தி ப்ரேகப் (The Breakup)

 தி ப்ரேகப் (The Breakup)






"Let's Breakup"

சென்னை போரம் மாலிற்குள் அமைந்திருக்கும் டொமினோஸ் பீட்ஸா செண்டரின் உள்ளே  தேவாவின் முன்னே அமர்ந்திருந்த அவனுடைய கேர்ள் பிரண்ட், அதாவது அவனது காதலி ஷாலு என்கிற ஷாலினியின் வாயில் இருந்து வந்த வார்தைகள்தான் மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.

"லெட்ஸ் வீ ப்ரேகப்.."

"ஏன் என்னாச்சு திடீர்னு...." என்றவனின் முகத்தில் துளியளவும் அதிர்ச்சி இல்லை... மிகவும் சாதாரணமாகக் கேட்டான்.

"இல்லை... தேவா.. இதுக்கு மேல நமக்குள்ள சரி வராது.... நாம பிரிஞ்சுடலாம்..."

"அதான்  ஏன்னு கேக்றேன்...."

"ஏன்னா... என்ன சொல்றது...? எனக்கு வீட்ல அலயன்ஸ் பாக்குறாங்க... என்னால பேரண்ட்ஸ விட்டு  வீட்டவிட்டு ஓடிலாம் வர முடியாது.."

"ஓஹ்...." என்றவன் அமைதியாக அவளைப்பார்த்தபடி இருந்தான்.

"இங்க பாரு தேவா... என்னைவிட உனக்கு நல்ல அழகான நல்ல கேரக்டர் உள்ள பொண்ணு கிடைப்பா என்னை நினைச்சு நீ கஷ்டப்படக் கூடாது சரியா..." என ஷாலு சொல்ல....

"ஹா...ஹா...ஹா..." என சிரிக்க ஆரம்பித்தான் தேவா....


"ஹேய்... தேவா.... நான் ஒன்னும் விளையாட்டுக்கு சொல்லலை.... உண்மையாதான் சொல்றேன்..."

"ஹா...ஹா....அய்யோ.... அம்மா.... முடியல..." வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து முடித்தான் தேவா..

"என்ன தேவா...? என்னாச்சு ஏன் இப்படி சிரிக்கிற.... என்னை பிரியப் போறதை நினைச்சா உனக்கு கஷ்டமாவே இல்லையா தேவா...?" என்றவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு சிரிப்புத் தாங்கவில்லை...

ரொம்பவும் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கியவன்.

"நான் ஏன் உன்னை நினைச்சு கஷ்டப்படனும்.... நான் சொல்ல வேண்டிய டயலாக் எல்லாம் நீ சொல்ற... நானே உன்னை கலட்டி விடுற ஐடியாலதான் இருந்தேன்... அதான் என்னால சிரிப்ப அடக்க முடியல..."

"எ... என்ன சொல்ற தேவா...?"

"எஸ்... நீ நினைக்கிற மாதிரிலாம் உன்னை மாதிரி நானும் உன்னை உன்மையா லவ் பன்னல... ஆக்சுவலா எனக்கு இந்த லவ் மேலலாம் இன்ட்ரஸ்ட் இல்ல.... நான் என் ப்ரெண்ட்ஸ் கேங்கோட இருக்கும்போது ஆளுக்கு ஒரு பொண்ணாட போண்ல கடலை போட போயிடுவானுங்க... நான் மட்டும் தனியா இருப்பேன்... நமக்கும் இந்த மாதிரி போன் பேசுறதுக்கும் பார்க் பீச் தியேட்டர்னு ஊர் சுத்துறதுக்கும் ஒரு பொண்ணு கிடைச்சா நல்லா இருக்குமேன்னு தோணும்.... அப்பதான் கரெக்டா நீ என்கிட்ட வந்து ப்ரபோஸ் பன்ன... எனக்கும் டைம் பாஸ் பன்ன ஆள் கிடைச்சிடுச்சுன்னு உன் லவ்வ அக்சப்ட் பன்னிகிட்டேன்...  இப்ப சொல்லு உன்னை பிரியிரதால எனக்கு என்ன கஷ்டம் வந்திடப் போகுது... கூர மேல சோறு போட்டா ஆயிரம் காக்க மடியும்... உன்னை நினைச்சுலாம் நான் ஏன் கஷ்டப்பட போறேன்..."

என்றவனின்.... நீண்ட நெடிய பதிலைக் கேட்டு கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தவள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு...

"தேங்க்... காட்... எங்கே நீ பிரச்சனை பண்ணிடப் போறியோன்னு பயந்துட்டேன்..."

"ஹா..ஹா.. நான் ஏன் பிரச்சனை பன்ன போறேன்...? யாரையும் கட்டாயப் படுத்தி என் லைப் ல வச்சுக்கனும்னு நான் விரும்ப மாட்டேன்..."

"ஹ்ம்ம்.... நல்ல பாலிசி.... உன்னை மாதிரியே எல்லா பசங்களும் இருந்துட்டா... எந்த பிரச்சனையும் இல்ல... யாரும் தற்கொலை பன்னிக்க மாட்டாங்க..."

"ஹ்ம்ம்... அதுவும் சரிதான்... லெட்ஸ் வி ப்ரேகப்... நாம்ம இந்த ப்ரேகப்ப பீட்ஷா சாப்பிட்டுக்கிட்டே செலிப்ரேட் பன்றோம்...  ஓக்கேவா..." 

"ஹ்ம்ம் ஓக்கே... ஓக்கே "முகத்தில் ஒருவித பிரகாசத்தோடு சொன்னாள் ஷாலு...

"ஓக்கே வெயிட் பன்னு நான் பீட்ஷா ஆர்டர் பன்னிட்டு வந்திடுறேன்..."என்றுவிட்டுச் சென்றான்.

டாய்லெட்டின் உள்ளே சென்று அமர்ந்திருந்தவனின் இதயம் தாறுமாறாகத் துடித்தது..... தனது இதயத்தில் யாரோ குண்டூசியால் குத்துவதுபோல் உணர்ந்தான்... அவனையும் மீறி அழுகை வெடித்தது.. சுவற்றில் சாய்ந்துக் கொண்டு தேம்ப ஆரம்பித்தான் தேவா..

"ஷாலு...என்னடி ஆச்சு உனக்கு.... ஏண்டி இப்படி பன்ன.... நீ இல்ல்லாம... நா எப்படி டி இருப்பேன்...அய்யோ..." புலம்பியபடி தேம்பிக் கொண்டிருந்தான் தேவா...


"எந்த சூழ்நிலை வந்தாலும் என்னைவிட்டு போய்ட மாட்டேல்ல தேவா...." கருப்பு வெள்ளை புகைப்படமாய் அவனது மனதில் பழய நினைவுகள் தோன்றி அவன் செவிகளில் ஷாலுவின் குரல்  வந்து எதிரொலித்தது..




சிறிது நேரம் அழுதுகொண்டிருந்த தேவா நேரம் ஆவதை உணர்ந்ததும் எழுந்து கொண்டான்.... முகத்தை கழுவிக் கொண்டு செயற்கையாகப் புன்னகையை முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்டான்.  

அழுததின் சுவடுகள் தெரியாதவகையில் அவன் தன்னை சரி செய்துகொண்டு ஷாலுவின் முன்னே சென்று அமர்ந்தான்..

அவளைப் பார்த்து புன்னகை புரிந்தான்... அவளும் பதிலுக்கு பல்லிளித்தாள்.

பீட்ஷா வந்தது.. சாப்பிட்டு முடித்தார்கள்... எழுந்துகொண்டார்கள்..

"ஓக்கே... தென்..." இது ஷாலு.

"தென்.... ஆல் தி பெஸ்ட்.... பெஸ்ட் ஆப் லக் பார் யுவர் ப்யூச்சர் லைப்.... அட்வான்ஸ்ட் ஹேப்பி மேரிட் லைப்..."என்றுவிட்டு தேவா கை கொடுக்க அவள் தேவாவின் கைப் பிடித்து குழுக்கினாள்...

"தேங்ஸ்.... பார் எவ்ரிதிங்க்... குட் பாய்..." என்றுவிட்டு அவள் டொமினோஸ் பீட்ஷாவின் கண்ணாடிச் சுவரைத் தள்ளிக் கொண்டு வெளியேறினாள்...


போகும் அவளையே நெஞ்சத்தில் வலியோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தேவா....

வெளியே சென்றவள் தனது போனை எடுத்து தனது அப்பாவிற்கு கால் செய்தாள்...

"அப்பா நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன்... தயவு செஞ்சு தேவாவை உயிரோடு வாழ விடுங்க ப்ளீஸ்ப்பா...."

பேசிவிட்டு போனை கட் செய்தாள் ஷாலு... ஒரு முறை தேவாவை திரும்பி பார்த்தாள்.. அவன் கண்ணாடிக் கதவின் மறுபுறம் தெரிந்தான்...


நீ வேணா என்னை உன்மையாகக் காதலிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் நான் உன்னை என் உயிருக்கும் மேலாக லவ் பன்றேன் (தேவா | ஷாலு​​​​)

இருவரும் ஒரே வாக்கியத்தை ஒரே சமயத்தில் சொல்லிக் கொண்டனர் ஆனால் கண்ணாடிச்சுவர் அவர்கள் சொன்ன அந்த வாக்கியங்களை இருவரையும் சென்றடைய விடாமல் தடுத்துக் கொண்டது.


Best Feelings are love and to be loved.    -abu








Comments

Popular posts from this blog

அவள் ஒரு தேவதை-6

ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு