காதல் ஹார்மோன்

காதல் ஹார்மோன்

நான் ஹரிஹரன்  என் நண்பர்கள் என்னை ஹரி என்றழைப்பார்கள்…. படித்தது பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ். ஆனால் முடிக்கவில்லை இன்னும் இரண்டு அரியர் பாக்கி இருக்கிறது… அடுத்த செமஸ்டரில்தான் அதை க்ளியர் செய்வதாக உத்தேசம்….. 
இப்பொழுது நான் எங்க ஏரியாவில் இருக்கும் விளையாட்டு மைதானத்தின் குட்டிச்சுவரில் எனது பள்ளி நண்பர்களோடு அமர்ந்திருக்கின்றேன்…..
 ஹ்ம்ம் ஆமாம்….. கழுதை கெட்டா குட்டிச்சுவர்தானே… அரியரினால் வேலையும் கிடைக்கவில்லை… போனால் சாப்ட்வேர் கம்பெனிக்குதான் வேலைக்கு போவேன்.. என்ற பிடிவாதத்தின் காரணமாக வேறு வேலைகள் எதற்க்கும் முயற்சி செய்யவில்லை.... 
என்னுடன் படித்தவர்கள் எல்லாம் நல்ல வேலைக்கோ இல்லை மேற்படிப்பிற்கோ சென்றுவிட நான் அதைவிட முக்கியமான வேலையை இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றேன்….. அதுதான்  என் வயதொத்த இளம் எதிர் பாலினங்களை சைட் அடிக்கும் வேலை… 
 சிறு வயதில் சறுக்கி, ஏறி குதித்து விளையாடிய குட்டிச் சுவர்தான் இப்பொழுது சைட் அடிப்பதற்கும் உதவி செய்கிறது…
“டேய்… மச்சி… அந்த பொண்ணை பாரேன்….” என என் நண்பன் ராகேஸ் உற்ச்சாகத்துடன் சொல்ல…..
நானும் அவன் கைக் காட்டிய பக்கம் திரும்பி பார்த்தேன்…..  அவள் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தாள்.... 
"மச்சி அது யாருன்னு தெரியுதா...?" என்றான் ராகேஸ்
"ஹ்ம்ம் தெரியுது மச்சி.....அன்னைக்கு  மெரினா ஜல்லிக்கட்டு ப்ரோடெஸ்ட் ல என்னையவே சைட் அடிச்சிட்டு இருந்தாளே அவதான...."
"அவளேதான்....."
"அவ எங்கடா இங்க....." என்றேன் நான் ராகேஸை பார்த்தபடி...
"டேய்.. மச்சி...மச்சி... அவ நம்மளை நோக்கிதான்டா வர்றா..."
ஆம் ராகேஸ் சொன்னதுபோல்... அவள் எங்களை நோக்கி வந்து வண்டியை ஸ்டான்டிட்டு நிறுத்திக் கொண்டாள்...
நாங்களிருவரும் குழப்பத்துடன் அவளைப் பார்க்க... அவள்  மயக்கும் மந்தகாசப் புன்னகையை உதட்டில் உதிர்த்துவிட்டபடி நின்றிருந்தாள்...
ரோஸ் நிறச் சுடிதாரில்... என் மனதை சுட்டெரித்துக் கொண்டிருந்தாள்....
நான் உடனே ராகேஸிடம் திரும்பி..... "என்னடா மச்சி சிரிக்கிறா...."
"ஆமாம் மச்சி....உன்னை பார்த்துதான்  சிரிக்கிறா..... போடா...போய் பேசு..."என்னை பிடித்து தள்ளினான் ராகேஸ்....
நானும் சற்று நடந்து சென்று அவளருகே சென்றேன்...
"ஹாய்..." என்றேன்....
"ஹாய்..." என்றாள் அதே மயக்கும் மந்தகாசப்  புன்னகையோடு...
"ஹ்ம்ம்... அன்னைக்கு மெரினா ப்ரோடெஸ்ட் ல பார்த்தது.... என்றுவிட்டு அவளைப் பார்க்க...
அவள் என்னை குறும்பான பார்வையால் என்னை சிலிர்க்கச் செய்துகொண்டிருந்தாள்.... அவள் எதுவும்  பேசவில்லை.....
"அப்றம் என்ன இந்த பக்கம்...." என நானே மீண்டும் பேச்சை ஆரம்பித்தேன்...
அவள் என் கண்களையே கூர்ந்து நோக்கியவாறு சொன்னாள்....
"உங்களை பார்க்கத்தான் வந்தேன்....."
"என்னையா...?. என்னை ஏன்....? நீ பார்க்கனும்......"
அவளிடம் மீண்டும் அதே மந்தகாசப் புன்னகை....
நான் ராகேஸிடம் திரும்பி பார்க்க.... அவன் பேசுடா பேசு.... என்றான்.. சைகையின் மூலம்
மீண்டும் அவளிடம் திரும்பி..... "சொல்லும்மா.... ஏன் என்னை நீ பார்க்கனும்...?" அதே கேள்வியை திரும்பவும் கேட்க...

"ஒரு வயசுப் பொண்ணு.... ஒரு பையனை எதுக்காக பார்க்க வருவாள்னு.... உங்களுக்குத் தெரியாதா....?" என்றாள் மெல்லிய குரலில்.
"என்னது 'ஒரு வயசு' பொண்ணா.... பார்த்தா அப்படி தெரியலையே... உனக்கு எப்படியும் 21 வயசு இருக்கும் போலயே...." என்றேன் நான்
"ஆ..... முடியலை..... உங்க மொக்கை... இதுக்கு நான் சிரிக்கனுமாக்கும்... சரி சிரிக்கிறேன்.... ஈ....ஈ....ஈ....ஈ" அவள் வெண்ணிற பற்களை காட்டி இளிக்க
நான் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டு இருக்க....
"சரி இப்ப தெளிவா கேக்குறேன்..... ஒரு மேஜர் ஆன பொண்ணு ஒரு பையனை எதுக்காக பார்க்க வருவா....?" என்று கேட்டுவிட்டு என் முகத்தையே அவள் பார்க்க...
நான் யோசிப்பதுபோல் நடித்துவிட்டு....."ஒரு வேளை உன் வண்டி பஞ்க்சர் ஆயிடுச்சோ... அதான் ஹெல்ப் கேட்டு வந்திருக்கியோ..." என்றேன் நான் அவள் ஸ்கூட்டரின் டயரை பார்த்தபடி.
"அய்யோ.. அய்யோ... இதுக்குமேல ஒரு பொண்ணு வெளிப்படையா சொல்ல மாட்டா... சே.. என்ன... நீங்க சரியான ட்யூப் லைட்டா இருக்கீங்க..."
"உன்மைலயே சொல்றேன்..... நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியலை..." வேண்டுமென்றே அவளது வாயை கிண்டினேன்...
அவள்  சில நொடிகள் என்னை கடுப்புடன் முறைத்துப் பார்த்தாள்.....
"எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.... நான் உங்களை லவ் பன்றேன் போதுமா....." அவளது குரலில் சிறிது கோபம் வெளிப்பட்டது...
என்னையும் ஒரு பெண் காதலிக்கிறாள் என உள்ளுக்குள்  நான் மனமகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
"ஓஹ்...." என்றேன் நான் சாதாரணமாக.
"ஓஹ் வா.... என்ன ஓஹ்....? நான் உங்ககிட்ட இப்ப என் லவ்வ சொல்லிருக்கேன் புரியுதா....?."
"ஹ்ம்ம் புரியுது.... ஆரம்பத்துல நானும் கெஸ் பன்னேன்...... பட் இதே மாதிரிதான் போன வாரம் பக்கத்து தெருவுல ஒரு பொண்ணு.... என்னை க்ராஸ் பன்னி போகும்போதெல்லாம் என்னையவே பார்த்துக்கிட்டே போவா...... நானும் ஆர்வத்துல அவகிட்ட பேச்சு கொடுத்தேன்.....அவ என்ன சொன்னாள் தெரியுமா....?"
"ஹ்ம் என்ன சொன்னாள்.... அந்த பொண்ணு...?"
"அண்ணா.... நீங்க CSE தானே.... உங்ககிட்ட பழய புக்ஸ் எல்லாம் இருந்தா கொடுங்குறீங்களான்னு சொன்னாள்... அதே மாதிரி நீ எதாவது சொல்லிடுவியோன்னு நினைச்சேன்....." என்று சொல்ல
அவள் எளிறுகள் தெரிய சிரிக்க ஆரம்பித்தாள்..... ஹாஹா...ஹாஹா...
"ஹலோ....ஹலோ.... இப்ப எதுக்கு சிரிக்கிற நீ....  நான் சொன்னது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லை...."
"காமெடி இல்லைதான்... ஆனால் நீங்க பல்ப் வாங்குனதை நினைச்சு பார்த்தால் சிரிப்புதான் வருது.... ஹா...ஹா...ஹா.."
நானும் அவள் சிரிக்கும் அழகினை இரசித்துக் கொண்டிருந்தேன்...இவளை சிரிக்க வைத்து வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது....
நான் அமைதியாக, சிரிக்கும் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க.... என்னுடைய பார்வை அவளை என்னவோ செய்திருக்க வேண்டும்.... சிரிப்பதை நிறுத்திவிட்டு என்னை நிமிர்ந்து எனது கண்களையே கூர்ந்து நோக்கினாள்....
கண்களால் என்னை களவு செய்யும் வேலையை செய்துகொண்டிருந்தாள்..... அவள் கண்களில் ஏற்பட்ட தற்காலிக மின்காந்தப் புலத்தால்.... என் கண்களும் ஈர்க்கப் பட்டு... பெளதீக விதிகள் எல்லாவற்றையும் பொய்யாக்கும்படி
அவள் கண்களின் மூலமாக எனது கண்களை தொடர்பு கொண்டு அவளது காதலை எனக்கு பரிமாற்றாம் செய்து கொண்டு இருந்தாள்....
அவளது கண்களைவிட்டு எனது கண்களை என்னால் அகற்றிக் கொள்ளவே முடியவில்லை... அவளது கண்களால் எனது கண்களை கட்டிபோட்டு வைத்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் அமைதியாக நின்றிருக்க அவளே பேச ஆரம்பித்தாள்...
"நான் சொன்னதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையே..."
நாம் மீண்டும் அமைதியாக நின்றிருக்க....
அவள் என் முகத்தின் முன்னே சொடக்கு போட்டபடி.... "ஹலோ.... உங்களைத்தான் கேட்டேன்...."
நான் சுதாரித்து நடப்பிற்கு வந்தேன்.... "ஹ்ம்ம்.... என்ன சொலிட்டு இருந்த...." நான் பட்டென்று கேட்க.
"நான் உங்ககிட்ட லவ்வ சொல்லி பத்து நிமிசம் ஆச்சு...... இன்னும் எந்த பதிலும் நீங்க சொல்லல..." என அவள் சொல்ல...
நான் சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்துவிட்டு . என் குரலையும் முகத்தையும் கொஞ்சம் சீரியசாக மாற்றிக் கொண்டு சொன்னேன்
"நீ எந்த நம்பிக்கைல என்னை லவ் பன்றேன்னு சொல்றேன்னு எனக்குப் புரியல.. நான் இன்னும் படிப்ப முடிக்கல... இன்னும் ரெண்டு அரியர் இருக்கு.... வேலைக்கும் போகாம வெட்டியா இந்த குட்டிச் சுவத்துல போற வார பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு வெட்டியா பொழுதை போக்கிட்டு இருக்கேன்... என்னை போய்  லவ் பன்றேன்னு சொல்ற..."
இத்தனை நேரம் புன்னகைத்துக் கொண்டிருந்தவளின் முகமும்... சீரியசானது..
"நீங்க படிப்ப முடிக்கலை..... வேலைக்குப் போகலை.... அது வேற விசயம்... அதுக்கும் நான் லவ் பன்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.... தரம் பார்த்து லவ் பன்னுனா... அதுக்கு பேரு லவ் இல்ல.... 
ஒருத்தனை பார்த்ததும் மனசுல தோனும்.... வாழ்கை முழுவதும் இவன்கூடத்தான் இருக்கனும்னு..... உங்களை பார்த்ததும் எனக்கு அப்படித் தோனுச்சு.... எல்லோரும் ஒரு நாளைக்கு நல்ல நிலமைக்கு போகத்தான் போறோம்... நீங்களும் நல்ல வேலைக்குப் போவீங்க.. அது எல்லோருடைய வாழ்கையிலும் நடக்கக் கூடிய ஒரு சாதாரணமான நிகழ்வு... 
நல்ல வேலை எப்பொழுது வேணாலும் வந்து சேரும்  ஆனால் காதல் அப்படி இல்லை... ஒரு தடவை சொல்லத் தயங்கிட்டோம்னா...அப்பறம் அவங்களை அடையறது கஷ்டமாயிடும்... 
நீங்க எனக்கு கிணத்துத் தண்ணீர் கிடையாது எங்க போயிட போகுது எப்பொழுது வேணாலும் நாம யூஸ் பன்னிக்கலாம்னு இருக்குறதுக்கு... நீங்க ஆத்துத் தண்ணீர்... உங்களை யாராவது பிடிச்சுக் கொண்டு போறதுக்கு முன்னால நான் பிடிச்சி வச்சிக்கனும்னு நினைச்சேன்.... அதனாலதான்... தயக்கமே இல்லாம என்னால உங்ககிட்ட என் லவ்வ சொல்ல முடிஞ்சது...
இப்பகூட நீங்க சொன்னீங்க.... ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு உங்களை க்ராஸ் பன்னும்போதெல்லாம் பாக்குறான்னு... ஒரு வேளை அவ உங்களை லவ் பன்றேன்னு சொல்லிருந்தால்.... என்னாகிருக்கும்.... நீங்களும் அவகூட கம்மிட் ஆகிருப்பீங்க... அப்றம் நான் என்ன பன்னுவேன்.... அப்படி எதாவது நடக்குறதுக்கு முன்னாடி இப்ப நான் முந்திக்கிட்டேன்" எனஅவள் சொல்லி முடிக்கும் முன்பு அவளது கண்ணங்களில் கண்ணீர் துளிகள் படர்ந்திருந்தது.
என் மேல் இவள் இவ்வளவு காதல் வைத்திருப்பாள் என கொஞ்சம் கூட நான் நினைக்கவில்லை... அவள் கண்ணீரைக் கண்டதும் நான் உருகிப் போனேன்... அவளை இழுத்து அணைத்து ஆறுதல்படுத்த வேண்டும் போல் என் மனம் பரபரத்தது.... ஆனாலும் நான் கஷ்டப் பட்டு என்னை கன்ட்ரோல் செய்து அப்படியே நின்றேன்... அவளை மேலும் சீண்டிப் பார்க்கும் எண்ணம் என்னுள்ளே ஏற்பட்டது....
"ஹேய்.... இப்ப யார் என்னை சிங்கிள்னு சொன்னது..... நான் சிங்கிள்னு நீயா முடிவு பன்னிக்கிட்டு வந்து ப்ரொபோஸ் பன்ற..."
"எ..என்ன... என்ன சொல்றீங்க.... நீங்க"
"ஐ மீன்... நான் கம்மிட்டட் னு சொல்றேன்...." என் பதிலால் அவள் வேதனையுற்றது அவளது முகத்தில் தெரிந்தது..
வேகமாக தனது கண்களை துடைத்துக் கொண்டாள்..... மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்...
"தேங்ஸ்  பார் யுவர் இன்ஃபார்மேசன்...குட் பாய்"  என்றபடி வண்டியை நோக்கி அவள் செல்ல முற்பட....
அவள் கைபிடித்து நான் நிறுத்தினேன்..... "ஹேய்... அதுக்குள்ள எங்கே போற... என் ஆளு யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்றம் போ..." என குறும்புடன் நான் சொல்ல....
அவள் கோபத்துடன் திரும்பி..... "அதான் நீங்க கம்மிட்டட் னு தெரிஞ்சு போச்சே... அந்த பொண்ணு யாரா இருந்தா எனக்கு என்ன...?" என் கையை உதறியபடி அவள் ஸ்கூட்டியில் சென்று அமர்ந்து ஸ்டார்ட் செய்தாள்...
"ஹேய்.... லூசு... நில்லு..." நான் லூசு என்றதும் அவள் சீரினாள்....
"என்னது லூசா....? இந்த பேச்செல்லாம் உங்க ஆளுக்கிட்ட வச்சுக்கோங்க.... இனிமேல் உங்களை நான் பார்க்க வரமாட்டேன்..." என்றபடி ஸ்கூட்டியை முடுக்கினாள்....
"ஹேய் லூசு....... நீதான் அந்த லூசு.... அந்த லூசுப் பொண்ணு நீதான்...." என நான் கத்தவும்....
சரக்கென்று பிரேக் அடித்து நின்றது ஸ்கூட்டி.... அதிலிருந்து அவசரமாக இறங்கியவள்.... என்னை நோக்கி வேகமாக ஓடி வந்து என் கைகளை பற்றிக் கொண்டு.....
தலையாட்டியபடி... கண்களால் அப்படியா....? என்றாள்....
நானும் அவள் கை பிடித்து ஆமாம் என்றேன்... அடுத்த நிமிடம் அவளின் கண்களில் இருந்து வந்த சந்தோசக் கண்ணீர் என் மார்பை நனைத்துக் கொண்டிருந்தது



பெண்ணே! உன் கண் என்ன


காந்தப்புலமோ?



இரும்பாக இருந்த என் மனதை



ஈர்த்து விட்டாயே!








உன் கண்கள் காந்தமாக



இருப்பதாலோ என்னவோ-நான்



இரும்பாக இருக்கவே



ஆசைப்படுகிறேன்
காதல் ஹார்மோன்களின் விளையாட்டு தொடரும்.....

Comments

Post a Comment

உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்

Popular posts from this blog

அவள் ஒரு தேவதை-6

ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு

ஓடிப்போலாமா….?---4