உன்னில் உயிர்ப்பேன்










அடுப்படியில் சமையலில் ஈடுபட்டிருந்த மஞ்சரி என்கிற மஞ்சு.  செல்போன் சத்தம் கேட்டு தனது நிறைமாத வயிற்றை சுமந்தபடி இடுப்பில் கைவைத்து தாங்கியபடி வெளியே வந்து காலை எடுக்க.. மறுமுனையில் இருந்து முத்தத்தின் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டது.

மஞ்சரி யின் மஞ்சள் முகம் குங்குமமாய் சிவந்து போனது.

சில நொடிகள் ரசித்தவள்... போதும் போதும் இந்த முத்தத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...

என்னடி பிடிக்காத மாதிரி சலிச்சிக்கிற...
.
ஹ்ம்ம் போங்க.... உங்களுக்குத்தான் என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல....

என்னடி இப்படி சொல்லிட்ட... என் உசுரே நீயும் உன் வயித்துல இருக்க நம்ம குழந்தையும்தான் என் கண்மணி.

இப்படி சொல்லியே என்னை சமாதானம் பன்னிடலாம்னு நினைக்காதீங்க... எனக்கு இப்ப உங்க கூட இருக்கனும்.. உங்க நெஞ்சுல சாஞ்சுக்கனும்னு எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா..?

எனக்கு மட்டும் உன்னை பிரிஞ்சு இருக்கனும் னு ஆசையா என்ன..?

எனக்கும் உன்னை பார்க்கனும் என் செல்ல பொண்டாட்டிய கொஞ்சனும் முத்தம் கொடுக்கனும்.. இப்படி பல ஆசைகள் எனக்குள்ள இருக்கு என் கண்மணி... ஆனால் என்ன பன்றது... நாம எல்லோரும் நல்லா இருக்கனும் னு தானே வேலைக்கு வந்துருக்கேன்... ஆங்.. அப்பறம் சொல்ல மறந்துட்டேன்.. மேலிடத்துல லீவ் கேட்டிருந்தேன்.. இன்னும் இரண்டு நாள்ல நான் உன் பக்கத்துல இருப்பேன்..

ஹை.. அப்படியா... உன்மையாவா...?

ஆமாம்டி என் மோகனக்காவியமே...

பொய் சொல்லல...

பொய் சொல்லலைடி.. நம்ம பையன் மேல சத்தியமா சொல்றேன். 

ஹ்ம்ம் அப்ப சரி..

அப்பறம் பையன் என்ன சொல்றான்.

அதை நீங்களே உங்க பையன் கிட்ட கேளுங்க.... என்றுவிட்டு போனை தன் வயிற்றில் வைக்க..

கண்ணா அப்பா பேசுறேன்டா.. எப்படி கண்ணா இருக்க.... இன்னும் இரண்டு நாள்தான்.. அப்பறம் அப்பா உன் பக்கத்துல இருப்பேன் சரியா.. அதுவரை அம்மாவ கஷ்டப்படுத்தாம அமைதியா இருக்கனும் சரியா...

ஹ்ம்ம் போதும் போதும்.. உங்க உபதேசம்...
அடுப்படில பானை பொங்கிட போகுது... நேரமாச்சு...

ஹ்ம்ம் சரிடா செல்லம்... நானும் வேலைக்கு கிளம்பிட்டேன் வண்டில போய் ட்டு இருக்கேன்... சீயூ.. ப்ச்சு... முத்தம் ஒன்றை கொடுத்தவன்

போனை வைப்பதற்குள்... அவன் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது.

எதிர் முனையில் இருந்து வந்த பயங்கரச் சத்தம் தன் கணவனின் நிலையின் தீவிரத்தை காட்டியது.
பிடிமானம் ஏதும் இல்லாத நிலையில் என்னங்க...... என்று கத்திகொண்டே கீழே விழுந்தாள்.

ஹாஸ்பிடலில் படுத்திருந்தாள் மஞ்சரி அருகே... தான் ஈன்றெடுத்த மகன் ரூபத்தில் தன் கணவன் கிடந்தான்.

குழந்தையை அள்ளி அனைத்தவள்.... உன் தகப்பனை போல் உன்னையும் ஒரு இராணுவ வீரனாக மாற்றுவேன் என்று தன் மனதில் உறுதி கொண்டாள்.

" உயிர்  தியாகம் செய்த இராணுவ வீரர்கள் இம்மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்படுகிறார்கள்."

உன்னில் உயிர்ப்பேன் மீண்டும் ஒரு இராணுவ வீரன் ஆக.....

Comments

Post a Comment

உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்

Popular posts from this blog

தி ப்ரேகப் (The Breakup)

அவள் ஒரு தேவதை-6

ஓடிப்போலாமா….?---24-இறுதிப் பதிவு