ஓடிப்போலாமா….?---4
கல்யாணக் கனவுகள்
அது ஒரு பிரமாண்டமான
கல்யாண மண்டபம், மண்டபத்தின் ஹால் முழுவதும்
நாற்காலிகளால் நிரப்பப்பட்டிருக்க, நாற்காலிகளை
உறவினர்கள் ஆக்கிரமித்திருக்க, மணமேடையைச் சுற்றி
கதிர், சுகப்ரியாவின் பெற்றோர்கள் புடைசூழ, மணமேடையில் கதிர், சுகப்ரியா மணக்கோலத்தில்
அமர்ந்திருக்க, ஐயர் அவர்கள் மந்திரம் ஓத,கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று மேளம் ஒலிக்க,
அமர்ந்திருக்க, ஐயர் அவர்கள் மந்திரம் ஓத,கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று மேளம் ஒலிக்க,
கதிர் தாலியை வாங்கி
சுகப்ரியாவின் கழுத்தில் கட்டப்போகும் தருணம்.
“என் ஃப்ரென்ட போல யாரு
மச்சான்” என அவனுடைய மொபைல் கதறியது.
பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்தான் கதிர்.
"சே… எல்லாம் கனவா..?" என்று
உணரும் பொழுது ஏமாற்றமாக இருந்தது இது உன்மையாக
இருந்திருக்கக் கூடாதா என ஒரு பக்கம் மனம் ஏங்கியது.
அவனுடைய செல்போன் ரொம்ப
நேரம் அடிப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தான், உடனே ஆன் செய்து அதன் கதறலை அடக்கினான் மறுமுனையில் சேகர் பேசினான்.
“என்ன மச்சான் போன் எடுக்க இவ்ளோ நேரமா..? அப்படி என்ன பன்னிட்டு இருக்க”
“கொஞ்சம் அசந்துட்டேன் மச்சி..”
“ஒகேடா ஒரு 9 மணிபோல ரெடியா இரு உன்னை பிக்கப் பன்னிக்கிறோம் சரியா..?”
“எதுக்குடா..?”
“டேய் மச்சான் மறந்திட்டியா இன்னைக்கி குற்றாலம் கெளம்புறதா பிளான் பன்னிருந்தோமே...”
“ஓஹ் ஆமால்ல.. சாரிடா ஏதோ ஒரு
ஞாபகத்துல மறந்திட்டேன்”
“சரிடா அப்ப நான் வைக்கிறேன் நீ ரெடியா இரு”
“ஓகே மச்சி” என செல்போனை கட் செய்த மறு நொடி மீண்டும் அவனது செல்போன் அலறியது, புதிய நம்பராக இருந்தது, அட்டென்ட் செய்ய மறுமுனையில் சுகப்ரியா பதட்டத்துடன்
“ப்ளீஸ் கதிர் என்னை எப்படியாவது வந்து கூட்டிட்டு போய்டுங்க கதிர் ப்ளீஸ்..”
“என்ன ப்ரியா... என்னாச்சு...?”என்றான்
பதட்டம் தொற்றிக்கொண்டவனாக.
அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“நான் வீட்ல போய் அப்பாகூட பேசினேன், பெரிய பிரச்சினை ஆகிடுச்சு... என்னை இனிமே வெளியே எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லி என்னை ரூமில் அடச்சி வச்சிட்டாரு என் செல்
போனையும் இப்ப பறிச்சுக்கிட்டாங்க.”
“அப்டினா இப்ப எதுல இருந்து
பேசிட்டு இருக்க”
“இது என் ஃப்ரென்டோட செல் போன் அவ காலைல என்னை பார்க்க வந்திருந்தப்ப மறந்து விட்டுட்டுப் போய்ட்டா அதுல இருந்துதான் கால் பன்றேன் ப்ளீஸ் கதிர் எப்டியாவது என்னை கூட்டிட்டு போய்டுங்க” என்றாள் உடைந்து போன குரலில்.
இங்கே இவன் மூளையில் புதிதாக திட்டம் ஒன்று ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
“சரி பயப்படாம இரு உன்னை
இன்னைக்கு எப்பாடு பட்டாவது கூட்டிட்டு போய்டுவேன் ஒகே வா”
“ஹ்ம்ம்”
“வெயிட் பன்னிட்டு இரு நான் எந்நேரம் வேணாலும் அங்கு
வருவேன், சரி நான் இப்ப வைக்கிறேன்”என போனை வைத்தான்.
கதிர் தனது ரூமை விட்டு வெளியே வந்தான்,மேலே இருந்து பார்க்க கீழே அவனுடைய அப்பா டி.வி-ல் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்.
கீழே சென்று கிச்சனை அடைந்தான், அவனுடைய அம்மா அவனை ஆச்சரியமாகப் பார்த்தவாறே கேட்டாள்
கீழே சென்று கிச்சனை அடைந்தான், அவனுடைய அம்மா அவனை ஆச்சரியமாகப் பார்த்தவாறே கேட்டாள்
“என்னடா அடுப்படி பக்கம் ஆச்சரியமா இருக்கே..?”
“பசிக்குதும்மா சீக்கிரம் சாப்பாட்டைப் போடு...”
பசிக்கிறது என்ற மகனை
ஆச்சரியமாகப் பார்த்தாள் மரகதம்.
“கொஞ்சம் பொறுடா கண்ணா”
என்றவாறு வேகமாக செயல்பட்டாள்.
சிறிது நேரத்தில் வேலை
முடிந்துவிட அவனுக்கு ஒரு தட்டை எடுத்து வைத்து சாப்பாட்டைப் பரிமாறினாள்.
அவன் அன்று வழக்கத்திற்கு
அதிகமாக சாப்பிட்டான், இனிமேல் இந்தச் சாப்பாடு
கிடைக்காது என்று நினைத்தானோ என்னவோ,மரகதம் அவன் சாப்பிடுவதையே
பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் சாப்பிட்டு முடிக்க எழுந்து கை கழுவிக்கொண்டு சோபாவில் அமர்ந்தான், அவன்
அப்பாவின் முகத்தைப் பார்க்க அவர் எந்த ஒரு சலனமும்
இல்லாமல் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்.
"சாரிப்பா இதுவரைக்கும்
நீங்க நினைத்த மாதிரிதான் என் வாழ்க்கைல எல்லாமே நடந்திருக்கு, ஆனால் இந்த கல்யாணம் மட்டும் என் இஸ்டப்படிதான்
நடக்கனும்னு ஆசைப்படுறேன்" என மனதிற்குள் தன் அப்பாவிடம் சொல்லிக் கொண்டான்.
திரும்பி தன் அம்மாவையும்
பார்த்தான், நான் ஓடிப்போய்விட்டேன் எனத் தெரிந்தால்
பாவம் துடித்துப் போய் விடுவாளே!
"என்னை மன்னிச்சிடும்மா, எனக்கு வேறு வழித் தெரியலை" என இனிமேல் செய்யப் போகும்
தவறுக்கு இப்போதே மன்னிப்பை வேண்டினான் மனதிற்குள்.
மணி 9.00 ஆக இன்னும்
பத்து நிமிடம் பாக்கி இருக்க கதிர் தனது ரூமிற்குச் சென்று ஒரு ட்ராவல் பேக்கில் தனது
ஆடை உட்பட தேவையான இதர பொருட்களையும் எடுத்து தயாராகி முடித்த மறு நிமிடம் அவனுடைய
ரூம் கதவு தட்டப்பட்டது.
கதவை திறந்து பார்க்க
மரகதம் நின்றுகொண்டிருந்தாள்
“கதிர் உன் ஃப்ரென்ட் சேகர் உனக்காக வெளிய வெயிட் பன்னிட்டு இருக்கான் பா”
“சரிம்மா இதோ ரெடியாகிட்டேன்”
எனச் சொன்னவாறு தனது பேக்கை எடுத்துக் கொண்டான்
“அம்மா நான் போ.. போய்ட்டு வர்றேன் மா”
“நல்லபடியா போய்ட்டு
வாடா கண்ணா” என தன் மகனை அனுப்பி வைத்தாள்
அவன் கீழே சென்று தனது
அப்பாவிடமும் சொல்லி விட்டு சேகருடன் கிளம்பினான்.
“என்னடா மச்சி நீ மட்டும்தான்
வந்திருக்க வாசு எங்கடா..?”
“இப்ப அவனை பிக்கப் பன்னதான்டா போய்ட்டு இருக்கோம்”
“சரி மச்சி குற்றாலத்துல ரூம்லாம் புக் பன்னிட்டியா..?”
“அதெல்லாம் பக்காவ ரெடி பன்னிட்டேன் டா” என்று தனது திட்டம் முழுவதும் சொன்னான் சேகர், கதிரின் திட்டம் புரியாமல்.
ஒரு ஐந்து நிமிடம் கரைந்து போக வாசுவின் வீட்டை அடைந்தனர்.
வாசுவிற்கு போன் செய்ய, அவன் இன்னும் ஐந்து நிமிடத்தில் வருவதாக சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
கதிர் தனது திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தான்.
“மச்சி என் செல்போனை
வீட்ல மறந்து வச்சிட்டேன்டா, நான் போய் எடுத்துட்டு வந்திடுறேன்” என சொல்லியபடி கார்சாவியை
வங்கினான்.
“கதிர் நானும் வரவா..?”
என்றவனை தவிர்த்துவிட்டு காரில் ஏறி அமர்ந்த
மறு நொடி அவனுடைய செல்போன் அடித்தது.
“என் ஃப்ரென்ட போல யாரு மச்சான்”
சேகரின் முகம் இஞ்சி
தின்ற குரங்கை போல் ஆனது.
“என்னடா மச்சி இதெல்லாம்”
என சொன்ன மறு நொடி
கதிர் வண்டியை ஸ்டார்ட்
செய்து “சாரிடா மச்சி பாய் பாய்” என்று சொன்னவாறே வண்டியை ப்ரியாவின் வீட்டை நோக்கிச் சீறவிட்டான்.
Comments
Post a Comment
உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்