காதல் வழி(லி) -1

காதல் வழி(லி) -1



அடையாரில் அமைந்திருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிட்டில் மவுண்டில்  கார்த்திக்கும் கயல் என்கிற கயல்விழியும் எதிரெதிரே அமர்ந்திருக்க... அயல் நாட்டு மெல்லிய இசை அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. கார்த்திக் நீல நிற டீ-சர்டும் ஜீன்சும் அனிந்திருந்தான் கண்களில் கூலிங் கிளாஸ்.. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த கயல் கருப்பு நிறச் சுடிதாரில் வெள்ளை நிற தேவதையாகத் தெரிந்தாள்.

அங்கு நிலவிய நீண்ட நேர மவுனத்தை களைத்தது கார்த்திக் தான்....

"என்ன கயல்...? தனியா பேசனும்னு வரச்சொல்லிட்டு இப்ப அமைதியா இருக்க... என்ன மேட்டர்...?" என்றவனை ஒருவித தயக்கத்தோடு பார்த்தவள்...

"அதுவந்து.... அதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெர்ல.... நீ எப்படி நினைப்பியோன்னு தெர்ல... அதான் தயக்கமா இருக்கு..."

"என்ன கயல் எதாச்சும் பிராப்ளமா...? என் ஹெல்ப் வேணுமா....? தயங்காம கேளு கயல் என் பிரண்ட் உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு பன்ன போறேன்...."

"அது வந்து... பிராப்ளம்லாம் ஒன்னும் இல்லை கார்த்திக்...."

"அப்றம் என்ன சொல்லு கயல்...நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்..... நான் உன்கிட்ட அப்படியா பழகிட்டு இருக்கேன்.... எந்த விசயமா இருந்தாலும் உன்கிட்டதானே நான் முதல்ல சொல்றேன்... நீ என்கிட்ட சொல்றதுக்கு என்ன தயக்கம்... சும்மா சொல்லு கயல்..." என்றவுடன் கயல் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்... டேபிளில் இருந்த நீரை எடுத்து உதட்டில் பொருத்தி குடித்துக் கொண்டாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் போல் கார்த்திக்கின் கண்களை  கூர்மையாகப் பார்த்துக் கொண்டாள்.

"கார்த்திக்... நேத்து ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனப்ப எனக்கு ஒரு சாக்...."

"என்னது சாக்கா... அய்யய்யோ... உனக்கு எதுவும் ஆகலையே...?"

"இல்லை கார்த்திக் இது கரண்ட் சாக் இல்லை...."

"அப்றம்..."

"என்னை பெண் பார்க்க வந்திருந்தாங்க....அப்பதான்..." என அவள் பேசி முடிப்பதற்க்குள்..

" ஓஹ்... நைஸ்....கங்கிராஜுலேசன்...  இதை சொல்லத்தான் இவ்வளவு யோசிச்சியா... அப்றம் எப்ப மேரேஜ்...? டேட்லாம் பிக்ஸ் பனியாச்சா...?"

"ஹய்யோ கார்த்திக் ப்ளீஸ்... என்னை பேசவிடு..." என்றவளை கேள்விக் குறியோடு பார்த்தவன்...

"ஹ்ம்ம் சரி பேசு..." என்றுவிட்டு அமைதியானான்...


"நேத்து என்னை பெண் பார்க்க வந்திருந்தாங்க.... அப்பதான் நான் ரியலைஸ் பன்னேன்..." 


"என்ன ரியலைஸ் பன்ன...?" ஆர்வத்தோடு கேட்டான் கார்த்திக்...


"என்னால வேற யாரையும் மேரேஜ் பன்னிக்க முடியாது.... ஐ திங்க்... ஐயாம் இன் லவ் வித் யூ கார்த்திக்...." தான் சொல்ல வந்ததை கடைசியில் சொல்லி முடித்துவிட்டு அவனது பதிலை எதிர்பார்த்த வண்ணம் ஆர்வத்தோடு அமர்ந்திருந்தாள்.

கார்த்திக் நீரை எடுத்து குடித்துவிட்டு கர்சீப் கொண்டு துடைத்துக் கொண்டான்.. எதுவும் பேசாமல் கயலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்...

"கார்த்திக்...ஏன் அமைதியா இருக்க...? நான் சொன்னதுக்கு எதாவது பதில் சொல்லு..."

அவனிடம் மீண்டும் அமைதி...

"ப்ளீஸ் கார்த்திக் எதாவது பேசு..." அவனைத் தூண்டினாள் கயல் அவஸ்தையோடு....

"உன்கிட்ட ஒரு பேப்பரும் பேனாவும் இருக்குமா...?"

"எதுக்கு...."

"இருந்தா கொடு  என்னோட பதில அதுல சொல்றேன்..." என்றதும் தனது ஹேண்ட் பேக்கை எடுத்து ஒரு ஒயிட் பேப்பரையும் பேனாவையும் வேகமாக கொடுத்தாள் கயல்....

வாங்கிய கார்த்திக் ஒயிட் பேப்பரை இரண்டாகக் கிழித்து இரண்டு பேப்பரிலும் எதையோ எழுதி மடித்து டேபிளில் தூக்கிப் போட்டான்.. கார்த்திக் செய்பவற்றை ஆர்வத்தோடும் குழப்பத்தோடும் கயல் பார்த்துக் கொண்டிருக்க.

"ஹ்ம்ம்... இந்த ரெண்டு சீட்டுல.... எதாவது ஒன்னை எடுத்து என்கிட்ட கொடு...." என்றுவிட்டு  அவன் அவளைப் பார்க்க...

"வாட் இஸ் திஸ்....? கார்த்திக்...!! இது லைப் மேட்டர்... இது சீட்டு குழுக்கி போட்டு முடிவு செய்ற விசயம் இல்ல..."

"பேசாம ரெண்டு சீட்ல ஒன்னு எடுத்துக் கொடு...."என்று அவன் சொல்ல...

அவள் நெஞ்சில் பயத்தோடு ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் வாங்கி படித்தவன்...

"வாவ்... யூ ஆர் லக்கி...."

"வாவ்... ரியல்லி..."

"யெஸ்... யு ஆர் லக்கி..." என்றபடி அந்த சீட்டை அவளிடம் கொடுக்க அவள் வங்கி பார்க்க..

அதில் நெட் பேங்கிங்க் யூசர் நேம் அண்ட் பாஸ்வேர்ட் இருந்தது.

"என்ன கார்த்திக் இது... நான் சொன்னதுக்கு பதில் சொல்லுவேன்னு பார்த்தால்... பேப்பர்ல நெட் பேங்கிங்க் க்ரெடென்சியல்ஸை எழுதிவச்சிட்டு.... யூ ஆர் லக்கினு சொல்ற...எனக்கு புரியல..."

"ஆமாம்... ஒரு சீட்ல டெபிட் கார்ட் பாஸ்வேர்டும்... இன்னொரு சீட்ல நெட் பேங்க் க்ரெடென்சியல்ஸும் எழுதி வச்சிருந்தேன்... டெபிட் கார்ட் பாஸ்வேர்ட் வந்திருந்தா... இன்ணைக்கு ஒரு நாளைக்கு 40000 மட்டும்தான் எடுக்க முடியும்... பட் உனக்கு வந்தது நெட் பேங்கிங்க் ஆச்சே உனக்கு இஸ்டபட்ட அமவுண்டை நீ ட்ரான்சாக்சன் பன்னிக்கலாம்... அதான் யூ ஆர் லக்கினு சொன்னேன்..."

"நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியல கார்த்திக்... நான் சொன்னதுக்கு பதில் சொல்லாம நீ என்னென்னவோ சொல்ற..."

"நீ சொன்னதுக்குதான் பதில் சொல்லிருக்கேன்... லவ்வுனு சொல்லிகிட்டு எப்படியும் கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட பணத்தை பிடுங்கலாம்னு திட்டம் போட்டுட்ட... அதான் நான் ஒரே பேமெண்ட் ல முடிச்சிடலாம்னு பாக்குறேன்.... என் மனசு காயப்படாமலாவது இருக்கும்..."

கார்த்திக்கின் பதிலைக் கேட்டு கொதித்தெழுந்தாள் கயல்... " வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்... கார்த்திக்... உன்னை நான் எவ்ளோ லவ் பன்றேன் தெரியுமா...? என்னோட தூய்மையான காதலை இப்படி கொச்சைப்படுத்திட்டியே கார்த்திக்... ச்சை... உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர் பார்க்கலை..."

"ஹேய்... போதும்டி உங்க நடிப்பு எல்லாம்...? நான் எல்லா நேரமும் ஏமாந்திட்டு இருக்க மாட்டேன்... உன் மேல பிரண்டுங்கிற மரியாதை இருந்துச்சு.... என்னை லவ் பன்றேன்னு சொல்லி அந்த மரியாதையை கெடுத்துக்கிட்ட..."

"ச்சை... உன்னை எல்லாம் நல்லவன்னு நம்பி லவ் பன்னேன் பாரு என்னை சொல்லனும்....கெட் லாஸ்ட்..." என்றபடி டேபிளில் இருந்த க்ளாசை எடுத்து தண்ணீரை கார்த்திக்கின் முகத்தில் அடித்துவிட்டு கோபத்துடன் வேகமாக அந்த இடத்தை காலி செய்தாள் கயல்.                 --காதல் வழி(லி) தொடரும்






















Comments

Popular posts from this blog

தி ப்ரேகப் (The Breakup)

அவள் ஒரு தேவதை-6

ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு