அவள் ஒரு தேவதை-3
அவள் ஒரு தேவதை!
மாரியும் இல்லை ஏரியில் நீரும் இல்லை...
கிணற்றிலும் ஊரவில்லை, குடத்திலும் துளி இல்லை..
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க நாதி இல்லை..
ஒரு வயதுக் குழந்தைதாயின் பரிதவிப்போ பாலாக ஊறியது...
குவளையின் வாயிலாக அந்த பெரியவரின் தாகம் தீர்த்த
அவளும் ஒரு தேவதைதான்..
(குறிப்பு: திருப்பாலைக்குடி என்ற ஊரின் பெயர் காரணம்...)
மேலிருந்தபடி மன்மதன் தன் அம்பை குறிபார்த்து சரியாக கார்த்திக்கின் நெஞ்சில் எய்தான்.... கார்த்திக்கின் மனதில் எண்ணற்ற மகிழ்ச்சி பெருகெடுத்தது... தன்னை மறந்து, இருக்கும் இடம் மறந்து... செயல் மறந்து.. மெல்ல மெல்ல மேலே பறந்து, காற்றோடு காற்றாய் கலந்து உலவித்திரிந்தான்... அவன் மேலிருந்து கீழே இறங்கி வருவது போல் தெரியவில்லை....
இருவரையும் மாறி மாறி பார்த்த அந்த இளைஞன் "சார்... சாரி... சார்.. உங்க ஆளுன்னு தெரியாம...." என அவன் பம்மினான்..
அவனது குரல் கேட்டு நடப்பிற்கு வந்தவன் மேலிருந்து கீழிறங்கினான்... அந்த தேவதைப் பெண்ணை பார்த்து புன்னகைத்தவன்... அவனிடம் திரும்பி..
"ஹேய்... இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இனிமேல் என் ஆளு பின்னாடி சுத்துறதைப் பார்த்தேன்... தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு... ஓடு...ஓடிப்போ..." என அடிப்பது போல் கை அசைக்க... வேகமாக அந்த இடத்தை காலி செய்தான் அவன்..
அவன் சென்றதும் நிம்மதியாக மூச்சுவிட்டாள் அந்த தேவதை.... கார்த்திக் புன் முறுவலுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க...
"தேங்க் யூ வெரிமச் சார்.... சரியான நேரத்துல வந்து ஹெல்ப் பன்னிங்க... ரெண்டு நாளா ஒரே டார்ச்சர்... இனி வரமாட்டான்னு நினைக்கிறேன்.... தேங்க் யூ எ லாட்.."எனப் புன்னகையோடுச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகல முற்பட...
"ஹலோ.... என்னதிது...."
கார்த்திக்கின் குரல் அவளை நிறுத்த.... திரும்பியவள்.... " என்ன....?" என்பதுபோல் பார்க்க..
"என்ன நீ பாட்டுக்க... போய்டே இருக்க..."
"அதான் தேங்க்ஸ் சொல்லிட்டேனே..... வேற என்ன வேணும்.....?"
"என்னை பாய் ப்ரெண்ட் ணு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போற... இதுக்கு என்ன அர்த்தம்....?"
"ஓஹ்... நோ..... நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... அவனை எப்படி அவாய்ட் பன்றதுன்னு தெரியாம இருந்தேன், அப்பதான் நீங்க வந்தீங்க... பார்க்க ஆள் டீசண்டா இருக்கீங்களா..அதனாலதான் அப்படி சொன்னேன்.... நீங்களா புரிஞ்சுக்குவீங்கன்னு நினைச்சேன்..." அசடு வழிய அவள் சொல்ல....
இத்தனை நேரம் பிரகாசமாய் இருந்த கார்த்திக்கின் முகம்... அவ்வளவுதானா.? என்பதுபோல் ஆகிவிட்டது.. அவன் அமைதியாக அவள் முகத்தையே ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டு இருக்க...
"ஓக்கே... எனக்கு நேரமாச்சு.... நான் கிளம்பறேன்..." அவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க...
"ஹலோ... எச்சூஸ்மி..." கார்த்திக்கின் குரல் கேட்டு புன்னகையுடன் திரும்பியவள் என்ன என்பதுபோல் நெற்றியை உயர்த்தி கான்பிக்க...
"ஒரு கப் காப்பி சாப்பிட்டு போலாமே..." என்றவனின் கண்களையே குறுகுறுவென பார்த்தவள்... தன் வாட்சையும் பார்த்துவிட்டு... "ஹ்ம்ம் சாப்பிட்டா போச்சு... எனக்கு ஹெல்ப் பன்னிருக்கீங்க இதுக்கூட செய்யலைனா எப்படி...? "
அடுத்த இரண்டு நிமிடங்களில் காம்ப்ளக்சின் உள்ளே... காப்பி டேவில் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்...
"காப்பி சாப்பிட ஒத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்...." புன் முறுவல் பூத்தான் கார்த்திக்..
"எனக்கு ஹெல்ப் பன்னிருக்கீங்க.... வரலைனா நல்லா இருக்காது..." என பதிலுக்கு புன்னகைத்து வைத்தாள் அவள்...
என்ன பேசுவது என்று புரியாமல் அவள் அமைதியாக அமர்ந்திருக்க..... இவளிடம் என்ன பேசலாம் என தன் மனதினுள்... ப்ரிப்பேர் செய்து கொண்டு இருந்தான்...
அவர்களின் டேபிளில் இரண்டு காப்பி கப்புகள் வைக்கப் பட....
"ஹ்ம்ம் எடுத்துக்க...." என்றபடி கார்த்திக் ஒரு கப்பை எடுத்துக் கொள்ள அவளும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டாள்....
கார்த்திக் ஒரு சிப் உறிஞ்சுவிட்டு... அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவனாக கேட்டான்...
"ஆமாம்... நான் கேட்க மறந்துட்டேன்... உன் பேரு என்ன...?"
"காப்பி நல்லா இருக்குள்ள..." அவன் கேட்டதுக்கு சம்பந்தமே இல்லாத பதில் சொன்னாள்
அவனும்... "ஆமாம் நால்லா இருக்கு... எனக்கு எப்பவுமே இங்க காப்பி சாப்பிடுறதுன்னா... ரொம்ப பிடிக்கும்... அதுவும் இன்னைக்கு உன் கூட.... ஹ்ஹா... இந்த நாள் என்னால் மறக்க முடியாத நாள்.."
"ஏன் அப்படி என்ன ஸ்பெசல் இன்னைக்கு....?"
"இன்னைக்கு என் தேவதையோட காப்பி சாப்பிடுறேனே... இதுக்குமேல என்ன ஸ்பெசல் வேணும்...." எனச் சொல்ல...
"என்னது உங்க தேவதையா...?"
"ஆமாம்... நான் ஓப்பனா ஒன்னு சொல்லட்டா....?"
அவள் என்னவென்பதுபோல் பார்க்க...
"உன்னை பார்த்த அடுத்த செகெண்டே.. நான் விழுந்துட்டேன்... மறச்சு மறச்சு வைக்க நான் ஒன்னும் இதயம் முரளி கிடையாது.... எந்த விசயமானாலும் நான் மனசுல வச்சுக்க மாட்டேன்.... ப்ராங்க்கா ஒன்னு சொல்றேன்.... இனி உன்னைத் தவிற எனக்கு இனி வாழ்கை இல்லை..." என்றுவிட்டு அவளது கண்களையே கூர்மையாகப் பார்த்தான் கார்த்திக்...
கார்த்திக் சொன்னவற்றை இமைக்க மறந்து பார்த்தபடி கேட்டவள்.. எழுந்து கொண்டாள்...
"இப்படி எல்லாம் பேசுவீங்கன்னு தெரிஞ்ச்சிருந்தால்... நான் வந்திருக்கவே மாட்டேன்.... சே.... நீங்களும் எல்லா ஆம்பளைங்க போலதான் இருக்கீங்க... நான் போறேன்..."
"ஹேய்... இரு இரு... எங்க போற.. இப்ப நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்...? என் மனசுல பட்டதை சொன்னேன்... அதுக்காக.. எல்லா ஆம்பளைங்க மாதிரி நீங்களும் இருக்கீங்கன்னு சொல்றதா...? இது என்னை இன்சல்ட் பன்ற மாதிரி இருக்கு..."
"பின்ன என்ன... இப்ப லவ் பன்றேன்னு சொல்ல வேண்டியது.... அப்பறம் பார்க், பீச், தியேட்டர்னு.... நினைச்ச இடத்துக்கெல்லாம் சுத்தவேண்டியது... அப்பறம் ஒரு நாள் வந்து.... எங்க வீட்ல பொண்ணு பார்த்துட்டாங்க ஸாரி ...அப்படிங்கறது, அப்படி இல்லைன்னா.. இத்தனை நாள் உன்கூட டைம் பாஸுக்குத்தான் பழகினேன்னு சொல்லிட்டு அந்த பொண்ணை கலட்டிவிட வேண்டியது... அப்பறம் அந்த பொண்ணு விஷம் குடிச்சோ இல்லை தூக்கு மாட்டியோதான் சாகனும்.... நீங்க வேற ஒரு பொண்ணை புடிச்சிக்கிட்டு நால்லா சந்தோசமா இருப்பீங்க.... இதெல்லாம் ஒரு பொழப்பா இப்படிப்பட்ட காதல் தேவைதானா...?" என பொறிந்து தள்ளினாள் அந்த தேவதை....
"ஹ்ம்ம் பேசி முடிச்சிட்டியா.... நல்லா யோசிச்சுப் பாரு.. நான் உன்னை லவ் பன்றேன்னு எப்பவாச்சும் சொன்னேன்னா....?" என்றவனின் எதிர் கேள்வியால் குழம்பிப் போய் அவனைப் பார்த்தாள் அவள்...
"பின்ன நீங்க சொன்னதுகெல்லாம் என்ன அர்த்தம்....?"
"நல்லா யோசிச்சுப் பாரு... நான் சொன்னதுக்கு அர்த்தம் புரியும்...." எனச் சொல்ல
அவள் யோசித்துப் பார்க்க எதுவும் விளங்கவில்லை... "இல்லை எனக்கு எதுவும் புரியல.."
"சரி... இப்ப தெளிவா சொல்றேன்.." என அவளது கண்களையே ஆழமாக ஊடுறுவியவன்... "..நான் உன்னை மேரேஜ் பன்னிக்க ஆசைப்படுறேன்.. உனக்குச் சம்மதமா...?"
அவன் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டாள்... கொஞ்ச நேரம் அமைதியாகப் பார்த்தவள்...
"சாரி மிஸ்டர்... நீங்க நினைக்கிறது... என்னைக்கும் நடக்காது... காப்பிக்கு தேங்க்ஸ்" என்று விட்டு நடக்க ஆரம்பித்தாள் அவள்....
அவள் பதிலால் கார்த்திக் வருத்தமடையவில்லை.... முதல் சந்திப்பிலேயே காதல் என்றால் எந்தப் பெண் தான் ஏற்றுக் கொள்வாள்... அதிலும் இவள் காதல் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் எப்படி இதை ஏற்றுக் கொள்வாள்.... அதனால்தான் காதல் என்று சொல்லாமல் கால்யாணம் என்று சொன்னான் கார்த்திக்... முதல் முறையே சரி என்றுவிட்டால்... நான் அவளை தவறாக நினைப்பேன் என அவள் நினைத்திருக்கலாம் இல்லையா....? என தன் மனதை ஆறுதல் படுத்திக் கொண்டான் கார்த்திக்...
அவள் விறுவிறுவென வாசலை நோக்கி நடந்துக் கொண்டு இருக்க.... இவனும் வேகமாக பின்னால் சென்றான்....
"ஹலோ... எச்சூஸ்மி..." அவள் மீண்டும் திரும்பி பார்த்தாள், இல்லை இல்லை... முறைத்தாள்.... "என்ன வேணும்..." கடுகடுத்தாள்....
"உன் பேரு என்னான்னு சொல்லவே இல்லையே..."
"என் பேர தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்னப் பண்ண போறீங்க...."
"நெக்ஸ்ட் டைம் மீட் பன்னும்போது... பேர சொல்லி கூப்பிடுவேன்ல..."
"ஹஹா... நெக்ஸ்ட் டைம் மீட் பன்னாதானே...இனிமேல் இங்க வரமாட்டேன்... இந்த சென்னை சிட்டில என்னை எங்க வச்சு மீட் பண்ணுவீங்க...."
"கண்டிப்பா மீட் பன்னுவோம்...."
"எப்படி சொல்றீங்க....?"
"இது இறைவன் போட்ட முடிச்சு.... ஏற்போர்ட்ல உன்னை பார்த்ததுக்கு அப்பறம்... இன்னைல இருந்து ஒரு நாளுக்கு முன்னாடி நைட் இதே காம்ப்ளஸ்ல.. தலைல இடிச்சிக்கிட்டோமே... அதுக்கு அடுத்த நாளான நேத்து எனக்கு மேரேஜ் தெரியுமா....?"
"ஓஹோ... ஏற்கெனவே கல்யாணம் பண்ணிக்கிட்டுத்தான் என்னையும் கல்யாணம் பன்னிக்க ஆசைப்படுறீங்களோ... உங்களுக்கே இது அசிங்கமா இல்ல....?"
"இரு இரு... நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்பறம் பேசு...."
அவள் அமைதியாக இவனை பார்க்க....
"எனக்கு கல்யாணம் நடக்கல...." என ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லி முடிக்க....
"சரி இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க...." எரிச்சலுடன் கேட்க
"இதுல இருந்து என்ன தெரியுது....?"
"எனக்கு ஒன்னும் தெரியலையே..."
"உனக்கும் எனக்கு ஏதோ ஒரு வயர்லெஸ் கனக்சேன் இருக்கு.... அந்த இறைவன் தான் இப்பவும் உன்னை என் கண்ணுல காட்டிருக்கான்... இப்ப நான் சொல்றேன்... நல்லா கேட்டுக்க.... உனக்கு நான் தான்... எனக்கு நீதான்... இதை யாராலும் மாத்த முடியாது..."
"இது என்ன மடத்தனமா இருக்கு... எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை.. நா ஒத்துக்கிட்டாதானே.. இதெல்லாம்.. நடக்கும்.."
"ஏன் ஒத்துக்கமாட்ட... என்னை பிடிக்கலையா...? இல்லை.. என்னைவிட அழகானவனா எதிர் பார்க்கிறாயோ...?" சட்டென அவன் கண்களை பார்த்தவள்....
"உங்களை பிடிக்கலைன்னு சொன்னா அவ குருடியாத்தான் இருப்பா..."
"அப்ப உனக்கு என்னை பிடிச்சிருக்கு... அப்படித்தானே....?"
"நான் குருடிதான் ஆனால் கண் தெரிஞ்ச குருடி.... எனக்கு காதல் மேலயும் நம்பிக்கை இல்லை.... கல்யாணத்திலும் நம்பிக்கை இல்லை...." என்றவளின் பதிலில் அதிர்ச்சியுற்றான் கார்த்திக்...
"ஏன்.... நீ யாரையாவது லவ் பண்ணி.... ஏமாந்து போயிட்டியா என்ன...? வாழ்கைல ரொம்ப அடிபட்டவ மாதிரி பேசற.."
"இதுல.. அனுபவிச்சு தெரிஞ்சுக்க என்ன இருக்கு..... அதான் தினமும்... நியூஸ் பேப்பர்ல படிக்கிறோமே... ஒரு தலைக் காதலால் காதலியின் முகத்தில் ஆசிட் வீச்சு...., கள்ளக் காதலால் விபரீதம்... கணவன் மனைவியின் தலையில் குளவிக் கல்லை தூக்கிப் போட்டு கொலை... காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை... காதலிக்க மறுத்ததால் கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்... இன்ஸுரன்ஸ் பணத்திற்காக கணவனை..." என அவள் அடுக்கிக் கொண்டே போக....
"ஸ்ஸ்ஸ்சப்பா..... போதும் உன் வாய கொஞ்சம் மூட்றியா... உன் கண்ணுல நல்ல செய்தியே படாதா... வரிசையா அடுக்கிகிட்டே போற..."
"நீங்கதானே... கேட்டீங்க..."
"ஆமாம் நாந்தான் கேட்டேன் அதுக்காக இப்படியா... நானே ஒரு சாப்டான ஆளு.. என்கிட்ட போய்... ஆசிட் குளவிக் கல்லு....தூக்குக் கயிறுன்னுட்டு.."
"ஹா...ஹா....ஹா..." வெண்பற்கள் தெரிய அழகாக புன்னகை செய்தாள் அவள்.... சிறிது நேரம் அவளை சிரிக்க விட்டு இரசித்தவன்..
"நீ முதல்ல.. இந்த மாதிரி செய்தி எல்லாம் படிக்கிறத நிப்பாட்டு... முடியலைனா... நியூஸ் பேப்பரே வாங்காத..."
"ஓக்கே... ட்ரை பன்றேன்...." என்றாள் புன்னகையோடு..
அவள் புன்னகையை இரசித்தவன்.. "அழகா இருக்கே..." என்று விட்டு அவள் பதில் சொல்லும் முன்..
"மனிதர்கள் பலவிதமாத்தான் இருப்பாங்க... எல்லோரும் ஒரே மாதிரிதான் இருப்பாங்கன்னு நினைக்கிறது முட்டாள்தனம்... நூத்துக்கு ஓரிரண்டு ஆட்கள்தான் இந்த மாதிரி தப்பு செய்றாங்க அதுக்காக எல்லோரும் அப்படித்தான்னு முடிவு எடுத்திடக் கூடாது... ஆனால் நீ எல்லோரும் அப்படித்தான்னு முடிவே பன்னிட்ட.. அங்க தெரியுது உன்னோட அறிவீனம்..."
அவனை ஏறிட்டு முறைத்தவள்.. "அப்ப என்னை முட்டாள்னு சொல்றீங்களா...?" குரல் கடுகடுத்தது..
"பின்ன...முட்டாள்னு சொல்லாம எல்லாம் அறிந்த மேதாவின்னு சொல்லுவாங்களா...? இந்த விசயத்துல நீ ஒரு அடி முட்டாள்..." என அவள் ரோசத்தை வேண்டுமென்றே.. தூண்டிவிட்டுப் பார்த்தான் கார்த்திக்... அது அவனுக்கே ஆபத்தாக முடிந்தது...
அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது..... "என்னை முட்டாள்னு சொல்ரதுக்கு நீங்க யாரு மிஸ்டர்... எது நல்லது எது கெட்டதுன்னு எனக்கு தெரியும்... உங்களை என் பாய் ப்ரெண்டுனு சொன்னது என் தப்புத்தான்... அப்படி சொன்னதுக்காக என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்..., இப்ப தயவு செய்து என்னை ஆழவிடுங்க... அது போதும்...." என பொரிந்துவிட்டு விறுவிறுவென அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள்... அப்பொழுது சரியாக அங்கே வந்த பஸ்ஸில் அவள் ஏறிக் கொள்ள...
போகும் அவளையே பார்த்து விதிர்த்து போய் நின்று கொண்டிருந்தவன் தனது பைக்கை கிளப்பி.. வீட்டை நோக்கி விரைந்தான்.
மதியம் மணி ஒன்றரை....
ஆபீஸ் கேண்டீனில் அமர்ந்திருந்தான் சிவா... வாங்கியதை கொறித்துக் கொண்டிருந்தான்... அப்பொழுது அவனருகில் வந்தமர்ந்தான்... கணேஷ்... காலையில் கால் செய்து வெறுப்பேற்றிய அதே கணேஷ்...
"என்ன மச்சி.. கல்யாணம் ஆன அடுத்த நாளே... ஆபிசுக்கு வந்துட்ட... என்ன மேட்டர்.."
"ஏன் கல்யாணம் ஆனவன் எல்லாம் ஆபிசுக்கு வரக்கூடாதுன்னு சட்டம் எதாவது புதுசா சட்டம் கொண்டு வந்துருக்காங்களா.. என்ன...?"
"அப்படி இல்லை... பொதுவா உன்னை மாதிரி புதுசா கல்யாணம் பன்னவங்க ஒரு வாரமாச்சும்... லீவ் எடுத்துப்பாங்களே.. அதான் கேட்டேன்..."
" ஏண்டா நீ வேற.... எறிச்சல கிளப்புற... அவளே... முறைச்சுக்கிட்டு திரியிரா... இதுல என்னை லீவ் போட்டு வீட்ல அவகிட்ட வாங்கி கட்டிக்கச் சொல்றியா...."
"ஓஹோ... அப்ப நேத்து நைட்டே.... அடி ஸ்டார்ட் ஆயிடுச்சா...?"
"அ...அடியா....இல்லை... அடிலாம் இல்லைடா... சும்மா திட்டமட்டும்தான் செஞ்சா...."
"டேய்...டேய்.. போதும்டா.... நானும் கல்யாணம் ஆனவன்தாங்கிறதை மறந்துட்டு பொய் சொல்றியேடா... நாங்களும் டெய்லி வாங்கதானே செய்றோம்..."
"நீ வாங்கிருப்பே.... அதுக்காக வாங்காத அடியெல்லாம் வாங்குனதா நான் எப்படி ஒத்துக்க முடியும்..."
"மழுப்பாம ஒத்துக்க மாப்ள... எனக்கும் கூட ஆரம்பத்துல... அடிவாங்க ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு... இப்பலாம் அவகிட்ட அடிவாங்காம தூக்கமே வரமாட்டேங்குது மாப்ள... உனக்கும் போக போக பழகிடும் பாறேன்.."
"அப்படிங்கற..."
"ஓஹ்... அப்ப உன்மைலயே... அடிச்சிட்டாளா....?"
"இல்லைடா... இல்லை.. மச்சான்....நம்புடா..."
"டேய்.. டேய்.... உனக்கெல்லாம் இது நல்லா வேணும்டா.... நீ அந்த பொண்ணை லவ் பண்ணேன்னு எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்... அப்படி இருந்தும் அந்த பொண்ணை எத்தனை தடவ இன்ஸல்ட் பன்னி அனுப்பிருப்ப....இப்ப நல்லா வாங்கிக்க..."
"நான் என்ன பன்றது மாப்ள... அவ பெரிய இடத்து பொண்ணு... எங்களுக்கும் அவங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது... கண்டிப்பா அவங்க பொண்ணை கொடுக்க மாட்டாங்கன்னு தெரியும்... அப்பறம் எப்படிடா அவ லவ்வ சொல்லும் போது ஏத்துக்க முடியும்... அதனாலதான் அவ என்னை நெருங்கும் போதெல்லாம்... அவளை இன்ஸல்ட் பன்னி அனுப்பி வெச்சேன்... இப்படி எல்லாம் நடக்கும்னு யார்க்கு மாப்ள தெரியும்.."
"சரி விடு மாப்ள.... அவ உன்னை லவ் பன்றா... அதனால பயப்படாத... ஆனால் நீ கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருக்காம அவசரப் பட்டேன்னா.... அடி விழுறதை யார்னாலும் தடுக்க முடியாது..."
அவன் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்க... கணேஷ் இன்னும் சில அறிவுறைகளை வழங்கிக் கொண்டிருந்தான்...என்ன செய்யனும் என்ன செய்யக் கூடாது... என தான் அடிபட்டு அனுபவப்பட்ட விசயங்களை விளாவாரியாக விளக்கிக் கொண்டிருக்க... சிவாவும் சீரியசாகக் கேட்டுக் கொண்டிருந்தான்..... இதுவே வேறொரு நேரமாக இருந்திருந்தால்.... கணேஷ் சொன்ன விசயங்களை கேட்டு விழுந்து விழுந்து சிரித்திருப்பான் என்பது வேறு விசயம்...
"மச்சி நீ ஒன்னு பன்னு... வீட்டுக்கு போகும்போது அல்வாவும் மல்லிகைப் பூவும் வாங்கிட்டு போ... எந்த பொண்ணுமே மல்லிகைப் பூவைக் கண்டால் மயங்கிடுவா..."
"அப்படியா...."என்றான் சிவா ஆவலாக
"ஆமாம் மச்சி... இன்னைக்கு ஒரு நாள் ட்ரை பன்னிப்பாரு... எப்படி வொர்கவுட் ஆகுதுன்னு...பாரு."
"என்ன ட்ரை பன்னப் போறீங்க..." என்று அவர்களின் டீம்லீட் ராகேஷின் குரல் கேட்க திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்த்தார்கள்...
"அது... அது... எங்களுக்கு கொடுக்கப்பட்ட.. காம்பொனெண்டை எப்படி எப்படி எல்லாம் புது புது டெக்னாலஜி அப்பறம் புது புது ஐடியா ட்ரை பண்ணி டிசைன் பன்னலாம்னு சீரியசா டிஸ்கஸ் பன்னிட்டு இருக்கோம் ராக்கேஷ்..." என்றான் கணேஷ் சமாளித்தவனாக
"டேய்... டேய்... நீங்க காம்பொனெட் டிசைன் பன்ற ஐடியாதான் எனக்கும் தெரியுமே.... ஏற்கெனவே இருக்குற கோடை கூகுல் ல தேடி எடுத்து எடிட் பன்னி போடப் போறீங்க, இதுக்கு ரெண்டு பேரும் சீரியசா டிஸ்கஸ் பன்னிட்டு இருக்கீங்களாக்கும்..." என பதில் கொடுத்தவன்...
சிவாவிடம் வந்து... "கங்க்ராஜுலேசன் சிவா... மேரேஜ் பன்னிக்கிட்டேன்னு கேள்விப் பட்டேன்.. ஏன் எங்களை எல்லாம் கூப்பிடல... நாம எல்லாம் அப்படியா பழகி இருக்கோம்..."
"எப்படி ராகேஷ் கூப்பிடுவேன்.... எனக்கு நேத்து மேரேஜ்னு எனக்கே தெரியாதே...." என நடந்ததை சுறுக்கமாக எடுத்துரைத்தான்
"ஹ்ம்ம்.. எனிவே... நல்லா இருந்தா சரி.. பெஸ்ட் ஆப் லக்..." எனச் சொல்லிவிட்டு அவன் சாப்பிட அமர்ந்தான்..
சிவாவும், கணேஷும் மீண்டும் தங்களது வேலையை தொடர புறப்பட்டனர்...
வீட்டின் தனது அறையில் படுத்திருந்த கார்த்திக்கின் மனமெல்லாம் அந்த தேவதையே நிறைந்திருந்தாள்....
"ஸ்ஸப்பா.... என்னாம்மா... கோவம் வருது அவளுக்கு... தேவை இல்லாம.. அவளை கோபப் பட வச்சிட்டோமோ.... சே... அவ பின்னாலேயே போய் இருந்தால் அவ வீட்டையாவது கண்டு பிடிச்சிருக்கலாம்..." என அவளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு கிடந்தான் கார்த்திக்..
"இவளை எப்படி லவ் பன்னவக்கிறது... காதல் மேல இவ்வளவு வெறுப்பா இருக்காளே....? காதல் மேல மட்டும் இல்ல... கல்யாணம் பன்னிக்கிற ஐடியாவும் இல்லைன்னு சொன்னாளே...? இவளை லவ் பன்ன வைக்கிறது ரொம்ப கஷ்டமோ...? அது இருக்கட்டும் அவளை எங்கே போய் நான் கண்டு பிடிப்பேன்.. திரும்பவும் அங்கே வரமாட்டேன் என்றாளே...?" என தன்னைத்தானே பல கேள்விகள் கேட்டபடி படுத்திருந்தான்...
"அவள் எனக்கானவள் என்றால் இறைவன் அவளை மீண்டும் சந்திக்க வைப்பான்...." என நினைத்துக் கொண்டு கண்ணை மூடினான்... மாலை நேர மயக்கம் கண்ணை அசத்த... கண்ணுறங்க ஆரம்பித்தான் கார்த்திக்...
கணேஷ் கொடுத்த ஐடியாவை செயல்படுத்தும் விதமாக அல்வாவும் மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டு மாலை ஆறுமணிக்கு வீட்டை அடைந்தான் சிவா...
சித்ராவும் மேகலையும் அடுப்படியில் இருக்க... வழக்கம் போல் தங்கை சோபனா டீவியில் டாம் அண்ட் ஜெர்ரியில் ஆழ்ந்திருக்க... வழக்கம் போல் சிவாவும் தன் தங்கையின் தலையில் கொட்டு வைத்தான்
"ஆ....அம்மா... இந்த தடியனை பாரும்மா தலைல கொட்டுறான்மா...." என அடுப்படியை நோக்கி கத்தினாள்...
"டேய்... வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிட்டியா... சின்ன புள்ளைய ஏண்டா அடிக்கிற..." அடுக்களையில் இருந்து அம்மாவிடம் இருந்து பதில் வந்தது...
"பின்ன என்னம்மா.... எருமை மாடு மாதிரி வளர்ந்துருக்கு... இன்னும் டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துட்டு திரியிது.... இதெல்லம் கல்யாணம் பன்னிக்கிட்டு புகுந்த வீட்ல எப்படி வேலை வெட்டி செய்யப் போகுதோ தெரியலை..."
"அம்மா.... பாரும்மா... இவனை..." மீண்டும் அம்மாவிடம் புகார் கூறினாள் சோபனா..
"டேய்.. அவளை சும்மா விடேன்டா... அவ இங்க இருக்க வரைக்காச்சும்... கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும்...."
"இப்படியே... இவளை ப்ரீயா விட்டா... ஒரு நாள் கண்ணை கசக்கிட்டு வந்து நிப்பா... என்னை பேசுறாங்க திட்டுறாங்கன்னு.... அப்ப வச்சுக்கிறேன் உன்னை..."
"அப்படி எல்லாம் நான் கண்ணை கசக்கிட்டு வந்து நிக்க மாட்டேன்.... அப்படி நின்னாலும் சத்தியமா உன்கிட்ட வந்து நிக்க மாட்டேன்... போடா..." எகிறினாள் தங்கை...
"ஹ்ம்ம் அதையும் பார்போம்..." என்றபடி தனது அறைக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு வெளி வந்தான்...
"அம்மா..... எங்க என் பொண்டாட்டிய காணோம்...." சிவாவின் சத்தம் கேட்டு சித்ராவின் முகம் சிவந்தது...
"இங்கதாண்டா... என்கூட அடுப்படியில இருக்கா...." என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்தது..
"என்னம்மா நீங்க.... அவ வந்து ஒரு நாள் தான் ஆகுது அதுக்குள்ள... உங்க மாமியார் ஆளுமையை காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?..." என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தான்... இருவரும் இரவு உணவை தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்...
கண்களில் நீர் சுரக்க... வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா... அவள் கண்களில் கண்ணீரை கண்டவனுக்கு அய்யோவென்றிருந்தது...
"டேய்... நான் வேண்டாம்னு தான் சொன்னேன்... அவதான்... கேட்காம வேலை எல்லாம் இழுத்து போட்டு செஞ்ச்சுட்டு இருக்கா... எதுவா இருந்தாலும் உன் பொண்டாட்டிக்கிட்டயே கேளு..."
"ஏன்... சித்ரா... வேற எதாவது வெட்டலாம்ல... இப்ப பாரு கண்ல இருந்து தண்ணி வருது...." என்றான் கரிசனமாக..
அவனை நிமிர்ந்து பார்த்து சேலையால் கண்ணை துடைத்துக் கொண்டவள்... புன்னகையுடன் "பரவா இல்லைங்க இப்பவே எல்லா வேலையும் தெரிஞ்சுக்கிட்டாதானே.. பழக்கத்துக்கு வரும்..." என்றாள் மெல்லிய குரலில்...
அவளை காதலாக பார்த்து புன்னகை செய்தவாறே அவளை இரசிக்க ஆரம்பிக்க.... அவள் மீண்டும் தன் வேலையில் கண்ணாக இருந்தாள்...
சிவாவின் மனம் உணர்ச்சி அலையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது..."எப்படிப்பட்ட பெண்ணை இழக்க இருந்தேன்... எனக்கே... எனக்கென பிறந்தவள் இவள்.. இவளை விட்டுத்தறவா நான் துணிந்தேன்... இவளை துறந்து என்னால் இனிமையான வாழ்வை அடைந்திருக்க முடியுமா...?... இல்லை... இவளைத் தவிற இனி எனக்கு வேறு ஏதும் எனக்கில்லை...." என நினைத்துக் கொண்டு நின்றிருக்க...
"டேய்... வழிய விடுடா... தடிமாடு... என்னைக்காவது ஒரு நாள் அடுப்படி பக்கம் வந்துருப்பியா... இன்னைக்கு மட்டும் என்ன...." என்றபடி அவனை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சோபனா...
உடனே அவளது ஜடையை பிடித்து இழுக்க.... "அம்மா..." சோபனா கத்த..
"டேய்... ஏன்டா... சின்னப் புள்ளைய போட்டு.. இம்சை பன்ற... விடுடா.. அவள..." என அம்மா எகிற... அவன் விட்டுவிட..
"அண்ணி உங்க புருஷன் கிட்ட சொல்லி வைங்க... இதுக்கு மேல அவனுக்கு மரியாதை கிடையாது..." என சித்ராவிடம் புகார் கூறினாள் சோபனா...
தன் கணவனிடம் திரும்பிய சித்ரா "சின்னப் பொண்ணை போட்டு... ஏங்க இப்படி படுத்துறீங்க... பாவம் அவ.. அவளை தொந்தரவு பண்ணாதீங்க.." எனச் சொல்ல..
"ஹ்ம்ம்... ஆளாளுக்கு என்னையவே சொல்லுங்க..." என தன் தங்கையிடம் திரும்பியவன்..
"சித்ரா சொன்னதால உன்னை... சும்மா விடுறேன்... பொழச்சு போ...."
"சீ...பே...." என்றுவிட்டு வெளியே சென்றாள் சோபனா....
அடுத்த கொஞ்ச நேரத்தில் அப்பாவும் வந்துவிட.. அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்...
சிவா... அவனது நேரத்திற்காக... ஆவலோடு அவனது அறையில் காத்திருந்தான்... நேரம் கரைந்துகொண்டு இருக்க... அறைக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்... அவகிட்ட என்ன பேசலாம்.... எப்படி பேசலாம்... என சிந்தித்துக் கொண்டிருந்தான்... கணேஷ் கொடுத்த அட்வைஸ்களை அலசி ஆரய்ந்து கொண்டிருந்தான்...
நேரம் செல்ல செல்ல போர் அடித்தது.... கட்டிலைவிட்டு எழுந்து அறையின் ஜன்னலைத் திறக்க... இரவுத்தென்றல் முகத்தில் மோத... முழு நிலவு பொழிவோடு ஜொலித்துக் கொண்டிருந்தது... அந்த ரம்மியமான சூழ்நிலையை ஆழ்ந்து இரசித்துக் கொண்டு கண்ணை மூடி சிறிது நேரம் நின்றிருக்க...
அவனது பின் கழுத்தில் சூடான மூச்சுக் கற்றுப் பட... அவனது இடுப்பை சுற்றி வளைத்து இரு கைகள் வந்து அனைத்துக் கொண்டது... கொஞ்ச நேரம் அவனுக்கு எதுவும் விளங்கவில்லை... ஏதோ பிரமை என்று நினைத்துக் கொண்டு கண் மூடி நின்றிருந்தான்
தன் பின் கழுத்தில்... இச் இச் சென்ற இரு ஈர முத்தத்தின் சத்தம் அவனை இவ்வுலகிற்கு கொண்டு வந்தது...
திடுக்கிட்டுத் திரும்ப... சித்ரா அவனது நெஞ்சில்.. சாய்ந்திருந்தாள்.. அவனைவிட்டு விலக்க முடியாத அளவிற்கு அவனை இருக்கி இருந்தாள் அவள்...
"என்னாச்சும்மா..." கூப்பிட்டுப் பார்த்தான் சிவா...
"கொஞ்ச நேரம் சும்மா இருங்க...." மெல்லிய குரலில் சொன்னவள் மீண்டும் அவனது நெஞ்சில் அழுத்தமாய் சாய்ந்து கொண்டாள்...
சிவா இப்படி ஒரு உன்னதமான இனிமையான ஸ்பரிசத்தை இதுவரை உணர்ந்ததில்லை.... இரவுத் தென்றல் வீச... முழுமையான பொண்ணிற நிலவு ஒளி ஜன்னல் வழி வீச தன் காதலி தன்னை இருகத்தழுவ... சுகக் கடலில் மூழ்கிச் சுற்றித்திரிந்தான் சிவா... அவனது மூச்சு தாறுமாறானது... நெற்றி வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்தது... தொண்டை வரண்டது... தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் இருக்க... மெல்ல தன் கையை உயர்த்தி அவளது அழகிய முகத்தை தனது நெஞ்சில் இருந்து விலக்கி... தன் விரல்களால்... தான் அருந்துவதற்கான தண்ணீர் இருக்கும் இடம்... இல்லை... இல்லை... தேன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்... தன் தாகம் தீர்க்க... மெல்ல மெல்ல அவள் தேனிதழை நோக்கி தன் முகத்தை கொண்டு போக... அவள் சுதாரித்து அவன் நெஞ்சில் கைவைத்து விலக்கியவள்... வேகமாக அந்த இடத்தைவிட்டு அகல நினைத்து நகன்று செல்ல... அவளது கையை பிடித்து நிறுத்தியவன்..
"ஹேய்.. எங்கே... போற..."
அவள் அமைதிகாக.. தலை குனிந்து நிற்க..
"ஹேய்.... இங்க பாறேன்.. நிமிர்ந்து பாருன்னு சொல்றேன்ல.."
அவள் நிமிர்ந்து பார்த்து "என்னவென்பதுபோல் கண்ணசைக்க..."
"எனக்கு அப்ப கொடுத்தேல்ல... அதே மாதிரி... எனக்கு இப்ப இங்க வேணும்..." என்றபடி தன் உதட்டை விரல் கொண்டு காண்பிக்க... அவனை முறைத்தவள்... அவனருகே வந்து...
"எங்கே முத்தம் வேணும்னு கேட்டீங்க..." என கேட்க..
"இங்கே..." என அவன் விரல் கொண்டு காட்ட...
அவள் தனது தளிர் விரல்கள் கொண்டு மெதுவாக அவனது உதட்டில் அறைந்தாள்...
"என்ன சித்ரா...இப்படி பன்ற..."
"என் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா உங்களுக்கு தாங்க முடியாதுல்ல...?" குரல் கேளியாக ஒலித்தது
"இப்ப ஏன் நீ சம்பந்தமே இல்லாம பேசுற..."
"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..."
"ஹ்ம்ம்.." தலையாட்டினான் அவன்
"முன்னாடி எத்தனை முறை என்னை உங்க பின்னால அலைய விட்டு அழவச்சிருப்பீங்க.. அப்பெல்லாம் வராத கரிசனம்.. இப்ப மட்டும் ஏன் வருது...? அப்ப நான் யாரோ ஒரு பொண்ணு எக்கேடா கெட்டு போகுதுன்னு விட்டுட்டீங்க... இப்ப நான் உங்க மனைவி அதனாலதான... இந்த கரிசனம்..?"
"அய்யோ... என்ன சித்ரா... இப்படி எல்லாம் பேசுற... நானும் உன்னை லவ் பன்னேன்டா...இப்பவும் பன்றேன்... நான் இருக்குற நிலைமைல உனக்கு செட் ஆக மாட்டேன்னுதான் உன்னை அவாய்ட் பன்னேன்.. ஆனால் நீ என்னை நினைச்சு அழுதிருப்பேன்னு சத்தியமா எனக்குத் தெரியாது சித்ரா.. உன்னை அழவிட்டு பாக்கனும்னு எனக்கு என்ன ஆசையா... உன் கண்ல இருந்து கண்ணீர் வந்தா எனக்கு தாங்காதுடா..." என்றபடி மீண்டும் அவளை இழுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்..
அவள் ஆறுதலாக அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.... சிவா அவளின் கூந்தலை வருடி கொடுத்தவாறு நின்றிருந்தான்.. சிறிது நேரம் அவ்வறே செல்ல...
சிவா மீண்டும் ஆரம்பித்தான்... "சித்து..சித்தும்மா..."
"ஹ்ம்ம்.."
"என்னை பாருடா...."
அவள் நிமிர்ந்து "என்ன.... " என்றாள் மெல்லிய குரலில்
அவன் தன் விரல் கொண்டு மீண்டும் தனக்கு என்ன வேண்டும் என்று உணர்த்தினான்..
"ஊஹும்... அதெல்லாம் முடியாது...." என்றாள் மறுப்பலாக தலையசைத்தபடி...
"அப்ப... கொஞ்ச நேரம் முன்னாடி.. எனக்கு கொடுத்த...."
"அது.. அது.. எனக்கு கொடுக்கனும் போல தோனுச்சு... கொடுத்தேன்..."
"இப்ப எனக்கு கொடுக்கனும்போல இருக்கே.... என்ன பன்ன..?"
"அதுக்கு நான் ஒன்னும் பன்ன முடியாது..."
"ஹேய்... இதெல்லாம் அநியாயம்... உனக்கு தோனுச்சுனா கொடுப்ப... எனக்கு தோனுச்சுனா கொடுக்கக் கூடாதா... சரி பரவால்ல நீ தூங்கும் போது நான் கொடுத்துக்கிறேன்..."
"ஹா...ஹா... நான் இங்க தூங்கினாத்தானே... கொடுப்பீங்க?"
"ஏன்... வேற எங்க தூங்கப்போற...?"
"இனிமேல் நான் சோபனா ரூம்லதான் தூங்க போறேன்... அதை சொல்லிட்டுப் போகத்தான் இங்க வந்தேன்..." சொல்லிவிட்டு அவள் இளிக்க..
"அடிப்பாவி... இது அதைவிட அநியாயம்... ஏன் இப்படி பன்ற...?"
"பின்ன... வீட்ல ஒரு வயசுப் பொண்ணை வச்சிக்கிட்டு....நாம ஒன்னா இருக்குறது சரின்னு எனக்கு தோனல..."
"அடிப்பாவி... உனக்காக... மல்லிகைப் பூ... அல்வா எல்லாம் வாங்கிட்டு வந்தேனே...எல்லாம் வேஸ்டா..."
"உங்கள யாரு அதெல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னது.... நீங்க அல்வா கொடுத்தா நாங்க மயங்கிடுவோமாக்கும்... என்னை எத்தனை நாள் அலையவிட்டீங்க... இப்ப நல்லா காஞ்சு போய் கிடந்தாத்தான் என் அருமை புரியும்... பேசாம அமைதியா போய் படுத்து தூங்குங்க... எனக்கும் தூக்கம் வருது நானும் தூங்க போறேன்..." என்றபடி வெளியேற
"ஹேய்... இரு... இரு..."
"இப்ப என்ன வேணும்...."
"வாங்கிட்டு வந்த மல்லிகைப் பூ வேஸ்டா போயிடும்..."
"அதுக்கு...?"
"எனக்காக அதை வச்சிக்கோயேன்..."
"ஹ்ம்ம் சரி கொடுங்க..." என்றாள் புன்னகையுடன்
பூவையும் அல்வாவையும் எடுத்து வந்தான்.. பூவிற்காக அவள் கை நீட்ட.. "ஊஹும்... நாந்தான் வச்சுவிடுவேன்..." என அடம்பிடித்து பூவை அவள் கூந்தலில் சூடி... வாசம் பிடித்தான்... அவள் உடல் சிலிர்க்க... அவன் அவளை தள்ளி நிற்கவைத்து அழகு பார்த்தான்...
"ஹ்ம்ம் பூ வச்சாச்சுல்ல... போதுமா... போங்க போய்... தூங்குங்க...."
"அல்வா இருகே..." என்றபடி ஒரு வில்லலை பிய்த்து அவளது உதட்டோரம் கொண்டு செல்ல... அவள் அதை கையால் எடுக்க முயல... நான் தான் ஊட்டிவிடுவேன்.... என அடம்பிடித்து... ஊட்டிவிட.. அவள் வாங்கிக் கொண்டாள்...
"ஹ்ம்ம்... எல்லாத்தையும் முழுங்கிடாத... எனக்கும் கொடு..."
"அதான்.... உங்க கைல இருக்கே.... எடுத்து சாப்பிட வேண்டியதானே...."
"எனக்கு.... உன் வாய்ல உள்ளதுதான் வேணும்...."
"சீ...எச்சில்..."
"எனக்கு அதான் வேணும்...." என மீண்டும் அடம் பிடித்தான் சிவா...
"சரி கண்ண மூடுங்க.... கொடுக்கிறேன்..."
அவன் ஆவலோடு கண்ணை மூடிய மறு நொடி அவள் அந்த அறையைவிட்டு சிட்டாகப் பறந்தாள்...
சில நொடிகள் கண்ணை மூடி எதிர் பார்போடு காத்திருக்க... ஏமாற்றம் அடைந்து கண்ணை திறந்து மேலும் ஏமாற்றம் அடைந்தான்...
"போயிட்டியா... இரு உன்னை நாளைக்கு கவனிச்சுக்கிறேன்..." என்றபடி பொத்தென்று மெத்தையில் விழுந்தான்...
அடுத்த நாள் காலை...
செல்போன் ஒலிக்க... கண் விழித்தான் சிவா... ஐந்து ரிங்குகள் அடித்து முடிக்க யாருடா...காலங்காத்தால என்றபடி... போனை எடுத்து பார்க்க...
கார்த்திக் தான் கால் செய்தான்.... அட்டெண்ட் செய்தவன் "ஹ்ம்ம் சொல்லுடா மாப்ள..."
"என்ன மச்சி.... நைட்டெல்லாம் தூங்கல போல... போன் அட்டெண்ட் பன்ன இவ்வளவு நேரம் ஆகுது" எனக் கார்த்திக் கேட்க...
சிவா போனை காதில் இருந்து எடுத்து போனையே முறைத்துப் பார்த்தான்... "அது எப்படிடா.. சொல்லி வச்ச மாதிரி டெய்லி காலைல போன் போட்டு என்னை வெறுப்பேத்துறீங்க..". என மனதில் நினைத்தவன்.... திரும்பவும் காதில் பொருத்தி பேச ஆரம்பித்தான்
"இல்லை மாப்ள, கொஞ்சம் நல்லா அசந்துட்டேன் அவ்வளவுதான்... என்ன என் மேல உள்ள... கோபம் போயிடுச்சு போல... கால் பன்னிருக்க..."
"கோபம்லாம் ஒன்னுமில்ல மச்சி.... எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா..."
"ஹ்ம்ம் அதானே பார்த்தேன்.. சும்மா கால் பன்ன மாட்டியே... ஹ்ம்ம் சொல்லு என்ன செய்யனும்.."
"அது...அது... அந்த பொண்ணை நேத்து மீட் பன்னேன்டா..."
"எந்த பொண்ணுடா....?"
"அதாண்டா... ஏர்போர்ட்ல பாத்தேன்னு சொன்னேன்ல... பார்டி அன்னைக்கு என் தலைல வந்து முட்டுச்சே அந்த பொண்ணுடா..."
"ஹ்ம்ம் சரி... இதுல நான் என்ன ஹெல்ப் பன்னனும் சொல்லு..."
"நேத்து அவள ஹர்ட் பன்றமாதிரி பேசிட்டேண்டா...."
"ஏன்டா..." கார்த்திக் சுருக்கமாக நடந்ததை எடுத்துரைத்தான்
"சரி... விசயத்துக்கு வா... நான் என்ன ஹெல்ப் பன்னனும் சொல்லு...."
"அது வந்து.... பொண்ணுங்க கிட்ட எப்படி பேசனும்னு எனக்கு சொல்லிக் கொடு.... எப்படி பேசுனா அவங்களுக்கு பிடிக்கும்... எப்படி பேசுனா அவங்களுக்கு பிடிக்காது... எல்லாம் சொல்லிக் கொடு... நீதான் லவ் எல்லாம் பன்னிருக்கியே.... அதான் உன்கிட்ட கேக்குறேன்..."
"அடப்பாவி.... என்னமோ நான் பத்து பதினஞ்சு லவ் பன்னவன் மாதிரி என்கிட்ட ஐடியா கேக்குற... நான் சித்ராகிட்ட அதிகமா பேசினதே கிடையாதுடா... அவகிட்ட பேசிருக்கேன்னா... அது அவளை ஹர்ட் பன்றதுக்காகத்தான் இருந்திருக்கும்.... அப்படி இருந்தும் அவதான் என்னை சுத்தி சுத்தி வந்து லவ் பன்னா...தெரியுமா...? நான் அவளை திட்டி வெரட்டி வெரட்டி விட்டாலும்... சலிக்காம அடுத்த நாள் வந்து நிப்பா தெரியுமா....?" என சிவா பெருமையடித்துக் கொண்டிருக்க... சித்ரா கையில் காப்பி கப்புடன் முறைத்துக் கொண்டிருந்தாள்... அவன் அதை கவனிக்காதவனாக..
"என்னதான் நான் அவளை திட்டி அனுப்பிச்சாலும்... திரும்ப திரும்ப.. என்கிட்ட வந்து நின்னான்னா.... அதுக்கு என்ன காரணம் தெரியுமா...?"
"என்ன காரணம்....?" என கார்த்திக் கேட்க...
"அய்யாவோட... ஸ்டைல்... அழகு.. பெர்சனாலிட்டி... இதெல்லாம் பார்த்துத்தான் அவ என்கிட்ட மயங்கிப் போயிட்டா..."என சொல்லி முடிக்கவில்லை... அவனது தலையில் நங்கென்று கொட்டு விழுந்தது...
சிவா "ஆ...."வென அழற...
"என்னாச்சுடா...." மறுமுனையில் பதறினான் கார்த்திக்...
"ஒ...ஒன்னுல்லடா....மாப்ள.. கதவுல முட்டிக்கிட்டேன்..."எனச் சொல்லி முடிக்கும் முன்... அவனிடம் போனை பிடுங்கி...
"மாமா... நாந்தான்... அவரை கொட்டுனேன்..."
"சித்ரா.... நீயா.... நீ ஏன்.. அவனை கொட்டுன..."
"பின்ன... அவரு.. பொய் பொய்யா அள்ளி விடுவாறு நாங்க பார்த்துகிட்டு சும்மா இருக்கனுமாக்கும்...." என நிறுத்தியவள்.. " என்ன மாமா... நீங்க பாட்டுக்கு அன்னைக்கு என்னை தனியா விட்டுட்டு வீட்டுக்கு போயிட்டீங்க...எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா...?"
"அதான் உன்கூட சிவா இருந்தானே...."
"பொண்ணு வீட்டு சார்பா.. யாருமே இங்க வரல... நீங்க வந்திருக்கலாமே... ஏன் வரல...?அதான் நான் உங்க மேல கோவமா இருக்கேன்..."
"ஹேய்... ஆக்சுவலா நாந்தான் உன் மேல கோபப்படனும்... "
இதற்கு சித்ரா பதில் சொல்லும் முன்.. சிவா போனை பிடுங்கி... "நைட் மீட் பன்னலாம் மாப்ள... இப்ப வச்சிடறேன்...விட்டா இவ பேசிட்டே இருப்பா..." என பதில் சொல்லிவிட்டு போனை அனைத்துவிட்டு... சித்ராவிடம் திரும்பினான்...
"ஹேய்... உன்மையைச் சொல்லு.... நீ என் ஸ்டைல்... அழகு...பெர்ஸனாலிட்டி இதெல்லாம் பார்த்துத்தானே லவ் பன்ன... பொய் சொல்லக் கூடாது.?
"ஹா...ஹா... மூஞ்சியும் மொகரையும் பாரு...இவரு அழக பார்த்துத்தான் நாங்க மயங்கிட்டோமாக்கும்... நெனப்புத்தான் உங்களுக்கு...."
"பின்ன... வேற... எதைப் பார்த்து என்னை லவ் பன்ன..."
"பஸ் ஸ்டாப்ல. டெய்லி என்னை எத்தனை பேர் சைட் அடிப்பானுங்க தெரியுமா...? ஆனால் நீங்க மட்டும் என்னை கண்டுக்கவே மாட்டீங்க... அதான் நான் எப்பவும் உங்களை பார்பேன்... என்னை பார்க்க மாட்டீங்களான்னு...? ஆனால் என்னை நீங்க பார்க்கவே மாட்டீங்க... உன்மைலயே.. நீங்க என்னை பார்க்கலையா.. இல்லை என்னை பார்காதமாதிரி நடிக்கிறீங்களான்னு எனக்கு புரியலை.. அதான் உங்க மேல எனக்கு செம கடுப்பு... அப்றம் அந்த கடுப்பு வெறியா மாறுச்சு... உங்களை என்னை பார்க்க வச்சே ஆகனும்னு உங்ககிட்ட வந்து பேச்சு கொடுப்பேன்... ஆனால் நீங்க என்னமோ நல்லவரு வல்லவரு மாதிரி பேசி தினமும் என்னை ஹர்ட் பன்னி அனுப்புவீங்க... இத்தனை பசங்க என்கிட்ட வழியும்போது நீங்க மட்டும் தனிச்சு தெரிஞ்சீங்க... உங்களை பார்க்க வைக்கனும்கிற வெறி காதலா மாறிடுச்சு.. உங்களை பார்க்க வைக்க நினைச்ச நான் உங்களை பார்த்து பார்த்தே காதல்ல விழுந்துட்டேன்... ஆனால் இப்பல்ல தெரியுது... நீங்க எவ்ளோ பெரிய கேடின்னு..."
"ஓஹ்.. நீ என்னை லவ் பன்னதுக்கு இப்படி ஒரு கதை இருக்கா...? நல்ல வேலை நான் உன்னை பார்க்காத மாதிரி நடிச்சேன்... இல்லைனா எனக்கு நீ கிடைச்சிருப்பியா...?"
"அதனாலதான் சொன்னேன் நீங்க சரியான கேடின்னு..... சரி.. சரி.. பேசியே நேரத்தை கடத்தாம சீக்கிறம் போய் பல்ல விளக்கிட்டு வந்து காப்பிய குடிங்க.. ஆபிசுக்கு கிளம்பனும்ல..." என்றுவிட்டு அறையைவிட்டு வெளியேற... சிவா பாத்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டான்..
காலை பத்துமணி... அவளை நேற்று சந்தித்த அதே.. இடத்தில் பைக்கை ஸ்டாண்டிச்சு நின்று கொண்டிருந்தான் கார்த்திக்.... நேரம்தான் சென்றதே ஒழிய அவள் வந்தபாடில்லை...
"சே... நேத்து நாம யோசிக்காம அப்படி பேசிருந்திருக்கக் கூடாது... சொன்ன மாதிரியே.. வரமாட்டேங்கிறாளே... இந்த சென்னை சிட்டிக்குள்ள..அவளை எங்க போய் தேடுறது..." என யோசித்தபடியே... நின்றிருந்தான்.. அடுத்த நாளும் இதே நிலை தொடர்ந்தது... சோர்ந்து போய், மதியம் போல் வீட்டைச் சென்றடைந்தான்... பைக்கை போர்டிக்கோவில் நிப்பாட்டியவன்.. சோர்வான முகத்தோடு உள்ளே நுழைய... அவனது அப்பா மானிக்கமோ புன்னகையுடன் வரவேற்றார்...
"வாடா... அப்பு... வா... உனக்காகத்தான் இத்தனை நேரம் காத்திருந்தேன்..."
"என்னப்பா.. என்ன விசயம்...."
"இப்படி வந்து உட்காரு சொல்றேன்..." என்றபடி தள்ளி உட்கார்ந்து அவனுக்கு சோபாவில் இடம் கொடுக்க...
"அப்படி என்னப்பா... முக்கியமான விசயம்..." எனக் கேட்க.. அவன் முன்னே இரண்டு கவர்களை காண்பித்தார்...
"என்னப்பா கவர் இது ரெண்டும்...?" என்றான் அசுவாரஸ்யமாக...
"பிரிச்சுப் பாரு..." என்றபடி புன்னகையுடன் முதல் கவரை கொடுத்தார்... அதை வாங்கி பிரிக்க உள்ளே... ஆபர் லெட்டர்... கம்பெனியில் இருந்து வந்திருந்தது.. மேலோட்டமாக வாசித்துப் பார்க்க... உடனே வேலையில் ஜாயின் பன்னிக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்திருந்தது... தன் மகனை மகிழ்ச்சி பொங்க பார்த்தவர்...
"எனக்கு சந்தோசமா இருக்கு அப்பு... இனிமேல் என்னோடையே... ஊர்ல இருந்து வேலைக்கு போகப் போறேல்ல... இந்தா இந்த கவரையும் பிரிச்சு பாரு..." என்றார்
"அது என்ன கவர்ப்பா...."
"பிரிச்சுப் பாரு...." என்றவரின் முகத்தில் மகிழ்ச்சி வழிந்தோடியது....
அவன் பிரித்துப் பார்க்க... பூக்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் ஒரு பெண் பொன்நகையோடு புன்னகை செய்துகொண்டிருந்தாள்...
"அப்பா... யாருப்பா.. இந்த பொண்ணு..."
"உனக்கு பார்த்திருக்குற பொண்ணு அப்பு...."
"அப்பா... என்னப்பா சொல்றீங்க..?" என்றான் அதிர்ச்சியோடு...
"ஆமாம் அப்பு... நான்தான் நம்ம அட்வகேட் சந்திரசேகர் கிட்ட உன்னோட போட்டோ கொடுத்து சொல்லி வச்சேன்.. அவர் ஒரு தரகர அனுப்பி வச்சாரு.... இப்பதான் கொஞ்ச நேரம் முன்னாடி அந்த தரகர் வந்துட்டு போனாரு... ஏதோ அவசர வேலை போல.. விழுந்தடிச்சி ஓடுறாரு..."எனச் சிரித்தவர்...
"என்ன அப்பு... பொண்ணை பிடிச்சிருக்கா... பொண்ணு பேரு ஏதோ ஒரு.... ஹ்ம்ம்..ஞாபகம் வந்திருச்சு... பொண்ணு பேரு. அஞ்சலியாம்... சாப்ட்வேர் இஞ்சினியராம்..."
"அப்பா என்னப்பா.. இதெல்லாம்....இப்பதானேப்பா... எல்லாம் ஓஞ்சு போய் நிம்மதியா இருக்கேன் அதுக்குள்ளயும் ஆரம்பிச்சிட்டீங்களேப்பா..."
"என்ன அப்பு இப்படி சொல்ற.... நீ என்ன சின்ன பையனா... 26 வயசு ஆகுதுள்ள...? இப்படியே இருந்தா சரிபடாது அப்பு... அதான் உடனே பார்க்க சொன்னேன்..."என்றவரை யோசனையோடு பார்த்தான் கார்த்திக்...
இவரிடம் சொல்லலாமா..? வேண்டாமா...? அவ வேற காதல்னாலே வெறுப்புல திரியிரா.. எப்படியும்..அவளை லவ் பன்ன வைக்க குறைஞ்சது ஒரு வருசம் கூட ஆகலாம்... அப்பாகிட்ட காதலைப் பத்தி சொன்னா உடனே.. நடக்கனும்னு நினைப்பாறே...?... எது எப்படியோ... ஆண்டவன் நினைக்கிறதுதான் நடக்கும் அதை மீறி யாராலும் அதை தடுக்க முடியாது... அவ எனக்கு கிடைக்கனும்னு இருந்தா கண்டிப்பா கிடைப்பா... என்று நினைத்தவன்..
"அப்பா நான் கொஞ்ச யோசிக்கனும்...."
"நல்லா யோசிப்பா...ரெண்டு நாளுக்குள்ள பொண்ணு வீட்டுக் காரங்க போன் பன்றேன்னு சொல்லிருக்காங்க
"ஹ்ம்ம் சரிப்பா என்றவன்..." தனது அறைக்குள் சென்று பெட்டில் விழுந்தான்...
அடுத்த நாளும்.. காம்ப்ளெக்சின் வாசலில் வாட்ச் மேன் போல் காத்திருக்க.... கார்த்திக்கிற்கு அன்று அதிர்ஸ்டம் அடித்தது... ஆம் அவள் தனது தோழியுடன் ஸ்கூட்டியில் வந்திறங்கினாள்... ஸ்கூட்டர் சத்தம் கேட்டு அசட்டையாக நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் பல்ப் எரிந்தது...
இவன் நிற்ப்பதை அவளும் பார்த்துவிட்டாள்... இவனைப் பார்த்துவிட்டு... தனது தோழியிடம் மெதுவாகச் சொன்னாள்..
"ஹேய்... இங்க வேணாம்டி... வேற எடத்துக்கு போகலாம்..."
"ஏண்டி...."
"சொன்னா கேளுடி.. ஏன்னுலாம் கேட்காத... வேற காம்பளெக்சுக்கு போகலாம்..."
"என்னடி... எப்பவுமே...இங்கதானே... வருவோம்... இப்ப என்னடி புதுசா...?"
"இப்ப போகமுடியுமா... இல்லை நான் இறங்கி பஸ்ல போகட்டா..." எனக் கத்த...
"ஆ..... ஏண்டி கத்துற... போய் தொலையுறேன் உக்கார்ந்துத் தொலை...."என பதிலுக்கு கத்தியவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்..
இருவரும் உள்ளே வருவார்கள்... என எண்ணியவணுக்கு ஏமாற்றமாக இருக்க.... இவனும் அவசர அவசரமாக வண்டியை ஸ்டார்ட் செய்து... பின் தொடர ஆரம்பித்தான்.... சிறிது தூரம் சென்றதும் வண்டி நின்றது... இவனும் நிப்பாட்டினான்...
வண்டியில் இருந்து இறங்கியவள்.... இவன் வண்டியை நோக்கி வேகமாக நடந்து வந்தாள்... வந்த வேகத்தில்... "உங்களுக்கு இப்ப என்ன வேணும்.... ஏன் பின்னாடியே... வர்ரீங்க.."
"அது...அது... அன்னைக்கு நான் அப்படி பேசிருக்கக் கூடாது.. சாரி..."
"அதெல்லாம் அன்னைக்கே நான் மறந்துட்டேன் போதுமா... எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு... இதுக்கு இடைல உங்களை எல்லாம் என்னால நியாபகம் வச்சிட்டு இருக்க முடியாது... நீங்க என் பின்னால வர்றதால உங்களுக்கு டைம்தான் வேஸ்டு... வேற ஏதாவது உருப்படியான வேலையைப் பாருங்க... திரும்பவும் பின்னாலயே வந்தீங்கன்னா... நான் போலிஸ்கிட்ட போக வேண்டி இருக்கும்..." என படபடவென பேசியவள்... வேகமாகச் சென்று ஸ்கூட்டியில் ஏறிக் கொள்ள... வண்டி புறப்பட்டது....
இதுக்கெல்லாம் பயந்தா... அப்பறம் லவ் பன்ன முடியாது... என நினைத்தவன்... மீண்டும் அவர்களை பின் தொடர...அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்களின் ஸ்கூட்டி நின்றது... அவர்களுக்கு முப்பது அடிக்கு பின்னே சரக் கென்று பிரேக் அடித்து நின்றவன்.. அதிர்ந்து போனான்.... அந்த போலிஸ் ஸ்டேசன் வாசலில் நின்றிருந்தது.. ஸ்கூட்டி...
"அடிப்பாதகத்தி.... சும்மா மெரட்டுறேன்னுல நினைச்சேன்...." என என்னியபடி நிற்க்க... அவள் இவனை திரும்பி பார்த்து நக்கலாக புன்னகைத்துவிட்டு... போலிஸ் ஸ்டேசனை நோக்கி நடக்க ஆரம்பிக்க...
"ஆள விட்றா சாமி..." என்றபடி.... பைக்கை உதைத்து... யூட்டேர்ன் அடித்து மின்னல் வேகத்தில் பறந்தான் கார்த்திக்..
அடுத்த நாள் காலை வேலையில் ஜாயின் செய்திருந்தான் கார்ட்திக்... ப்ராஜெக்ட் மேனேஜரிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு... தனது டீம் மெம்பர்களிடம் பரஸ் பரம் அறிமுகமாகிக் கொண்டான்... முன் அனுபவம் இருந்ததால்.. வேலை ஒன்றும் அவனுக்கு பெரிய சவாலாகத் தெரியவில்லை.. கொடுக்கப்பட்ட.. வேலையை எப்படி எல்லாம் திறம்பட செய்யலாம் என திட்டமிட்டு... இதை இப்படி செய்யலாம்... அதை அப்படி செய்தால் நன்றாக வரும்.... என தனது ஐடியக்களைச் சொல்லி பாராட்டும் பெற்றுக் கொண்டான்.. வேலையில் சேர்ந்த ஒரே நாளில் டீமில் இருந்த அனைவருக்கும் அவனைப் பிடித்துப் போனது...
வேலை பிசியில் அவளை தற்காலிகமாக மறந்திருந்தான்.... அன்று மாலை வீட்டிற்கு கிளம்பினான்... கம்பெனி ஐந்தாவது மாடியில் இருந்ததால்... லிப்டில்தான் செல்ல வேண்டும்... லிப்டை நோக்கி நடந்தவனின் செல்போன் கதறியது...
"ஹ்ம்ம் சொல்லுங்கப்பா...."
"அப்பு... பொண்ணு வீட்டுக் காரங்க இன்னைக்கே வரச் சொல்லிட்டாங்கப்பா... கொஞ்சம் சீக்கிறம் வந்தேன்னா..... இன்னைக்கே போய் பார்த்திட்டு வந்திடலாம்பா...என்ன சொல்ற..."
என்ன சொல்றது என யோசித்தான் கார்த்திக்.... அவ வேற... போலிஸ் ஸ்டேசனுக்கே போயிட்டா... இவளை லவ் பன்ன வைக்க முடியுமான்னு இப்ப எனக்கே சந்தேகமா இருக்கு.... சரி.. ஆசை பட்டது கிடைக்கலைனா என்ன பன்றது.... கிடைக்கிறதை ஆசைப் பட்டு ஏத்துக்க வேண்டியதான்... என ஒரு முடிவுக்கு வந்திருக்க..
"அப்பு.... என்னப்பா.. பேச்சையே.. காணோம்.... என்ன சொல்ற... சீக்கிறம் வந்திடுறியாப்பா..."
"ஹ்ம்ம் சரிப்பா.... இதோ கிளம்பிட்டேன்... உடனே கிளம்பி வர்றேன்..." என்றபடி போனை அனைத்தவன்... லிப்டிற்குள் நுழைந்து தரை தளத்தின் பட்டனை தட்டினான்.. மூட ஆரம்பித்த கதவு அதே வேகத்தில் மீண்டும் திறந்துக் கொண்டது...
வேகமாக உள்ளே நுழைந்த அந்த பெண் நச்சென்று.... கார்த்திக்கின் தலையில் முட்டினாள்....
"ஹேய்.... பார்த்து வரமாட்ட..." எனச் சொல்லி முடித்து அவன் வாயை மூடவே இல்லை....
அவள் நின்றிருந்தாள்... அந்த தேவதை.... தன் தலையை தேய்த்துக் கொண்டவள்... "சாரி சார்..." என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தாள்...
"நீ... நீங்களா....?" என அவள் கேட்க
"நீயா....?"என அவன் கேட்டான்
"ஹேய்.... கவி... நில்லுடி... நானும் வரேன்..."என்றபடி அவளது தோழியும் ஓடி வந்து சேர்ந்துக் கொண்டாள்... இருவரும் அதிர்ச்சி விலகாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க... கவியின் தோழி இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தரைதளத்தின் பட்டனை தட்டினாள்....
ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு.... கேட்டான் கார்த்திக்..
"நீ இங்கே.. எப்படி..?"
"அது இருக்கட்டும்... நீங்க எங்க இங்க...?"
"நான் இன்னைக்குதான் இங்க ஜாயின் பன்னேன்...."
"நாங்க ரெண்டு பேரும் இங்கதான் ரெண்டு வருசமா வொர்க் பன்றொம்..." பதில் சொன்னது அந்த தேவதையின்... தோழி...
"ஏன்... நீ பதில் சொல்ல மாட்டியா... உனக்கு என்ன அவ சப்சிட்யூட்டா...?"
"உங்ககிட்ட நான் ஏன் பேசனும்...." விட்டேற்றியாக பதில் சொன்னாள் அவள்...
அவன் அதற்கு பதில் சொல்வதற்குள்... தரை தளம் வந்திருந்தது...
அவர்கள் இருவரும் வெளியேற.. இவனும் பின்னேச் சென்றான்....
இருவரும் வேகமாக ஸ்கூட்டியை நோக்கி நடக்க..
"ஹலோ... கவி எச்சூஸ்மி...."
இருவரும் ஒரு சேர திரும்பி பார்க்க....
"நான்தான் சொன்னேன்ல... உனக்கும் எனக்கும் ஒரு வயர்லெஸ் கனக்சென் இருக்குன்னு... பாரு.. ஆண்டவன் திரும்பவும் உன்னை பார்க்க வச்சிருக்கான்... இனி என் பார்வை உன்னை நோக்கித்தான் இருக்கும்..."எனச் சொல்ல..
அவள் முறைத்துக் கொண்டு நிற்க..
"ஹலோ...கவி... உன் பேரு என்னான்னு தெரிஞ்சுக்கலாமா....?"
"இவ பேரு கவிதா.... என் பேரு புனிதா.... என்ன மேன்... போதுமா..?" என்றாள் அவளது தோழி...
"ஹ்ம்ம் போதும் தேங்ஸ்......" என்றான் புன்னகையுடன்....
ஸ்கூட்டியில் இருவரும் சென்றுவிட...
கார்த்திக்கின் மனதில் நம்பிக்கைச் சிறகுகள்... முளைக்க ஆரம்பித்து பறக்க ஆரம்பித்தது.....
"மாட்டிக்கிட்டியா... என் கவிதாயினி.... போறேன்... போய்... பொண்ணை பிடிக்கலைன்னு சொல்லிட்டு நாளைக்கு வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்..." என எண்ணியவன் பைக்கை கிளப்பி உற்சாகத்துடன் வீட்டிற்குச் சென்றான்...
வீட்டில் வேலைக்காரர்கள் எல்லாம் புதுத் துணி உடுத்தி அப்பாவுடன் ரெடியாகக் காத்திருக்க... அடுத்த இருபது நிமிடத்தில் கார் அந்த சுமாரான பங்களாவின் வாசலில் தஞ்சம் புகுந்தது...
வாசலில் இவர்களுக்காகவே காத்திருந்தது போல் நின்றிருந்தார் பெண்ணின் அப்பா... அவர் அனைவரையும் வரவேற்று ஹாலில் உட்கார வைத்தார்...
வெள்ளை சட்டையும்.. கருப்பு நிற கால்சட்டையும் அனிந்திருந்த கார்த்திக் தனக்கான நேரம் எப்பொழுது வரும்... பெண்ணிடம் தனியாக பேசி.. தன் நிலையை எடுத்துக் கூறி புரியவைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கையிலேயேதான்.... பெண்ணை அழைத்து வந்தார்கள்...
பொண்ணு இதாம்பா.... போட்டோல பார்த்துருப்பீங்க... நேர்லயும் ஒரு தடவ பார்த்துக் கோங்க.... என பொண்ணோட அப்பா... சொல்ல...
கார்த்திக் நிமிர்ந்து பார்த்து இன்ப அதிர்ச்சியை உள் வாங்கினான்... கவி பெண்ணாக நின்றுகொண்டிருந்தாள்... கையில் காப்பி ட்ரேயோடு.. கார்த்தி சுக அதிர்விலிருந்து மீண்டு வந்த அடுத்த நொடி அவளும் நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தாள்...
"நீயா...?"என அவன் மனதிற்குள் கேட்க...
"நீங்களா....?"என அவளும் மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்...
தொடரும்...


Comments
Post a Comment
உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்