனதை ஒருநிலைப் படுத்த உதவுவது.... தன்னம்பிக்கையை விதப்பது...
என்னடா இவன் கதை சொல்றேன்னு சொல்லிட்டு புத்தகத்தை பற்றி மொக்கை போட்டு நம்ம உயிரை எடுக்கிறான்னு நீங்க நினைப்பது எனக்கு கேட்கிறது.... சரி விடுங்கள் கதைக்கு செல்வோம்...
அருண் புத்தக நிலையத்திற்குள் நுழைந்தேன்.... ஏகப்பட்ட நாவல்கள் கண்ணில் பட்டது.... எதை தேர்வு செய்வது... எனப் புரியவில்லை.... அப்படியே எனது கண்களை புத்தகங்களுக்குள் அலைய விட்டபடி இருந்தேன் ஒரு புத்தகத்தில் என் கண் நிலைத்தது....
அது நான் ஏற்கெனவே பாதிவரை படித்த புத்தகம்.... தொலைந்துபோன காதல்..... என்ற தலைப்பிட்ட புத்தகம்... அதைக் கண்டவுடன்... அந்தக் கதையை எழுதிய ஆளின் மேல் கோபம் தலை தூக்கியது....
சே... கதையா... இது…? பாவிப்பய..... நம்பி வாங்கி படிச்சேன் இப்படி என்னை அழவிட்டுட்டானே.... கதையின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு அத்தியாயமும் அழுகைதான் இருந்தது,,,, ஏற்கெனவே இந்த ஆளு எழுதுன ஓடிப்போலாமா... கதையை படித்திருக்கின்றேன்.... கொஞ்சம் நன்றாக இருந்தது...
அதனால்தான் இந்த நாவலை வாங்கிப் படித்தேன்.... பயபுள்ள இந்த ஆளுமட்டும் என் கைல கிடைச்சான்.... செத்தான்டா....
பாவம் அந்த கதையின் நாயகி திவ்யா.... கொஞ்ச நஞ்சமா கஷ்டப்பட்டாள்..... அந்தப் பெண்ணை போட்டு பாடாய் படுத்திவிட்டான் இந்த ஆள்.....
ஒரு புத்தகத்தை படித்தால்... மனதிற்கு இதமளிக்க வேண்டும்.... இப்படியா அழ வைப்பது....? என எரிச்சலோடு அந்த புத்தகத்தை பார்த்தபடி நின்றிருந்தேன்.....
அப்பொழுதுதான் அந்த புத்தகம் ஒரு கையால் நீட்டி எடுக்கப் பட்டது.... நிச்சையமாக அது ஒரு பெண் கைதான், அந்த கைக்குச் சொந்தமானவள் யார் என எண்ணிக் கொண்டே பார்வையை திருப்பினேன்..... அதிர்ந்து போனேன்....
சூழ்நிலைக்கு தகுந்தவாறு பாடல் ஒன்று ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பு செய்யப் பட்டது...
ஒருநாள் அந்த ஒருநாள்......
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா...?
கனவா வெறும் கதையா...?
இள நெஞ்சை வருடும் நல்ல இசையா...?
அது கரைந்து போகுமா....?
என ஜானகி தனது தேன் குரலில் பாடிக் கொண்டிருக்க...
நான் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.... அவள் என்னை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தாள்....
அவள் தோளில் பேக் மாட்டி இருந்தாள்..... காலேஜ் ஸ்டூடென்ட் போல் இருந்தது.... கருப்பு சல்வாரில் கலராக ஜொலித்தாள்...
இவள் காலேஜ் ஸ்டூடென்ட் என்றால் அன்று நான் டவுன் பஸ்ஸில் கைக் குழந்தையுடன் பார்த்தது....? குழம்பிப் போனேன் நான்...
நான் குழப்பத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க... அவள் என் எண்ணத்தைக் கண்டு கொண்டவள் போல் கல கலவென சிரிக்க ஆரம்பித்தாள்..... கண்ணாடி குடுவையில் சில்லரைக் காசுகளை கொட்டியது போல் ஒரு சிரிப்பு....
எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது....
"ஓய் என்ன சிரிக்கிற...."
"இல்ல அன்னைக்கு நடந்ததை நினைச்சேன் அதான் சிரிச்சேன்...." என்றாள் நக்கல் நிறைந்த குரலில்...
"அ...அன்னைக்கு என்ன நடந்துச்சு....."
"ஹா...ஹா...ஹா..."என மீண்டும் சிரித்தாள்
"அடச்சீ.... நிப்பாட்டு.... சும்மா சும்மா கனச்சிக்கிட்டு...."
"என்னது கனைக்கிறேன்னா....? நீதான்டா அன்னைக்கு என்னை பிச்சைக் காரன் பிஸ்ஸாவ பார்த்தது மாதிரி பார்த்த...."
"என்னது பிச்சைக்காரனா....? உன்னை....."என நான் ஆரம்பிக்கும் பொழுதே....
"தம்பி தயவுசெய்து உங்க சண்டை எல்லாம் வெளியே போய் வச்சுக் கோங்க.... என் வியாபாரத்தை கெடுக்காதீங்க...." என அந்த கடைகாரன் என்னை கலைத்துவிட்டான்....
நான் திரும்பி அந்தப் பெண்ணை முறைத்தேன்..... அவள் அசால்டாக திரும்பி "இந்த புத்தகம் என்ன விலை..." என கடைக்காரனிடம் கேட்க
"நூத்தி இருபது ரூபாம்மா...." என அவர் சொல்ல....
சரி இதை எடுத்துக்கிறேன் என அவள் சொல்லி முடிக்கவில்லை..... நான் பதறினேன்
“அய்யய்யோ அதை வாங்காத.....” என நான் கத்திவிட.... அவள் கேள்வியாக என்னைப் பார்க்க... அந்த கடைக்காரன் இப்பொழுது என்னை முறைக்க ஆரம்பித்தான்....
"தம்பி... நீ புத்தகம் வாங்கலேன்னா கூட பரவால்ல வியாபாரத்தை கெடுக்காத..." என அவர் சொல்லவும் நான் அமைதியாகிப் போனேன்....
அவள் அந்த புத்தகத்திற்கான பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.....
"ஹ்ம்ம் படி படி.... படிச்சு நல்லா அழு.... என்னை பிச்சைக் காரன்னு சொன்னேல்ல... உனக்கு இது தேவைதான்...." என மனதில் நினைத்துக் கொண்டேன்..
என்னதான் இருந்தாலும் என் மனம் கவர்ந்தவள் அல்லவா....? அவளை பின் தொடர்ந்தேன்..... அவள் மேலும் சில புத்தகங்களை எடுத்து புரட்டிக் கொண்டு இருந்தாள்....
நான் அவள் அருகில் சென்று பேச்சுக் கொடுத்தேன்..... "அப்பறம்... மேரேஜ் லைப் எப்படி போகுது..."
அவள் வெடுக்கென்று என்னை பார்த்து முறைத்தவாறே சொன்னாள்.... "என்னை பார்த்தால் மேரேஜ் ஆனவ மாதிரியா தெரியுது....?"
நானும் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு
"தெரியலை.... ஆனால் அன்னைக்கு கைல குழந்தை வச்சிருந்தியே...."
"அது என்னோட அக்கா குழந்தை......" என்றாள் முள்மேல் தவம் என்ற புத்தகத்தை பார்த்தபடி.....
"உன் அக்காவ அன்னைக்கு நான் பார்க்கவே இல்லை.....?"
"உன்கிட்ட எல்லாம் சொல்லனும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்லை..... ஏன் இதெல்லாம் என்கிட்ட கேக்குற....."
"ஹேய்... இப்ப என்னாச்சு இப்படி கோபப் படுற.. சொல்லலைனா விடு..." என நான் சொல்ல...அவள் புத்தகத்தில் மூழ்கிப் போனாள்....
குழந்தை வளர்ப்பது எப்படி..... என்ற புத்தகத்தை எடுத்து அவள் முன் நீட்டினேன்.... அவள் என்னை என்ன என்பது போல் பார்க்க...
"இதை நீ வாங்கிக் கிட்டேன்னா நம்ம குழந்தைக்கு யூஸ் ஆகும்ல...." என்றேன்
"என்ன்னது......நம்ம குழந்தையா.....?"
"இ... இல்லை உனக்கு பிறக்கப் போற குழந்தைக்கு யூஸ் ஆகும்ல...."
"அதெல்லாம் தேவை இல்லை..... என் குழந்தையை எப்படி வளர்க்கனும்னு எனக்குத் தெரியும்.... "
"ஓஹ்... அப்ப மேரேஜ்கு அப்பறம் எனக்கு இந்த மாதிரி புத்தகம் வாங்குற செலவு மிச்சம்னு சொல்லு....."
அவள் என்னை முறைக்க....
"இல்லை உன் மேரேஜ்கு அப்பறம் உனக்கு செலவு மிச்சம்னு சொல்ல வந்தேன்....." என்றேன் குறும்பு குரலில்
"ஹ்ம்ம் நல்லா சமாளிக்கிற...."
"தேங்ஸ்..."
"ஹ ஹா.. இதுக்கெல்லாமா தேங்ஸ்..."
"நீ என்கூட பேசுறதுக்கே….. பல தேங்ஸ் சொல்லனும் நான்....."
"இப்படிலாம் பேசிட்டா பொன்னுங்களை கரெக்ட் பன்னிடலாம்னு நினைக்காதீங்க...... மிஸ்டர்......."என அவள் இழுக்க...
"மிஸ்டர் அபு...." என்றேன் நான்...
"ஹ்ம்ம் நல்ல பேரு...."
"தேங்ஸ்...."
"திரும்பவும் தேங்ஸா....?"
"சரி அதைவிடு.... உன் பேரை நீ சொல்லவே இல்லையே.....?"
"என் பேரு உனக்கு எதுக்கு...."
"இல்லை சும்மா ஒரு பொது அறிவுக்குத்தான்....." என நான் இளித்தேன்
"ஆமாம்..... டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம்ல இதைத்தான் கேக்குறாங்க பாரு...." என அவள் சொல்ல நான் ஹீ...ஹீ...என இளித்தேன்....
"உன் பேர் என்னன்னு சொல்லேன்...."என நான் லட்ஜை இல்லாமல் கேட்க....
"நான் முன்னபின்ன தெரியாதங்களுக்கு எல்லாம் பேரை சொல்றதில்ல...."
"என்னது என்னை தெரியாதா...? அதான் அன்னைக்கு பஸ்ஸுல பார்தோமே....?"
"அன்னைக்கு நானா உன்னை பார்த்தேன்.... நீதான் என்னை பார்த்த.... ஏதோ காணாததை கண்டமாதிரி"
"சரி... சரி நான்தான் பார்த்தேன் அதை ஒத்துக்கிறேன்.... அதான் முன்னாடியே என்னை தெரிஞ்சிடுச்சுல்ல... பேரை சொல்லலாம்ல..."
"ஹ்ம்ம் சொல்றேன் சொல்றேன்.... அதுக்கு முன்னாடி என்னக்கு ஒரு புத்தகம் தேடி எடுத்துக் கொடு...."
"ஹ்ம்ம் சொல்லு என்ன புத்தகம் வேணும்..... குண்டாகாமல் சாப்பிடுவது எப்படி புத்தகம் வேணுமா..... இல்லை.... குண்டானால் ஸ்லிம் ஆவது எப்படி... புத்தகம் வேணுமா...."
"ஓய்.... என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது.......?"
"ஹ்ம்ம் சூப்பரா இருக்க...."
"என்ன நக்கலா....?"
"இல்லையே நான் நக்கலயே..."
"இப்ப என்கிட்ட அடி வாங்க போற...."
"எங்க அடி அடி பார்ப்போம்...."என நான் எனது கண்ணத்தை காட்ட
"இப்ப உனக்கு என் பேரு தெரியணுமா... வேண்டாமா....?"
"ஹ்ம்ம் தெரியணும்.... "
"அப்படின்னா நான் சொல்ற புக்கை இங்க உள்ள எல்லா கடைலயும் தேடி எடுத்து கொடுக்கணும்....."
"சரி எடுத்து கொடுக்குறேன் சொல்லு...."
"ராவணனின் காதல்....."
"என்னது ராவணனின் காதலா..?... இராவணன் எப்ப காதலிச்சாரு....?"
"ஸ்ஸாப்பா.... இப்ப என்பேரு தெரியணுமா வேண்டாமா...?"
“தெரியணும்…..”
“அப்படின்னா…. புக்கோட வா….” என கண்டிப்புடன் சொல்லிவிட
“சரி இங்கேயே இரு நான் உனக்கு கொண்டு வாரேன்”எனச்
சொல்லியபடி ராவணனின் காதலை தேடி ஓடினேன்
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன்…. ஒவ்வொரு ராக்கையாக
கூர்ந்து நோக்கினேன்…… ராவணனின் காதல் தென்படவில்லை…. கடைகாரர்களிடமும் விசாரித்தேன்
அப்படி இரு புத்தகம் இருப்பதாகவே தெரியவில்லை…..
எனக்கு அவள் மீது சந்தேகம்…. உடனே எனது செல்போனை
எடுத்து… கூகுலாரிடம் கேட்டேன்…. அவர் அப்படி ஒரு புத்தகமே இல்லை என்று சொன்னார்….
கிராதகி….. பொய் சொல்லி என்னை அலையவிட்டுட்டாளே….
என மனதிற்குள் கருவினேன்…
வேகமாக அவள் இருக்கும் இடம் சென்றேன் அவளைக் காணவில்லை….
“சே…. நல்லா ஏமாத்திட்டு போய்ட்டாளே… ஏமாத்துக்
காரி…..” கால் வலிக்க அப்படியே நின்றிருந்தேன்…..
“ஹாய்….. என்ன புக்கு கிடைச்சுதா….” என்ற அந்தப்
பெண்ணின் சத்தம் என் பின்னால் இருந்து கேட்டது….
நான் திரும்பி அவளை முறைக்க…. அவளோ ஐஸ்க்ரீம்
சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்……
“ஹேய்… என்னை பார்த்தால் உனக்கு கேனையன் மாதிரி
தெரியுதா….?”
“ஹேய்…. கூல்யா…. ஏன் கோபப் படுற…. என்ன புத்தகம்
கிடைக்கலையா…..?”
நான் ஆமாம் என பரிதாபமாக தலையாட்டினேன்….
“ஓக்கே யா…. பரவால்ல….. ரொம்ப தேங்ஸ்…..”
“என்னது தேங்ஸ்ஸா….?”
“ஏன்…. நீ மட்டும்தான் தேங்ஸ் சொல்லுவியா…. எனக்காக
இத்தனை கடை ஏறி இறங்கிருக்க…. நான்லாம் தேங்ஸ் சொல்லக் கூடாதா….”
“அதான் புக் கிடைக்கலையே……?”
“அதுதான் எனக்குத் தெரியுமே….”
“என்னது முன்னாடியே தெரியுமா….?”
“தெரியும்னு சொல்ல முடியாது….. நீ வேற என் பேரை
கேட்டியா…. அதான் சொல்லலாமா வேணாமான்னு யோசிச்சேன் இப்படி ஒரு ஐடியா கிடைச்சது…..”
“என்ன ஐடியா….?” என்றேன் எரிச்சலாக
“இல்லை…. நான் சொல்ற தலைப்புல இங்க புக் இருந்தால்….
உன்கிட்ட பேர சொல்லலாம் இல்லைனா சொல்லவேண்டாம்னு இருந்தேன்…. அதான் சும்மா அடிச்சுவிட்டேன்…..”
“அப்ப பேரை சொல்ல மாட்ட…..!!”
“ஹ்ம்ம் ஆமாம் அதிலென்ன சந்தேகம்…..”
“உனக்காக இவ்வளவு அலைஞ்சிருக்கேன், எனக்காக சொல்லலாம்ல….”
என கெஞ்சலாக அவளிடம் கேட்க….
அதே சமயம் அவளது போன் கினு கினுத்தது…..
“………………………..”
“ஓக்கே ஓக்கே…… இதோ கிளம்பிட்டேன்…. நீ நேரே இங்க
வந்துடு….”எனச் சொல்லிவிட்டு போனை தனது பேக்கில் வைத்துக் கொண்டே கேட்டாள்….
“என்ன சொல்லிட்டு இருந்த…..?”என அவள் அசால்டாக
கேட்க
“இல்லை ஒன்னும் சொல்லலை….. உன் பேரும்
வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்…..” எனச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிக்க….
“ஹேய்…. ஹேய்… நில்லு நில்லு….. இப்ப
என்னாச்சுன்னு இப்படி கோபப் படுற…. இப்ப என்ன என் பேரு உனக்கு தெரியனும்… அவ்வளவுதானே….
சொல்றேன்…”
“ஹ்ம்ம் சொல்லு….”என்றேன் ஆவலாக….
அவள் இதழ்கள் திறந்து…. உச்சரித்தாள்
அவளது பெயரை…..
“நிஷா….”
“நிஷா…நிஷா… நிஷா….” என்ற பெயர் என்
மூளையைச் சென்று தாக்கியது…..
எனது உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது…..
“என்னவள்…. என்னவள்…. வந்துவிட்டாளா…..?
நான் மனதில் உருவாக்கி வைத்திருந்த என் காதல் தேவதை இவளா…..? சொல்லேண்ணா எண்ண ஓட்டாங்கள்
என்னுள்ளே…..வானத்தில் பறந்தேன்…… கற்றில் மிதந்துக் கொண்டிருந்தேன்……”
“ஹாலோ…… என்னாச்சு அப்படியே பேய்
பிடித்த மாதிரி நிக்கிற என்னாச்சு….” என அவள் சொன்னதும்தான் கீழே இறங்கி வந்தேன்…
அவளை காதல் பொங்கும் பார்வை பார்த்தேன்…..
அப்பொழுதுதான் அவன் வந்தான்….
ஃபேசர் பைக்கில்….. நீல நிற ஜீன்சும்…
கருப்பு நிற…. டீ-சர்டும் அனிந்து பாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு இருந்தான்…..
“ஹாய்….. உஷா…. வேலை முடிஞ்சதா…..”என
அவன் கேட்க…..
“ஹ்ம் முடிஞ்சிடுச்சுடா…..”என இவள்
சொல்லவும் அதிர்ந்து போனேன்…
“உ…உன் பேரு உஷாவா….? நிஷான்னு சொன்ன….”
என்றேன் அதிர்ச்சியாக
“இல்லையே நான் உஷான்னு தான் சொன்னேன்….
உன் காதை ஒரு நல்ல டாக்டர்கிட்ட செக் பன்னு….” என்றுவிட்டு எனது கையில் ஒரு புத்தகைத்தை
கொடுத்துவிட்டு சொன்னாள்…
“உனக்கு என்னோட ஞாபகார்த்தமா வச்சுக்கோ…..”
என அந்த பாலிவுட் ஹீரோவின் பைக்கின் பின்னே ஏறி அமர்ந்து அவன் தோளை பற்றிக்கொண்டாள்….
“பாய் அபு ஸீ யூ.”என அவள் சொல்ல பைக்
புறப்பட்டது….
நான் பிரமை பிடித்தமாதிரி நின்றிருந்தேன்……
என்னோட செல்போனில் வாட்சப்பில் மெசேஜ்
வந்ததாக சினுங்கியது……
எடுத்து படித்தேன்…. லோகு அனுப்பி
இருந்தான்….
“அடுத்தவன் ஃபிகருக்கு ஆசைப்படாதீங்க
ப்ரோ…”
அய்ய்யோ...... சாவடிக்கிறானுங்களே…. எப்படிதான்
இவனுங்களுக்கு தெரியுதோ….? கரெக்டா சிட்சுவேசனுக்கு தகுந்தமாதிரி அனுப்பிடுறானுங்க….
என சலித்துக் கொண்டே
அவள் கொடுத்த புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன்….
மன வியாதிகளும்…. போக்கும் வழிகளும்…..
அந்த ஒரு நாள் கரைந்துபோனது….
Comments
Post a Comment
உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்