அவள் ஒரு தேவதை - 7
அவள் ஒரு தேவதை - 7
கவியின் நெஞ்சில் "ராஜேஷ்" என்று பச்சை குத்தப்பட்டு இருக்க.... அதைக் கண்டவன் இடிந்து போனான் என்றுதான் சொல்லவேண்டும்... அவன் இதயத்தை யாரோ இரும்பு கம்பி கொண்டு தாக்குவது போல் உணர்ந்தான்... அவனுக்கு பேச்சு வரவில்லை... ரொம்பவும் பலகீனமாய் உணர்ந்தான்.. ஆற்றாமையால் ஆத்திரம் வர கத்தினான்...
"லவ் பன்றேன்னா... லவ் பன்றேன்னு முன்னாடியே சொல்லித் தொலைய வேண்டியதானே.... உன் மேல அவ்வளவு லவ் அவ்வளவு கனவு, அவ்வளவு ஆசை வளர்த்துக்கிட்டதுக்கு அப்பறம் வந்து வேற ஒருத்தன லவ் பன்றேன்னு சொல்றியேடி... என்னைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா..."
"என்னை என்ன பன்ன சொல்றீங்க கார்த்திக்....? ரீசன் கேக்குற எல்லாத்துக்கும் என் நெஞ்சை திறந்து காட்டிட்டு இருக்க முடியுமா சொல்லுங்க...?"
"உன்னை யாரு அதெல்லாம் காட்ட சொன்னது... அந்த ராஜேஷை கூட்டிட்டு போய் அப்பாகிட்ட இவரைத்தான் லவ் பன்றேன்... மேரேஜ்னு ஒன்னு நடந்தா அது ராஜேஷ் கூடத்தான்னு சொல்ல வேண்டியதானே..." என்றவனை இயலாமையுடன் பார்த்தாள் கவி
கவியின் கண்களில் நீர்துளிகள் எட்டிப் பார்க்க.. " எப்படி நான் சொல்லுவேன் கார்த்திக்.... எனக்குதான் ராஜேஷ் யாருன்னே தெரியாதே..."
"என்ன சொல்ற கவி... நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியல..."
"எனக்கும் கூடத்தான் புரியல கார்த்திக்... அந்த ராஜேஷ் யாரு...? எங்க இருக்கான்..? எப்படி இருப்பான்..? எதுவுமே எனக்குத் தெரியாது..."
"என்ன கவி...? பைத்தியம் மாதிரி உளற்ற..."
"ஆமாம் கார்த்திக் நான் பைத்தியம் தான்.... ஒரு வருசமா பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்லதான் இருந்தேன்..." குண்டுக்கு மேல் குண்டைத் தூக்கிப் போட்டாள் கவி.
"என்ன கவி சொல்ற.. மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருந்தியா...?"
"ஆமாம்..."
"எனக்கு ஒன்னுமே புரியல கவி... லவ் பன்றேன்னு சொல்ற... அவனை யார் எப்படி இருப்பான் எதுவும் தெரியாதுன்னு சொல்ற.... போதாததுக்கு மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்னு வேற சொல்ற..."
"அதான் சொல்றேன் கார்த்திக்.... எனக்கே என்ன நடந்ததுன்னு எதுவும் புரியல... தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.... நான் உங்களுக்கு வேண்டாம்... இந்த அதிர்ஸ்டம் கெட்டவ உங்களுக்கு வேண்டாம்...."
"அதுக்காக உன்னை அப்படியே விட்டுட முடியுமா..... அந்த ராஜேஷ் உன்னை உன்மையா லவ் பன்னிருந்தா உன்னை இப்படி விட்டுட்டு போய் இருப்பானா...? அப்படி எல்லாம் உன்னை விட்டுட்டு என்னால போக முடியாது கவி.... இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ... நீ எனக்கு இல்லைன்னா... நான் என் உயிர விட்றுவேன் கவி.."
"ப்ளீஸ் கார்த்திக்... ஏன் இப்படி பேசிப் பேசி என்னை கொல்றீங்க... என்னால உங்கள ஏத்துக்க முடியாது கார்திக் அதை முதல்ல நீங்க புரிஞ்சு கோங்க.."
"ஏன் கவி என்னை ஏத்துக்க முடியாது... என்னைதான் உனக்கு பிடிச்சிருக்கே அப்றம் என்ன?"
"நாந்தான் என் மனசை இன்னொருத்தன்கிட்ட அடகு வெச்சிட்டேனே கார்த்திக்..."
"என்ன கவி லூசு மாதிரி பேசுற... அவன் உனக்கு யாருன்னே தெரியாது... எப்படி இருப்பான்னும் தெரியாது.. அப்றம் எப்படி இன்னும் அவனை உன்னால லவ் பன்ன முடியும் சொல்லு..."
"ஒரு நாள் எனக்கு எல்லாமே ஞாபகம் வந்துடுச்சுன்னா அப்பறம் நான் என்ன பன்னுவேன் கார்த்திக்...ஹ்ம்ம் சொல்லுங்க"

"அப்படி ஞாபகம் வந்தாலும் அவந்தான் உன்னை விட்டு போய்ட்டானே கவி.... அவன் திரும்பி வருவான்னு என்ன நிச்சயம்... நீ அடகு வச்ச உன் மனசை நான் மீட்டு எடுக்குறேன் கவி.."
"சரி இப்ப நான் உங்களை மேரேஜ் பன்னிக்கிறேன்னு வைங்க... மேரேஜ் கு அப்பறம் அவன் வந்தான்னா என்ன பன்னுவீங்க கார்த்திக்..."
"மேரேஜ்கு அப்பறம் வந்தா அது அவனோட தப்பு...." என்றுவிட்டு சில நொடிகள் யோசித்துவிட்டுச் சொன்னான்...
"ஒன்னு பன்னலாம்.... நாம மேரேஜ் பன்னிக்க போற விசயத்தை எல்லா நியூஸ் பேப்பர்லயும் போடலாம்... அதைப் பார்த்துட்டு மேரேஜ்கு முன்னாடியே அவன் உன்கிட்ட வந்துட்டான்னு வச்சுக்க... நானே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்... நீ என்ன சொல்ற..."
கவிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..... அமைதியாக நின்றிருக்க..
அவள் அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டான்.. " சரி நாளைக்கு மேரேஜ் டேட்டை பிக்ஸ் பன்னி நியூஸ் கொடுக்கச் சொல்லிடுறேன்.. இப்ப நீ வீட்டுக்கு கிளம்பு டைம் ஆச்சு... இந்தா உன்னோட ஸ்கூட்டர் கீ.." என்றபடி சாவியை கொடுத்தான்..
அவள் எதுவும் சொல்லவில்லை அவன் கொடுத்த கீயை அமைதியாக வாங்கிக் கொண்டு ஒரு சில நொடிகள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், பின்பு பார்க்கிங்க் ஏரியாவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கார்த்திக்கின் மனதுதான் ரொம்பவும் கனத்துபோய் கிடந்தது... தான் காதலிக்கும் பெண் வேறு ஒருவனின் பெயரை தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறாள் என நினைக்குபொழுதே மனம் வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தது...
இனி எதுவும் நம் கையில் இல்லை... இறைவன் ஒருவன் இருக்கிறான்... எது நடக்க இருக்குதோ நடக்கட்டும் என நினைத்தபடி கனத்த மனதுடன் வீட்டை நோக்கிப் பயணித்தான்.
சிவா லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு மும்முறமாக வேலை செய்து கொண்டு இருந்தான்.
"என்னங்க பன்னிட்டு இருக்கீங்க..." என்றபடி அவன் அருகே வந்து நின்றாள் சித்ரா.
"இந்த மாட்யூலை இன்னைக்கு டெலிவரி பன்னி ஆகனும்னு சொல்லிட்டாங்க... அதான் வொர்க் பன்னிட்டு இருக்கேன்..."
"சரி இந்த பாலை குடிச்சிட்டு வேலை செய்ங்க..." என்றதும்தான் லேப்டாப்பில் இருந்து நிமிர்ந்து பார்த்தவன் அசந்து போனான்.
சித்ரா குளித்து முடித்து தலையில் மல்லிகைப்பூ வைத்திருக்க முகம் பால் நிலா போல் பளிச்சென்று இருந்தது, அன்றுதான் பூத்த புது மலராய் நின்றிருந்தாள்.
அவன் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க...
"என்ன பாக்குறீங்க... பால குடிச்சிட்டு வேலைய பாருங்க..."எனச் சொல்லி முடிக்கும் முன் சிவா எழுந்து கொண்டான்....
எழுந்தவன் லேப்டாப்பையும் சித்ராவையும் மாறி மாறி பார்த்தான்.... "சித்ராவா..? லேப்டாப்பா...? வந்த வேலையா...? சொந்த வேலையா...? சோறா சொரனையா...?" என்று வடிவேலு போல் எண்ணியவன்..
"சோறுதான்" என்ற முடிவுடன் சித்ராவை நெருங்கினான்.
"என்ன சிவா.. ஒரு மாதிரியா பாக்குறீங்க..."
அவன் பேசவில்லை.... தான் நினைத்தவற்றை செயலில் காட்ட நினைத்துக் கொண்டே சித்ராவை நெருங்கியவன் அவளது இடுப்பில் கைபோட்டு தான்னிடம் இழுத்துக் கொண்டான். அவளது பட்டு மேனியை தொட்டனைத்தான்.
அவன் இழுத்த வேகத்தில் அவளது கையில் இருந்த பால் சொம்பு தவறி கீழே விழுந்து உருண்டோட.. அதை எல்லாம் கவனிக்கும் நிலையை சிவா கடந்திருந்தான்..
அவளை அனைத்தவாறு பெட்டில் விழுந்தான்... ஆரம்பத்தில் மிரண்டவள் போக போக அவனது உடல் நசுங்களில் கிரங்கிப் போய் கண் மூடி அவன் செய்பவற்றை இரசிக்க ஆரம்பித்தாள்... அவள் காகித உடலில் புதுக்கவிதைகள் பல எழுதிக் கொண்டிருந்தான் சிவா.... அவள் உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்து விடுபட முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி அவன் எழுதிய புதுக்கவிதைகளை வாசித்தபடி படுத்திருந்தாள். அவள் மீதிருந்து வந்த வாசனை சிவாவை பைத்தியம் பிடிக்க வைத்தது... இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அனைத்தால் அவளது எழும்பு உடைந்து விடுமோ என்ற அளவிற்க்கு இருக்கி இருந்தான் சிவா..
அவளது உடல் வலித்தாலும் அந்த அனைப்பு வேண்டும் போல் இருந்தது... எனவே அவள் அமைதியாக கிடக்க... சிவா அவளிடம் புதைந்திருக்கும் புதையலை தேடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் தேடியும் புதையல் கிடைக்கவில்லை.... மீண்டும் மீண்டும் தேடி தேடி அவளிடம் தோற்றுப் போனான் ஆனால் சலிக்கவில்லை. சோர்ந்து போனவன் அவள் மேல் விழுந்து அவளது களைந்த கூந்தலுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
கூந்தலில் கசங்கி இருந்த மல்லிகைப்பூ வாசனையும்.. சாம்பின் மணமும்... அவனது உணர்வுகளைத் தூண்டியது... மீண்டும் அவளிடம் புதையலை தேட ஆரம்பித்தான்... சித்ரா கண்கள் சொருகி போய் கிடந்தாள்... சிவா மீண்டும் சோர்ந்து விழுந்தான். சித்ரா அதீத உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தாள் அவனது நெற்றியில் ஆசையாக பல முத்தங்கள் தந்துவிட்டு அவனைக் கட்டிக் கொண்டாள்.
இருவரும் பேசிக் கொள்ளவில்லை.... அவர்களது உதடுகள் மட்டுமே ஒன்றுகொன்று பேசிக் கொண்டன.
தங்களது உடல் சூட்டினை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்... வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்துவிடாதா என்ற ஏக்கம் உண்டானது இருவருக்கும். அன்றைய இரவு தூங்கா இரவானது.
கார்த்திக்கும் தூங்காமல் மனதில் கனத்துடன் படுத்துக் கிடந்தான்... தான் காதலிக்கும் பெண் வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்ற நினைப்பே அவனது மனதில் வலியை ஏற்படுத்தியது.... அவள் இல்லாமல் போனால் நான் என்ன செய்வேன்... என்னால் அவளை பிரிந்து வாழ இயலுமா... என்னால் உயிர் வாழத்தான் முடியுமா....? என எண்ணற்ற கேள்விகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு கிடந்தான்... கார்த்திக்கும் அன்றைய இரவு தூங்கா இரவானது.
அடுத்த நாளே கார்த்திக் தன் அப்பாவிடம் பேசி கல்யாணத் தேதியை முடிவு செய்து நியூஸ் பேப்பரிலும் வெளி வந்திருந்தது.... கார்த்திக் ஒரு புறம் பயத்துடன் இருக்க... மறுபுறம் கல்யாண வேலைகள்.. தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது... நியூஸை பார்த்துவிட்டு ராஜேஷ் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்ற பயத்துடனே கார்த்திக் கல்யாண வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தான்....கவி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை... நடப்பது நடக்கட்டும் என்ற மன நிலையில் இருந்தாள்..
கல்யாணத் தேதியும் வந்தது... கல்யாணச் செய்தி நியூஸ் பேப்பரில் வந்திருந்ததால் தெரிந்தவர்கள் உறவினர்கள் என நிறைய பேர் வருவார்கள் என்பதால் பெரிய திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்..
கல்யாண நேரம் நெருங்க நெருங்க.... கார்த்திக்கின் மனம்... தவியாய் தவித்துக் கொண்டிருந்தது... மண்டபத்திற்குள் புதிதாக நுழைபர்களை கண்டு அச்சத்தில் இருந்தான்... ராஜேஷ் வந்துவிடப்போகிறான் என்று. ஆனால் அவன் வருவதுபோல் தெரியவில்லை.... முகூர்த்த நேரம் நெருகியது. கவிதாவும் அழைத்து வரப்பட்டாள்..
சிகப்பு நிறச்சேலையில்... அவளது இயற்கையழகோடு கொஞ்சம் செயற்கை அழகையும் சேர்த்திருக்க கவி ஒரு தேவதை போல் இருந்தாள்... ஆனால் கார்த்திக்தான் அவளை இரசிக்கும் மன நிலையில் இல்லை... அவ்வப் பொழுது பயத்தோடு வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தான்...சுற்றி நிற்கும் சுற்றத்தார்கள் யாரும் கண்ணிற்கு படவில்லை.... வாசலை மட்டும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க.... அவன் எதிர்பார்த்தது போல்....
ஒருவன் பல்சர் பைக்கை மண்டபத்திற்குள் வேகமாக ஓட்டி வந்து சரகென்று ப்ரேக் அடித்து நிப்பாட்டினான்...
............தொடரும்.

Bro when will give next update
ReplyDeletesoon bro
Delete